Sunday, June 30, 2013

என் கவிதை

எனக்கான வார்த்தைகளைப் போட்டு
சமைத்துக் கொண்டிருக்கிறேன்
ஒரு கவி
விரைவில்
உங்களுக்கும் பரிமாறுவேன்
அது என் சுவை
பழகிய ருசி
தொன்று தொட்டு ஒரே சேர்மானம்
சமைக்கும் போது சுவைப்பதில்லை
அதில்
இரண்டு கல் உப்பு அதிகமிருக்கலாம்
நான்கு சிட்டிகை இனிப்பு
குறைத்துப் போட்டிருக்கலாம்
புளிப்போ கசப்போ
ஏதோவொன்று தூக்கலாய் இருக்கலாம்
உவகை மேவிய உவர்ப்புமிருக்கலாம்
அனுமானங்களெல்லாம்
’....லாம்’ களாய் முடிந்தாலும்
அதுயெனக்கு மனவலிக் கசாயம்
விரும்பினால் பருகுங்கள்
வேண்டாமெனில்
நாளையின் இரவுக்கென நான் அதை சேமிப்பேன்

1 comment:

மதி said...

அருமையான கவிதை ... எழுதுவோரின் மனநிலையை மிகத் துல்லியமாய்ச் சொல்லிவிட்டீர்கள்

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!