Saturday, December 26, 2009

பல மாதங்களுக்கு பிறகு, மீண்டும் வலையுலகம் பக்கம்!

வாசித்து செல்லலாம் என தொடங்கியதில், கலவையான அனுபவங்கள்! மனதை தொட்ட சில இடுகைகளில் முதன்மையான இரண்டு,

1.செந்த‌ழ‌லாரின் கார்த்திக் அம்மா
2.க‌ல‌க‌ல‌ப்பிரியாவின் திலிப‌னின் நினைவு கூற‌ல்

பொதுவாக‌,சோக‌மான‌ நிக‌ழ்வுக‌ள் ம‌ன‌தில் ப‌திவ‌தோடு அல்லாம‌ல் சொல்ல‌ப்ப‌டும் ந‌ப‌ரின் பாதிப்பின் அள‌வு ந‌ம‌க்குள் ப‌திவ‌து த‌விர்க்க‌ இய‌லாத‌ ஒன்று. செந்த‌ழ‌லாரின் இடுகை ப‌டித்த‌ பிற‌கு, கார்த்திக் அம்மாவைப் ப‌ற்றி விஜ‌ய‌ ந‌க‌ர‌ம் வ‌லைப்ப‌திவில் தெரிந்து கொண்டேன்! ‌முன்னிர‌வில் ப‌டிக்க‌ ஆர‌ம்பித்தேன்! விடியும் வ‌ரை விடாது தொட‌ர்ந்தேன்! காலப் ப‌ருந்திட‌ம் தோற்றுப்போன‌ ஒரு கோழியின் ப‌ரித‌விப்பு க‌ண்டேன் அவ‌ரிட‌ம்!ம‌டிந்த‌து எப்ப‌டி மீளும்? அறிவாளிக‌ள் கேட்க‌ கூடும்! நேர்ம‌றையான‌ எண்ண‌ங்க‌ளுக்கு இட‌ம் தராதீர்! ம‌னவ‌ள‌‌மிக்க‌வ‌ர்க‌ள் சொல்ல‌க்கூடும்! தாய்மையின் த‌விப்பு யாதென‌ எவ‌ருக்கு புரியும்? இவ‌ருக்கு ம‌ற‌தி எனும் வ‌ர‌த்தை கட‌வுள் அருளக் கூடாதா?
வேத‌னையோடு என‌க்குள்ளும் எழுந்து ம‌டியும் சில‌ க‌ச‌ப்பான‌ நினைவுக‌ளுக்கு முற்று புள்ளியிடும் முய‌ற்சியாக‌ க‌ல‌க‌ல‌ப்பிரியாவிட‌ம் போனால் க‌ல‌க‌ல‌ப்புக்கு ப‌தில் க‌ண்ணீர‌ஞ்ச‌லி.அமில‌த்தில் மிதக்கும் அஹிம்சை காந்தி. அர‌க்க‌னிட‌ம் அஹிம்சை கேட்டால் அவ‌னின் ப‌தில் ம‌ரியாதை!உண்ணா விர‌த‌மிருந்து உயிர் துற‌ந்த‌ ஒரு கொள்கை வீரனின் உட‌ல் அமில‌தின் ஆளுமையிலா?இதுவரை எனக்கு தெரியாத செய்தி!க‌ட்டுக்க‌ட‌ங்காத‌ கண்ணீர்.ஈழத்தில் தீவிர வாதம் தவறெனச் சொல்லும் ஒரு சாரார் உணரட்டும் கொளகைகள் எதிரியின் ப‌ண்பாட்டை பொருத்தமட்டில் வெற்றி பெறும்! உத்தம தியாகியின் நினைவு நாள்.எப்ப‌டி ம‌ற‌ந்தோம்? த‌மிழ‌னின் மற‌தி சில‌ நேரங்களில் சாப‌ம். சில‌ அர‌சிய‌ல் முத‌லைக‌ளின் அடித்த‌ள‌மிது!

எதுவாகிலும் ப‌திவுல‌க‌ம் ந‌ல்ல‌ ஆரோக்கிய‌மானதொரு ந‌ண்ப‌ர் வ‌ட்ட‌ம்! நானும் அதில் அட‌க்க‌ம் என்ப‌தில் ம‌கிழ்வே!!ப‌கிர்தலும் புரித‌லும் இய‌ல்பாய் ...

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!