எண்ணம் இடுதிரியோ
எரியும் சுடர் தான்
என் கவியோ?!
*****
சலங்கையிலிருந்து உதிர்ந்த
தனியொரு முத்துக்கும்
குலுங்கிச் சிரிக்கும் திறனுண்டு
*****
சொல்லாமல் வந்துவிட்டேன்
மயிற்கற்றைச் சுருளை அலுத்தபடி
பெருக்கித் தள்ளும் நாளில்
நினைத்துக் கொள்வாயா அம்மா?
*****
வாய்க்கூடணிந்த கன்றொன்று
மண் தின்பதற்கென்று அலைவுறுகிறது...
*****
தூக்கத்தில் சிரிக்கும் குழந்தை
கடவுளுடனான சினேகத்தில்
மகிழ்கிறது
*****
நூறு சதவீதம் நிரம்பிய குளமும்
காற்றுக் குமிழிகளைத் துப்பியபடியிருக்கிறது....
*****
இரண்டாம் யாமத்தில்
வானக் குளத்து நிலா
பூமியில் மிதந்தபடியிருக்கிறது
*****
நிகழ் இரவில்
நிழல் தேடி...
தீபங்களேந்தியபடி
நகர்கிறதந்த நிஜம்
*****
எரியும் சுடர் தான்
என் கவியோ?!
*****
சலங்கையிலிருந்து உதிர்ந்த
தனியொரு முத்துக்கும்
குலுங்கிச் சிரிக்கும் திறனுண்டு
*****
சொல்லாமல் வந்துவிட்டேன்
மயிற்கற்றைச் சுருளை அலுத்தபடி
பெருக்கித் தள்ளும் நாளில்
நினைத்துக் கொள்வாயா அம்மா?
*****
வாய்க்கூடணிந்த கன்றொன்று
மண் தின்பதற்கென்று அலைவுறுகிறது...
*****
தூக்கத்தில் சிரிக்கும் குழந்தை
கடவுளுடனான சினேகத்தில்
மகிழ்கிறது
*****
நூறு சதவீதம் நிரம்பிய குளமும்
காற்றுக் குமிழிகளைத் துப்பியபடியிருக்கிறது....
*****
இரண்டாம் யாமத்தில்
வானக் குளத்து நிலா
பூமியில் மிதந்தபடியிருக்கிறது
*****
நிகழ் இரவில்
நிழல் தேடி...
தீபங்களேந்தியபடி
நகர்கிறதந்த நிஜம்
*****
1 comment:
நான் மிகுந்த எதேச்சையாக தங்களின் ப்ளாக்கை படிக்க நேர்ந்தது இம்மாதிரியான நிகழ்வுகள் நேர்த்தியாக அமைவது அபூர்வம் தங்களின் படைப்புகளை போன்று தங்கள் எழுத்து கூர்வாள் அன்று உண்மையின் மென்மையான் தேடல்கள்
இங்கனம் பி டி ராஜன்
Post a Comment