Wednesday, July 10, 2013

மோனலிசா

பௌர்ணமி கிரணங்கள்
யன்னலிறங்கும் தேவநேரம்
அணுக்கமாய் குழலிசை
இகரக்குறுக்கத்தில் ஏற்றிய சிறுகவி
புரவி பறக்கும் பாதை
படையல் புசிக்கும் யாளி
கோதூளி அடங்கிய கொட்டில்
பதுமை பரமன்
தண்டையதிரும் மென்னடை
மெல்ல ஒடுங்கிச் சேரும் திண்புயம்
திருமண் சுமந்த குழவியதன் கையில்
திடுமென அசையும் உடுக்கை
தூரத்தே எரியும் உடலம்
நுதல் மினுங்கும் வைரத்துளி
அதிர்ந்து இமை திறக்கையில்
சிவப்புச் சுவரில்
மௌனமாய் சிரிக்கும் மோனலிசா

1 comment:

மதி said...

நல்ல வார்த்தைப் பிரயோகம் .. ஒரு காட்சியை நீங்கள் சித்தரித்த விதம் அருமை

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!