Sunday, December 2, 2012

நோய்க்கூறு#3



சௌஜன்யமாய் பழகத் தெரியவில்லை
முகஸ்துதியாய் பேசத் தெரியவில்லை
புறம் பேச கேட்க பிடிப்பதேயில்லை
ஆதாயத்தோடு எவரையும் அனுகப்பிடிக்கவில்லை
என்னுள் ஆதாயம் தேடுமெவரையும் அனுமதிப்பதில்லை
அதீத அன்பில் குழைவதும்
கண்ணுக்குத் தெரியாத அடக்குமுறைகளில்
சிக்கித் திணருவதும்
எப்போதும் உவப்பில்லை
நடக்கும் பாதையில்
எவரோடும் மோதாமல்
சிரித்த முகத்தோடு எம்மிடம்
சேர்வதே இயல்பென்றாயிருக்கிறது
என் சுதந்திரம் என்னுடன் இருக்கிறது
இதைப் படிக்கும் நீங்களெனக்கு
தாந்தோன்றியென்று பெயரிட்டால்
என் இதழிடையில் இன்னுமொரு புன்னகை பூக்கும்
மனநோயாளியென்றால் புன்னகை
சிரிப்பாய் மாறவும் வாய்ப்பிருக்கிறது...

4 comments:

நிலாமகள் said...

நல்லாத்தான் இருக்கீங்க.

கவியாழி said...

இன்றுள்ள நிலைமை எல்லோருமே அப்படித்தான் இருக்க வேண்டியுள்ளது

Gk Matters said...

சௌஜன்யமாய் பழகத் தெரியவில்லை
முகஸ்துதியாய் பேசத் தெரியவில்லை
புறம் பேச கேட்க பிடிப்பதேயில்லை
ஆதாயத்தோடு எவரையும் அனுகப்பிடிக்கவில்லை
--- இந்த வரிகள் மிகவும் பிடித்துள்ளது.

கலாகுமரன் said...

//என் சுதந்திரம் என்னுடன் இருக்கிறது// கட்டற்ற வெளி திறந்தே இருக்கிறது

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!