வண்ணத்து பூச்சி !
கூட்டுப் புழுவின்
பொறுமை.....
பரிணமிக்கும் வரை
எல்லா உயிருக்கும்
காத்திருத்தல்
சாத்தியம்
இயற்கையில் ....
ஆனால் மானுடம்
மட்டும்
விதிவிலக்காய்!!!
தூசு படுமுன்
இமை காக்கிறது
கண்மணியை ...
அனிச்சையாய்
எழும்பும்
தற்காப்பு கூட
ஏன்
எழுவதில்லை
இதயம் களவு போகயில்...
2 comments:
போகையில்...
நல்ல தமிழோடு பேச்சு வழக்கு தமிழையும் கலந்தா எப்படி இருக்கும்? ஒரு சின்ன முயற்சி!
Post a Comment