சன்னலோர முல்லைச்செடி
சலசலக்கும் தென்னங்கீற்று!
இரவு நேர தென்றல்
இளகிய வெண் பாகாய்
தண்ணிலவு!
நடுநிசியில்
கடிகார மணியோசை!
வண்டுகளின் ரீங்காரம்
இரவல் மடியாய்...
உன்னைக் காட்டும்
தலையணை!
இத்தனையும்
நேற்று வரை
உண்டென்றாலும்...
நீயின்றி
என்னுள்
எல்லாமும்
அந்நியமாய்....
3 comments:
//சப்த்திக்கும் //
ஒற்று மிகாது! சப்தமிடும் தென்னங்கீற்று!!
அட ஆமாம் வாத்தியாரே! பிழைதான் மன்னிச்சுடுங்கோ!
ரொம்ப பெருமையா இருக்கு நீங்க என்னோட படைப்புகளை பார்வையிடுவது!
இவ்வளவு உன்னிப்பாய் கவனிப்பீங்கன்னு தெரியல! தெரிந்திருந்தா முன்னமே ஒரு முன்னோட்டம் விட்டிருப்பேன்!இத்தனை பொறுமைசாலியா நீங்க? என்னோட புலம்பல ஒரே நாள்ல் படிச்ச உங்களுக்கு சாதனை நாயகன் விருது தர முன்மொழியிறேனுங்கோ!
மிக்கநன்றி பழமைபேசி!
Post a Comment