நெருப்பெனச் சொன்னாய் என்னை கர்வத்தில்
நெஞ்சினை நிமிர்த்திக் கொண்டேன் -நீ
பெண்மையை மதிப்பதாய் எனக்குள் ஒருமுறை
பெருமையாய் எழுதிக் கொண்டேன்
இரும்பாய் இருந்த என்னை அன்பில்
இளக்கியே இயந்திரம் செய்தாய்- உன்னால்
இயந்திரமான பின்னே இதயத்தின் செல்லிலெல்லாம்
இயக்கியாய் உனையே இறுக்கி இணைத்துக்கொண்டேன்!
உலகமே நீதானென்று உனக்குள்ளே சுருங்கிப் போனேன்
உனையின்றி யாருமில்லை உள்ளத்துக்கு கட்டளையிட்டேன்!
உறவுகள் வேண்டாமென்றும் எதிர்காலம் நீதானென்றும்
உறுதியாய் நிற்பதை உனக்குச் சாதகமாக்கிக் கொண்டாய்!
தனிமையில் பேசிப் பேசி - எந்தன்
தவிப்பிற்கு மருந்து போட்டாய்! - உண்மையில்
அன்பின் அரவணைப்பு அதுதானென்று உனக்குள்
ஆசையாய் அடங்கிப் போனேன்!
நிலையின்றி அலைந்த மனம் அது
நிலைகொள்ளும் புள்ளி நீயென, உன்னை
கருத்தினில் புகுத்திக் கொண்டேன் -பதிலாய்
கனவுகள் பரிசாய் பெற்றேன்
நிலவரம் புரிந்த பின்னே எனக்குள் நீ
நீசனாய் மாறிப் போனாய் - காதலின்
காரணம் தெரிந்த பின்னே எனக்குள் நீ
புயலாய் மையம் கொண்டாய்
பகைவனின் பெண் நான் என்றாய்
பழிவாங்க வந்ததாய் சொன்னாய் - உன்
பாசத்திற்கு ஏங்கி நானோ காதல்
படுகுழியில் விழுந்து விட்டேன்
காரணம் நிறையச் சொன்னாய் என்மீது
காதலேயில்லை காமமே உச்சமென்று
கர்வமாய் கத்திச் சொன்னாய்
நிம்மதி கொல்லும் நெருப்பெனச் சொன்னாய்
இம்முறை முற்றிலும் நீர்த்துப் போனேன்.
நியமத்தின் பேரில் வந்து என்னை
நிலையின்றி செய்து போனாய்
யாரிடம் கேள்வி கேட்பேன்
என்னுள் எதற்கு நீ நுழைந்தாய் என
யாரிடம் கேள்வி கேட்பேன்?
ஒருதுளி கண்ணீரில்லை மீதம்
ஓய்வின்றி அழுத மனது
ஒப்புக்கு சிரித்து பழக ...
உள்ளுக்குள் நானோ உணர்ச்சிகளற்று
பாறையாய் மாறிப்போனேன்....
ஏமாற்றம் எஞ்சி நின்று என்னை
இளப்பமாய் பார்த்த வேளை - உன்னை
மனதினில் நிறைத்துக் கொண்டேன் - செந்தணலாய்
மறுபடியும் பிறவி எடுத்தேன்
சாம்பலாய் அழிவேனென்று சத்தமாய் சபதமிட்டாய்
சாம்பலாய் முடியமாட்டேன் சரித்திரம் படைப்பேனென்று
சன்னமாய் சொல்லிக் கொண்டேன் சித்தத்தில்
சாதனை மட்டும் கொண்டு
என்னை நான் எனக்குள் காண
எதிரி நீ துணையாய் நின்றாய்
ஆசையாய் மையம் கொண்டு
ஆர்வமாய் கலந்து பேசி
அடிக்கடி ஆழம் பார்த்து
அசந்த நேரம் பார்த்து
ஆலகால விசமாய் மாறி
அவசரமாய் கரையைக் கடந்தாய்....
இழப்புகள் அதிகமெனினும் அதை
நான் இன்பமாய் கணக்கெடுத்தேன்
சேமித்து வைக்க அல்ல
செப்பனிட்டுக் கொள்ள .....
இலக்கணம் பிழையே இல்லை என்னுள்
இலக்கணம் பிறழவே இல்லை - நீயென்
இலக்காய் ஆனதே பிழையெனக் கண்டேன்....
மீண்டும் நெருப்பாய் பிறப்பெடுத்தேன்.....
குறிப்பு :-
மக்கா டமீல் படக் கதையானு கேள்வி கேக்கப் படாது!! ஆமா சொல்லிட்டேன்.... சும்மா ஒரு முயற்சி ... அவ்வளவுதேன் சொல்லிப்புட்டேன்! !!
நெஞ்சினை நிமிர்த்திக் கொண்டேன் -நீ
பெண்மையை மதிப்பதாய் எனக்குள் ஒருமுறை
பெருமையாய் எழுதிக் கொண்டேன்
இரும்பாய் இருந்த என்னை அன்பில்
இளக்கியே இயந்திரம் செய்தாய்- உன்னால்
இயந்திரமான பின்னே இதயத்தின் செல்லிலெல்லாம்
இயக்கியாய் உனையே இறுக்கி இணைத்துக்கொண்டேன்!
உலகமே நீதானென்று உனக்குள்ளே சுருங்கிப் போனேன்
உனையின்றி யாருமில்லை உள்ளத்துக்கு கட்டளையிட்டேன்!
உறவுகள் வேண்டாமென்றும் எதிர்காலம் நீதானென்றும்
உறுதியாய் நிற்பதை உனக்குச் சாதகமாக்கிக் கொண்டாய்!
தனிமையில் பேசிப் பேசி - எந்தன்
தவிப்பிற்கு மருந்து போட்டாய்! - உண்மையில்
அன்பின் அரவணைப்பு அதுதானென்று உனக்குள்
ஆசையாய் அடங்கிப் போனேன்!
நிலையின்றி அலைந்த மனம் அது
நிலைகொள்ளும் புள்ளி நீயென, உன்னை
கருத்தினில் புகுத்திக் கொண்டேன் -பதிலாய்
கனவுகள் பரிசாய் பெற்றேன்
நிலவரம் புரிந்த பின்னே எனக்குள் நீ
நீசனாய் மாறிப் போனாய் - காதலின்
காரணம் தெரிந்த பின்னே எனக்குள் நீ
புயலாய் மையம் கொண்டாய்
பகைவனின் பெண் நான் என்றாய்
பழிவாங்க வந்ததாய் சொன்னாய் - உன்
பாசத்திற்கு ஏங்கி நானோ காதல்
படுகுழியில் விழுந்து விட்டேன்
காரணம் நிறையச் சொன்னாய் என்மீது
காதலேயில்லை காமமே உச்சமென்று
கர்வமாய் கத்திச் சொன்னாய்
நிம்மதி கொல்லும் நெருப்பெனச் சொன்னாய்
இம்முறை முற்றிலும் நீர்த்துப் போனேன்.
நியமத்தின் பேரில் வந்து என்னை
நிலையின்றி செய்து போனாய்
யாரிடம் கேள்வி கேட்பேன்
என்னுள் எதற்கு நீ நுழைந்தாய் என
யாரிடம் கேள்வி கேட்பேன்?
ஒருதுளி கண்ணீரில்லை மீதம்
ஓய்வின்றி அழுத மனது
ஒப்புக்கு சிரித்து பழக ...
உள்ளுக்குள் நானோ உணர்ச்சிகளற்று
பாறையாய் மாறிப்போனேன்....
ஏமாற்றம் எஞ்சி நின்று என்னை
இளப்பமாய் பார்த்த வேளை - உன்னை
மனதினில் நிறைத்துக் கொண்டேன் - செந்தணலாய்
மறுபடியும் பிறவி எடுத்தேன்
சாம்பலாய் அழிவேனென்று சத்தமாய் சபதமிட்டாய்
சாம்பலாய் முடியமாட்டேன் சரித்திரம் படைப்பேனென்று
சன்னமாய் சொல்லிக் கொண்டேன் சித்தத்தில்
சாதனை மட்டும் கொண்டு
என்னை நான் எனக்குள் காண
எதிரி நீ துணையாய் நின்றாய்
ஆசையாய் மையம் கொண்டு
ஆர்வமாய் கலந்து பேசி
அடிக்கடி ஆழம் பார்த்து
அசந்த நேரம் பார்த்து
ஆலகால விசமாய் மாறி
அவசரமாய் கரையைக் கடந்தாய்....
இழப்புகள் அதிகமெனினும் அதை
நான் இன்பமாய் கணக்கெடுத்தேன்
சேமித்து வைக்க அல்ல
செப்பனிட்டுக் கொள்ள .....
இலக்கணம் பிழையே இல்லை என்னுள்
இலக்கணம் பிறழவே இல்லை - நீயென்
இலக்காய் ஆனதே பிழையெனக் கண்டேன்....
மீண்டும் நெருப்பாய் பிறப்பெடுத்தேன்.....
குறிப்பு :-
மக்கா டமீல் படக் கதையானு கேள்வி கேக்கப் படாது!! ஆமா சொல்லிட்டேன்.... சும்மா ஒரு முயற்சி ... அவ்வளவுதேன் சொல்லிப்புட்டேன்! !!
7 comments:
கதை நல்லாருக்கு(!) :-)
அடேயப்பா......
உள்ளுக்குள்ள ஒரு அரசியலே இருக்கு...
இந்த டமீல் பட கதைய என்னோட ஓஓ.... தயாரிப்பு நிறுவனத்துல படம் எடுத்துடலாம்....
கதை
திரைக்கதை
கவிதை
கயல்..... (முடியல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் )
மொத்ததுல ரொம்ப நல்லா இருக்கு....
நன்றி
தென்னவன் ராமலிங்கம்.
மிகவும் நன்றாக..(பொய்)... நன்றாக இருந்தது(உண்மை)
தமிழ் நதியாய் ஓடக் கண்டேன்
குமுறல்கள் பீறிடக் கண்டேன்
ஊசிகள் தைக்கக் கண்டேன்
உண்மை உரைக்கக் கண்டேன்
வாழ்த்துகள்!
//பழமைபேசி said...
தமிழ் நதியாய் ஓடக் கண்டேன்
குமுறல்கள் பீறிடக் கண்டேன்
ஊசிகள் தைக்கக் கண்டேன்
உண்மை உரைக்கக் கண்டேன்
வாழ்த்துகள்!
//
கவிதைக்கு பின்னூட்டம் ஒரு கவிதையா? நெகிழ்வாயிருந்தது!
வருகைக்கு நன்றி!
//
தண்டோரா said...
மிகவும் நன்றாக..(பொய்)... நன்றாக இருந்தது(உண்மை)
//
வருகைக்கு நன்றி!
Post a Comment