Wednesday, March 18, 2009

"திருமணம் ஒரு சிறுகுறிப்பு "

இருமனம் இணைவதல்ல
திருமணம் !
திருமண சந்தையில்......
தட்சணையாய்
சில லகரங்கள் !
புன்னகைக்கு பதில்
பொன்னகை !
ஒவ்வொரு மாதமும்
முதல் தேதி வரும்படி
சமர்ப்பிப்பு - என
எல்லா ஒப்பந்தமும்
ஈடேறி நிச்சயித்த
ஒருவனுடன்
திருமணம் (!)
பாமரராய்
பெண்ணின் பெற்றோர் !!

பணம் வாழும்
போதும் வாழ்க்கைக்கு
பிறகும் -என்னும்
எதிர்கால் நோக்கத்தொடு.....

சாதித்த தெளிவோடு
மணமகன் வீட்டார் !!

ஆனால் படித்திருந்தும்
சமுதாய கோட்பாடுகளுக்கிடையில்
பலியாடாய் மணமகள் .....

சொர்க்கத்தில் அல்ல
திருமணங்கள் ரொக்கத்தில்
நிச்சயிக்கபடுகின்றன!!!
உலக மயமாக்கல் ,
சந்தை சீரழிவு,
பன்னாட்டு சந்தை சரிவு - என
எல்லாமும் புரிகிறது உனக்கு !
ஏன் புரியவில்லை
என் குடும்பம்
நீ கேட்கும்
தட்சணையால்
நசிந்து
போகும் என்பதை ?

5 comments:

தென்னவன். said...

//
"திருமணம் ஒரு சிறுகுறிப்பு "
//

இது என்னவோ பெறுங்குறிப்பு மாதிரி இருக்கே

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Tamilar said...

கடைசி வரிகள் அற்புதம்

ப்ரியமுடன் வசந்த் said...

//சொர்க்கத்தில் அல்ல
திருமணங்கள் ரொக்கத்தில்
நிச்சயிக்கபடுகின்றன!!!//


#$%^&%$#&**&^%

Redmeera said...

நன்றாக எழுதி இருக்கிறீர்.

priyamudan said...

"பாமரராய்
பெண்ணின் பெற்றோர் !!"

- அல்ல மகளின் (மகிழ்ச்சியான)வாழ்க்கை கனவுகளுடன்.

- நிதர்சனமான உண்மை கவிதை, செவிமடுத்த (அ)சொந்த அனுபவங்களா

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!