Saturday, March 28, 2009

தத்துவம்-1

ந‌ட்பும் காத‌லும் இணைகோடுக‌ள்
காத‌ல் ந‌ட்பாய் மாறிய‌தென்றால்
காத‌லில் வாய்மையில்லை!
ந‌ட்பு காத‌லாய் மாறிய‌தென்றால்
நட்பில் தூய்மையில்லை!

7 comments:

கலகலப்ரியா said...

நட்பின்றிக் காதலில்லை.. காதலின்றி நட்புமில்லை சகோதரி..! :)

கயல் said...
This comment has been removed by the author.
கயல் said...

//
நட்பின்றிக் காதலில்லை.. காதலின்றி நட்புமில்லை சகோதரி..! :)
//

ந‌ட்புக்குள் காத‌லும், காத‌லுக்குள் ந‌ட்பும் ஆரோக்கிய‌ம் ம‌ற்றும் ச‌க‌ஜ‌மான‌ விச‌ய‌ம்! ஆனால் காத‌ல‌ன் ந‌ண்ப‌னாக‌ திரிப‌டைவ‌து காத‌லின் ப‌ல‌ம் ச‌ம்ம‌ந்த‌ப்ப‌ட்ட‌து! நண்ப‌ர்க‌ள் காத‌ல‌ர்க‌ளாக‌ திரிப‌டையும் போது உள்ள‌த்தோடு உட‌லும் இணைவ‌தால் ந‌ட்பு க‌ள‌ங்க‌ப்ப‌டுவ‌தாக‌ என் எண்ண‌ம்.. ஏதோ சின்ன‌ப்புள்ள‌ த‌ப்பா சொன்னா ம‌ன்னிச்சுடுங்க‌!!
நன்றி சகோதரி ! உங்கள் பதிவுக்கும் வருகைக்கும்!!

கலகலப்ரியா said...

ஹும்.. தப்பு, சரி எல்லாம் அவங்க அவங்க பார்வைலதான்.. என்னோட பார்வைல உங்க பார்வைய உணர முடியறதால என்னால இது தப்புன்னு சொல்ல முடியாது... ஆனாலும்.. இது கொஞ்சம் சிக்கல்.. நீங்க சொன்ன மாதிரி அடுத்த வாரம் மாறலாம்.. =).. காதலுக்கும் உடம்புக்கும் சம்மந்தமில்லைங்க.. இது பேசினா இழுத்துண்டே போகும்.. ஏதோ தோணினத பட்டுன்னு சொல்லிட்டேனா அவ்ளோதான்.. மத்தபடி ஹைக்கு எல்லாம் ரொம்ப அழகா சொல்றீங்க.. உங்க பணிய தொடருங்க.. நல்லா இருக்குங்க..

நாமக்கல் சிபி said...

//ந‌ட்பு காத‌லாய் மாறிய‌தென்றால்
நட்பில் தூய்மையில்லை//


இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!

சித்ரவேல் - சித்திரன் said...

காதலுக்கும் நட்புக்கும் ...நல்ல சிந்தனை நட்பே... வாழ்த்துக்கள்

Karthick33031 said...

தாழ்மையான கருத்து:

பரமனின் நீதியே
பரம நீதியாயின்
தோற்பவை வெல்பவை
பிறப்பவை இறப்பவை
மறப்பவை மறுப்பவை மறிப்பவையாவும்
பரமனின் நீதியே !

அவ்வாறு இருக்க காதலென்றும் நட்பென்றும் உழல்வதில் நியாமில்லை
ஈசன் இட்ட கணக்கு நடந்தேற
இதுவென்றும் அதுவென்றும்
வேஷமிட்டு திரிகின்றோம்

அவ்வாறு இருக்க காதலென்றும் நட்பென்றும் உழல்வதில் நியாமில்லை

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!