Saturday, January 5, 2013

கவிக் கோர்வை - 02


ஏதோவொரு மாயவட்டத்துள்
உழல்கிறேன்
என்னைச் சுற்றியுள்ள
ஆடிகளிலெல்லாம்
குறுஞ்சிரிப்போடு நீ!
கனவென்று தெரிந்தும்
படர விடுகிறேன் நம்பிக்கைகளை...
இப்போதெல்லாம்
கனவுகளுக்காகவே
உறங்கிக் கொண்டிருக்கிறேன்
அரிதாய்... மிக அரிதாய்
இமை திறக்கும் போதிலும்
முத்தமிட்டுத் தொலைக்கிறாய்
வெட்கத்தில் தானே
கனவுக்குள் நுழைகிறது நிகழ்வு

***

இறகுகளைச் சேமித்துக் கொண்டிருக்கிறேன்
வாழ்ந்தழிந்த பறவைகளின் நினைவாக...
இங்கிருந்து பறந்த ஏதோவொரு பறவைக்கும்
என்னோடான சினேகத்தின் நினைவிருக்கும்

***

தனித்து நிற்கவியலாத
தள்ளாடும் கொடிகளுண்டு
அவற்றிற்கெல்லாம்
ஆலாய்
அரசாய்
நாணலாய்...
அணைத்தபடி பூத்துக் காய்க்கிறது
காட்டுச் செடி
யாரும் யாரோடுமில்லை
யாருக்கும் யாருமில்லை
என்றாலும்
பிறப்பின் பயனாய்
சேவகம் புரியும்
பெயருடைத் தரு நான்

3 comments:

கவியாழி said...

யாரும் யாரோடுமில்லை
யாருக்கும் யாருமில்லை//
ஊருண்டு உறவுண்டு நண்பருமுண்டு

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்

நல்லவனாய் வாழ்ந்தால் நரிகளை வெல்வோமா?
வல்லவனாய் வாழ்வதே வாழ்வு!

கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு

மதி said...

கனவுக்கவிதை அற்புதமாய் இனிக்கிறது :-)

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!