Wednesday, May 15, 2013

ஆழிமுத்து

யாமக் கனவொன்றில்
ஆழி முத்தென்
அனுகூலமாகக் கண்டேன்
மூச்சடக்கி முத்துக் குளிக்கையில்
பவளப் பாறையும் பக்கமிருந்தது
இருசோடி கடற்கன்னிகள்
அபிநயங்களுக்கிடையில்
கனவில் கண்டதை நேரில் கண்டேன்
பேராசை படர்ந்த கோரமுகம் கண்டு
நெருப்பைக் கக்கிவிட்டு
நீங்கிப் போயினர்
நீர்மக் குடும்பத்தினர்
நிலவொளியில் ஒளிர்ந்ததை
தொட்டுப் பறிக்க கைகள் நீளுமுன்
இதழ் பூட்டிக் கொண்டன சிப்பிகள்
’நாளைய கனவில் வா! அபகரிக்கலாம்’
நம்பிக்கையாய் ஒலித்தது அசரிரீ
அன்று பிரிந்தது உறக்கம்
கனவுக்கென காத்திருத்தலில்
வியர்வை குடித்து விடிகிறது இரவுகள்

1 comment:

J S Gnanasekar said...

அருமை.

சில திருத்தங்கள்:
'விடிகிறது' என்பது 'விடிகின்றன' என இருக்க வேண்டும்.
'நிலவொளில்' லா? 'நிலவொளியில்' லா?

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!