Sunday, May 12, 2013

குட்டிச் சுவர்

அதோ
அந்தக் கூரையில்லாச் சுவர்களை
வழிப்பயணத்தில சந்திக்க நேர்ந்தால்
என்ன தோன்றும்?
சமூக விரோதிகளின் அடைக்கலமாக
அவசரம் தணிக்கும் ஆபத்தாண்டவனாக
சுகமளிக்கும் விலைமகளின் படுக்கையாக
என்றோ எழுதிய கிறுக்கல்களில்
வழிந்தபடியிருக்கும் காதலரின் குருதியாக
உங்கள் விருப்பம்
உண்மை எதுவெனில்
ஆட்கள் வாழத் தகுதியற்ற வீட்டில்
அணிலிரண்டு
ஆனந்தமாய் வாழத்துவங்கியிருக்கிறது
அவை குடியிருக்க
சுவர் பிளந்து வேர் பரப்பி நிற்கிறது
பச்சை இலைகளோடொரு 

அரசமரம்

1 comment:

நிலாமகள் said...

அணிலிரண்டு குடியிருக்க சுவர்பிளந்து வேர் பரப்பி நிற்கும் அரசு ...!!

வித்தியாசமானதொரு கோணம்

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!