சொற்ப வார்த்தைகளில்
சொல்ல வந்தததை
எழுதிப் போகிறேன்
விசும்பல்களையும் தேம்பல்களையும் போலவே
பரவசங்களையும் கொண்டாட்டங்களையும்
அணு அணுவாய்
எழுத்தாய் செதுக்கும் பொறுமையில்லை
நிதானிக்க நேரமின்றி
வாழ்க்கையை வாழ முற்படுகிறேன்
அனுபவங்களை எழுதுவதைக்காட்டிலும்
வாழுதல் அற்புதமில்லையா ?
ஆகவே.....
முதிர்வின் பரிணாமங்களில்
மூளை பழுத்தபின்
விசிறி இழுப்பேனோ என்னவோ
ஒற்றை வாக்கியத்தின்
ஒவ்வொரு எழுத்துக்களையும்.....
சொற்பைக்குள் துள்ளும்
கண்ணியச் சொற்களெவற்றிற்கும்
தாங்கும் கரங்களில்லை
அவை சுயம்புமல்ல
நடந்தவைகளின் தடங்கள் என்றே
மொழிதல் சாத்தியம்
குறுங்கவிதையில் சுருக்கிட்ட விசயத்தை
நீண்ட நெடுங்கவியில்
இழுத்துவிட்டால் என்னவாகிட போகிறது
என்னால் தான் என்ன செய்திட முடியும்
உன் பெருங்கவிக்கு வித்திட்ட
மீச்சிறு கவியெனதென்பதை
சத்தமில்லாமல் சந்தோஷிப்பதைத் தவிர...
புகழுடை மாபெரு மாக்கள்
நசித்த
பெருமாப்புடை பெண்பாற் கவியென்ப!
இறுமாந்தேன்
வற்றாச் சுனையென என்னுள்
வாழ்வாய் என் தமிழே!
சொல்ல வந்தததை
எழுதிப் போகிறேன்
விசும்பல்களையும் தேம்பல்களையும் போலவே
பரவசங்களையும் கொண்டாட்டங்களையும்
அணு அணுவாய்
எழுத்தாய் செதுக்கும் பொறுமையில்லை
நிதானிக்க நேரமின்றி
வாழ்க்கையை வாழ முற்படுகிறேன்
அனுபவங்களை எழுதுவதைக்காட்டிலும்
வாழுதல் அற்புதமில்லையா ?
ஆகவே.....
முதிர்வின் பரிணாமங்களில்
மூளை பழுத்தபின்
விசிறி இழுப்பேனோ என்னவோ
ஒற்றை வாக்கியத்தின்
ஒவ்வொரு எழுத்துக்களையும்.....
சொற்பைக்குள் துள்ளும்
கண்ணியச் சொற்களெவற்றிற்கும்
தாங்கும் கரங்களில்லை
அவை சுயம்புமல்ல
நடந்தவைகளின் தடங்கள் என்றே
மொழிதல் சாத்தியம்
குறுங்கவிதையில் சுருக்கிட்ட விசயத்தை
நீண்ட நெடுங்கவியில்
இழுத்துவிட்டால் என்னவாகிட போகிறது
என்னால் தான் என்ன செய்திட முடியும்
உன் பெருங்கவிக்கு வித்திட்ட
மீச்சிறு கவியெனதென்பதை
சத்தமில்லாமல் சந்தோஷிப்பதைத் தவிர...
புகழுடை மாபெரு மாக்கள்
நசித்த
பெருமாப்புடை பெண்பாற் கவியென்ப!
இறுமாந்தேன்
வற்றாச் சுனையென என்னுள்
வாழ்வாய் என் தமிழே!
1 comment:
உன் பெருங்கவிக்கு வித்திட்ட
மீச்சிறு கவியெனதென்பதை
சத்தமில்லாமல் சந்தோஷிப்பதைத் தவிர...
வற்றாச் சுனையென என்னுள்
வாழ்வாய் என் தமிழே!
நன்றாய் வந்திருக்கிறது கயல்... சொல்லும் பொருளும் வெகு சுவை.
Post a Comment