Thursday, May 16, 2013

கவிக் கோர்வை - 08


சவ்வு மிட்டாய் கடிகாரங்களில்
கற்றுக்கொண்டேன்
நேரம் தின்னுவதை....

***

பட்டை தீட்டிய
வைரங்கள் ஜொலிக்கலாம்
அவற்றுக்குத் தானே தெரியும்
உடலறுந்த வேதனை..?

***

வழித்தடங்கள் நகர்கின்றன
பயணி நான்
அசைவற்று நிற்கிறேன்

***

ஈசன் கையிலினின்று
உடைந்து நொறுங்கிய
ஒவ்வொரு சதைப் பிண்டமும்
சக்தி பீடங்....
நித்தம்
சிதறிச் சேரும்
என்னையெல்லாம்
எதில் சேர்ப்பது?

***


1 comment:

J S Gnanasekar said...

சவ்வு மிட்டாய்க் கவிதை நன்று.

ஈசன் கவிதையில் சில திருத்தங்கள்:
'பீடங்கள்' இடத்தில் 'பீடம்' இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
சதை உடைந்து நொறுங்குமா? கிழிந்து சிதறலாம்.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!