Sunday, January 24, 2010

த‌ன்னிக‌ர‌ற்ற‌ த‌லைவ‌னுக்கு அஞ்சலி

அரசியல் செய்தியா?
அசிரத்தையுடன் அலட்சியமாய்
விமர்ச்சித்த நானும்
விழிகள் விரிய
விபரம் கேட்கலானேன்
அப்பாவின் வாயிலாக!

ஆர்வம் வரக் கண்டு
அவரைப் பற்றிய
புத்தகங்களையும் செய்திகளையும்
தேடித் தேடி படிக்கலானேன்!
அதுவரையிருந்த அரசியல் குறித்த
அவநம்பிக்கைகள் அகன்று
இப்படியும் இருக்கிறாரென
நம்பிக்கை வந்தது!

காந்தீயம் என்பது குறித்த
காகித கோப்புகளின் வரிகளுக்கு
கணக்கச்சிதம்
'மார்க்கசீயம்' சுமந்த
ஜோதிபாசு அவர்கள்!

எளிமை என்பது என்ன?
தலைவன் என்பவன் யார்?
மொத்தமாய் விழுங்கும்
மேல்த்தட்டு முதலாளி
வர்க்கத்துக்குள் தொழிலாளி
தலையெடுப்பது சாத்தியமா?
மேற்படி கேள்விகளுக்கு பதிலாய்
என் தலைமுறையில்
நான் கண்டு,கேட்டு தெளிந்த
களங்கமில்லா உதாரணம்
தலைவர் ஜோதிபாசு!

'ஊருக்கு உபதேசம்
உள்ளுக்குள் உல்லாசம்'
இப்படி நடைமுறை
அரசியல் தவிர்த்து
உள்ளும் புறமும்
உயர்வாய்
கட்டமைக்கப்பட்ட
அற்புத தலைவன்!

சர்ச்சைகளின் போது
கொள்கைப் பிடிப்புடன்
அனாயசமாய் வழிநடத்தும்
சீர் மறை காத்த
செம்மல் ஜோதிபாசு!

புகழஞ்சலி வாசிப்பதில்
மட்டும் பயனேது?
உன் சீரிய வழியொற்றி
வாழ்க்கையை நயமாய்
ஒழுங்குற வளைத்து
வாழ்வதில் தானே இருக்கிறது
நீ விதைத்த கொள்கையின் பயன்?

அடக்குமுறைக்கு தலை வணங்குவதில்லை
இனியெப்போதும் என் பேனாவும் நானும்!

கொஞ்சம் அகந்தை கலந்த
வாக்கியமானலும்
என் வாழ்வின் கட்டாய
கொள்கையாக்கியிருக்கிறேன்
இவரைப் படித்து!

ஓடி ஓடி உழைத்து
இப்போது தான்
ஓய்வெடுக்கிறாய்!
துயில் கொள்!
எப்போதும் எமக்குள்
எரியும்
எம் வாழ்வு மலர‌
நீ ஏற்றி வைத்த 'செந்தீ'!

வாழ்ந்து சிறந்து உயர்ந்த
சாமான்யனின் பிரதிநிதிக்கு
செவ்வணக்கம்!


8 comments:

பழமைபேசி said...

உங்களோடு நாமும் சேர்ந்து செவ்வணக்கம்!

கயல் said...

வாங்க ஆசானே! ந‌ன்றி!

sathishsangkavi.blogspot.com said...

//ஊருக்கு உபதேசம்
உள்ளுக்குள் உல்லாசம்'
இப்படி நடைமுறை
அரசியல் தவிர்த்து
உள்ளும் புறமும்
உயர்வாய்
கட்டமைக்கப்பட்ட
அற்புத தலைவன்!//

அத்தலைவனுக்கு ஈடு இணை எனக்குத் தெரிய யாரும் இல்லை...

கயல் said...

//
Sangkavi said...
//ஊருக்கு உபதேசம்
உள்ளுக்குள் உல்லாசம்'
இப்படி நடைமுறை
அரசியல் தவிர்த்து
உள்ளும் புறமும்
உயர்வாய்
கட்டமைக்கப்பட்ட
அற்புத தலைவன்!//

அத்தலைவனுக்கு ஈடு இணை எனக்குத் தெரிய யாரும் இல்லை...

//
உண்மை!!!

கலகலப்ரியா said...

அருமை கயல்... என்னோட வணக்கமும்...

ப்ரியமுடன் வசந்த் said...

பணம் சம்பாதிப்பவர்களுக்கு மத்தியில்
மனங்களை சம்பாதித்த மனிதர்

இவரின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு வினா

வாழ்ந்தாலோ ஆண்டாலோ இவரைப்போல் இருக்கவேண்டும்...!

இப்போதைக்கு அவரோட உடம்புக்கு மட்டும் செவ்வணக்கம்...!

தாராபுரத்தான் said...

செவ்வணக்கம்!

கயல் said...

அனைவருக்கும் நன்றி தோழர்களே!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!