Tuesday, January 19, 2010

நீர் வகைப்பாடு

ப‌ல்லாயிர‌ம் அலைக‌ளை
ப‌லியாக்கிய‌ பின்னும்
கரைதொடும் முய‌ற்சியில்
'ஆழ்க‌ட‌ல்'

எவர் பேச்சும் கேளாமல்
எதிர்த்த‌வ‌ரை எள்ளியபடி
கழிமுக‌ம் காணும் வ‌ரை
க‌ட‌மையின் பிடியில்
'ஆறு'

முர‌டான கற்பாறையும்
'பாசத்தால்' வழுக்கியது!
த‌ண்ணீரின் உற்சாகத் த‌ழுவ‌லில்
'அருவி'

வ‌ட்ட‌த்துக்குள் வ‌ரைய‌றுக்க‌ப்ப‌ட்ட‌
வாட்ட‌த்தோடும் ச‌ல‌ன‌த்தோடும்
இய‌க்க‌ம் த‌விர்த்த‌ நீரின்
இன்னொரு பூகோள வடிவம்
'குட்டை'

பூமிக்குள் இழையோடும் ஈர‌த்தை
துளையிட்டு துவ‌ம்ச‌ம் செய்த ‍
மானுட‌த்தின் ம‌க‌த்தான தன்னலம்!
குற்றலைகள் ம‌ட்டும் கொண்டு
அதிராம‌ல் அலுத்த‌ப‌டி
'கிண‌று'

எல்லோர் வாழ்க்கையும்
இதில் எதோவொன்றுட‌ன்
ஒப்புமை கொண்டு....
சாத்தியமான‌தும் ச‌ரியான‌தும்
அவ‌ர‌வ‌ர் பார்வையில்!


3 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

வ‌ட்ட‌த்துக்குள் வ‌ரைய‌றுக்க‌ப்ப‌ட்ட‌
வாட்ட‌த்தோடும் ச‌ல‌ன‌த்தோடும்
இய‌க்க‌ம் த‌விர்த்த‌ நீரின்
இன்னொரு பூகோள வடிவம்
'குட்டை'//

கவிஞர் கயல்...!

//எல்லோர் வாழ்க்கையும்
இதில் எதோவொன்றுட‌ன்
ஒப்புமை கொண்டு....
சாத்தியமான‌தும் ச‌ரியான‌தும்
அவ‌ர‌வ‌ர் பார்வையில்!//

கண்டிப்பாக இயற்கையுடன் மட்டுமே ஒப்பீட்டு கொள்ளவே முடிகிறது இக்காலத்தில்
சகமனிதர்களுடன் ஒப்பீட்டு பார்க்கும் நிலை இல்லை
இன்றைய மனிதரின் குணம் பொறாமை,வயிற்றெரிச்சல்,குரூர எண்ணம் நிறைந்தே இருக்கிறபடியால் ஒப்பீடு கொண்டு பார்க்கும் நிலையில் இல்லை....

கமலேஷ் said...

ரொம்ப அழகா இருக்கு...வாழ்த்துக்கள்....

கயல் said...

//
கண்டிப்பாக இயற்கையுடன் மட்டுமே ஒப்பீட்டு கொள்ளவே முடிகிறது இக்காலத்தில்
சகமனிதர்களுடன் ஒப்பீட்டு பார்க்கும் நிலை இல்லை
இன்றைய மனிதரின் குணம் பொறாமை,வயிற்றெரிச்சல்,குரூர எண்ணம் நிறைந்தே இருக்கிறபடியால் ஒப்பீடு கொண்டு பார்க்கும் நிலையில் இல்லை....
//

ஆமாம் வசந்த்! உண்மை!உண்மை!!


நன்றி!!!

//
கமலேஷ் said...
ரொம்ப அழகா இருக்கு...வாழ்த்துக்கள்....
//
நன்றி கமலேஷ்!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!