Saturday, January 30, 2010

ஆப்ரகாம் லிங்கனும் அதிமேதாவியும்




ஒரு ஏழை விவசாயி மகனாக பிறந்து, பிற்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக உயர்ந்த ஒரு மாமனிதன் ஆப்ரகாம் லிங்கன்! பலமுறை ஜனாதிபதி தேர்தலில் தோற்றும்,அவரது விடாமுயற்சியின் பலனாக அந்த பதவியை வென்று சிறந்தவர் என்பது உலகம் அறிந்ததே! என்றென்றும் உலக வரலாற்றில் விடாமுயற்சி என்ற சொல்லின் பொருளாக லிங்கனின் பெயர் இருக்குமென்பதில் ஐயமில்லை!

ம‌க்க‌ள் பிர‌திநிதி செல்வ‌ந்த‌ர்க‌ள் ம‌த்தியிலும் ப‌ழ‌கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் அமைவ‌து ச‌க‌ஜ‌ம் தானே!பொதுவாக, மேல்த்தட்டு வர்க்கம் அடிம‌ட்ட‌த்திலிருந்து துளிர்விட‌ துடிப்ப‌வ‌னை மேலெழும்ப‌ விடாது அழுத்தி,அழிக்கப் பார்க்கும்! பார‌ம்ப‌ரிய‌ம்,அந்த‌ஸ்து,நிறம்,ம‌த‌ம்,இன‌ம்,சாதி இன்ன‌ பிற‌ கார‌ணிக‌ள் அவர்கள் பக்கம் இருக்கலாம்.தன் பெருமை குறித்து த‌ம்ப‌ட்டம் அடித்தும், 'எனக்கு நீ நிகரில்லை' என இழித்துப் பேசியும் ஒருவனின் தன்னம்பிக்கையை அசைத்துப் பார்ப்பதில் வெறி கொண்டவர்களாகவே சில மனிதர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.இது மாதிரியான ச‌ந்த‌ர்ப்ப‌ங்களை எப்படி எதிர் கொள்ள‌ வேண்டுமென்ப‌த‌ற்கு கீழ் வ‌ரும் நிக‌ழ்வு ஒரு சிறந்த முன்மாதிரி!அவ‌ர‌து வாழ்க்கையில் ந‌ட‌ந்த‌ ப‌ல‌வித‌ உருசிக‌ர ச‌ம்ப‌வ‌ங்க‌ளில் இதுவும் ஒன்று!

ஒரு பெரிய‌ செல்வ‌ந்த‌ர் தந்த‌ விருந்து ஒன்றில் லிங்க‌னும் க‌ல‌ந்து கொள்ள‌ வேண்டியிருந்த‌து.அந்த‌ செல்வ‌ந்த‌ர் நிற‌வெறிக் கொள்கை கொண்ட‌வ‌ர் என்ப‌து லிங்க‌ன் முத‌ல் அனைவ‌ரும் அறிந்த‌தே! விருந்து மிக‌வும் கோலாக‌ல‌மாக‌வும் அம‌ர்க‌ள‌மாக‌வும் ந‌ட‌ந்து கொண்டிருந்தது.ப‌ல‌ முக்கிய‌ பிர‌முக‌ர்க‌ளுட‌ன் லிங்க‌ன் உரையாடிக் கொண்டிருந்தார்.

திடீரென்று செல்வந்தர் இடைமறித்து,

"லிங்க‌ன்! ஒரு ம‌னித‌னுக்கு சராச‌ரியாக‌ கால்க‌ளின் நீள‌ம் எவ்வ‌ள‌வு இருக்க‌வேணும்?" என்றார் அறிந்து கொள்ளத் துடிக்கும் பொய்யான‌ பாவ‌னையுட‌ன்.

கேள்வியின் உட்க‌ருத்தை உண‌ர்ந்த‌ அத்த‌னை பேரும் ப‌ல‌மாக‌ சிரிக்க‌த் தொட‌ங்கின‌ராம். அதாவ‌து,லிங்க‌னின் உருவ‌ அமைப்புக் குறித்த‌ ப‌ரிகாச‌ம் அது.லிங்கன் சராசரிக்கும் சற்று அதிகமான உயரமும், கறுப்பான‌ ஒடிசலான தேக அமைப்பும் கொண்டவர். அவ‌ர‌து கால்க‌ள் ச‌ற்றே நீண்டிருக்கும்.

அத்தனை கிண்டலுக்கு மத்தியிலும் எந்த‌வித‌ ச‌ல‌ன‌முமின்றி லிங்கன்,

"பொதுவாக‌ கால்க‌ளின் நீள‌ம் இடுப்பிலிருந்து த‌ரையை தொடும் வ‌ரையில் இருந்தால் போதுமான‌து" என்றாராம்.

நகைசுவையோடு கலந்த ச‌ம‌யோஜித‌ அறிவு மட்டுமல்லாது, பிறர் கேலியையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தெளிவு கொண்டவர் அவ‌ர்.

அப்புறமென்ன ? அந்த கிண்டல் ஆசாமி விருந்து முடியும் வரையில் கப்சிப்!



6 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லதொரு சுவாரஸ்யமான பகிர்வு...

கயலு இன்னிக்கு யாரோ உங்ககிட்ட நல்லா பல்ப் வாங்கியிருக்காங்கன்னு நினைக்கிறேன்....

பழமைபேசி said...

//கயலு இன்னிக்கு யாரோ உங்ககிட்ட நல்லா பல்ப் வாங்கியிருக்காங்கன்னு நினைக்கிறேன்....//

யெப்பா, நான் இல்லன்னு நினைக்கேன்...அவ்வ்வ்வ்......

கலகலப்ரியா said...

superuuu...!!! :D

கயல் said...

//

பிரியமுடன்...வசந்த் said...
நல்லதொரு சுவாரஸ்யமான பகிர்வு...

கயலு இன்னிக்கு யாரோ உங்ககிட்ட நல்லா பல்ப் வாங்கியிருக்காங்கன்னு நினைக்கிறேன்....

//
சண்டக்காரின்னே முடிவு பண்ணிட்டாப்ல போல!நன்றி வசந்த்!

கயல் said...

//
பழமைபேசி said...
//கயலு இன்னிக்கு யாரோ உங்ககிட்ட நல்லா பல்ப் வாங்கியிருக்காங்கன்னு நினைக்கிறேன்....//

யெப்பா, நான் இல்லன்னு நினைக்கேன்...அவ்வ்வ்வ்......
//

அவ்வ்வ்வ்வ்! நீங்களுமா?

கயல் said...

//
கலகலப்ரியா said...
superuuu...!!! :D
//
கவிதையா போட்டு கலக்குறீங்க! நன்றி பிரியா வருகைக்கு!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!