Thursday, January 14, 2010

நிக‌ழ்த‌க‌வு

ந‌ட்போடு உற‌வாடி நானிருப்பதாய் பொய்பேசி
ந‌ம்பிக்கை எல்லாம் த‌ந்து நீசமாய் மாறிப்போன‌
ந‌ட்பின் மீது நிறைவேற்ற‌ப்பட்ட
ந‌ம்பிக்கையில்லா தீர்மானங்கள்!
நட்பு கால‌ங்க‌ளை க‌ருத்தில் கொண்டு
ந‌டந்தவை ம‌ற‌ந்து செல்கிற‌து நாட்காட்டி!

ந‌ற்குடி மாண்பும் நேர்வழி நடத்தலும்
பிற‌ப்பிலா வருவ‌து?
நிச்ச‌ய‌மில்லை
வாழும் முறைமையில் வ‌ருவ‌து
சிற்பியின் கைத்திறன் முய‌ற்சியில‌ன்றி
பிற‌ப்பினில் ஆகாது காண்!
ஏகலைவன் வீரம்
சத்திரியனுக்கு சளைத்தாயென்ன?

அரிதாய் வாய்க்கும் வாய்ப்புக‌ளெல்லாம்
அவ‌ச‌ர‌மாய் முற்றுப் பெறுகையில்
அடுத்த‌ நாளுக்கான எறும்பின் முய‌ற்சி
அசட்டுத்தனமாயினும் அதிலும் அர்த்தமிருக்கிறது!

நாளை என்ப‌து நிச்ச‌ய‌ம‌ற்ற‌ இர‌வுக‌ளில்
நடுநிசியில் இர‌வை ந‌கர்த்தும்
திகிழ் நிறைந்த‌ நாழிகைக‌ள்
அற்புத‌மான‌வை!

வாழ்க்கையின் வரையறை என்ன?
நிச்சயிக்கப்பட்ட இற‌ப்புக்கும் நடப்புக்கும்
இடைப்ப‌ட்ட‌ நிக‌ழ்த‌க‌வு!
ஒன்றுக்கும் பூச்சிய‌த்திற்கும்
நாட்ப‌ட்ட‌‌ ப‌ந்த‌ய‌ம்
பூச்சிய‌ம் வென்றெடுக்காத வ‌ரையில்
பூமியில் பெய‌ருடை த‌ருவாய் நீ!
இவ்விட‌ம் ஜெயித்தேன் எவ்விட‌ம் தோற்பேன்?
க‌ட்ட‌ங்க‌ளிலும் கைரேகைக‌ளிலும் ப‌திலைத் தேடி
நிகழப்போகுமொன்றிற்கான ஆயத்தங்கள்
நிகழாத வரைக்குமான உத்திரவாதம்!

9 comments:

பிரியமுடன்...வசந்த் said...

நிச்சயிக்கப்பட்ட இற‌ப்புக்கும் நடப்புக்கும்
இடைப்ப‌ட்ட‌ நிக‌ழ்த‌க‌வு!//

சூப்பர்ப்..!

பிரியமுடன்...வசந்த் said...

போன போஸ்ட்ல புள்ளி வச்சிங்க இப்போ கோலமே போட்டுட்டீங்க...

பிரியமுடன்...வசந்த் said...

ப‌டைப்பு & ஆக்க‌ம் :: கயல்

அடுத்த போஸ்ட்ல கதை திரைக்கதை வசனம் இயக்கம் இதெல்லாம் வருமா?

கலகலப்ரியா said...

fantastic kayal..!!! absolutely brilliant..!!! luv it... (sry.. damned tired.. so no tamil comment today..:()

Thekkikattan|தெகா said...

இதுவும் நல்லாத்தேய்ன் இருக்கு... கீப் going.

//ந‌ற்குடி மாண்பும் நேர்வழி நடத்தலும்
பிற‌ப்பிலா வருவ‌து? நிச்ச‌ய‌மில்லை!
வாழும் முறைமையில் வ‌ருவ‌து!//

நான் ஒரே ஒரு வார்த்தையை மட்டும் மாத்திக்குவேன் இப்படி....

சிந்திக்கும் முறைமையில் வருவது :)

கயல் said...

//
பிரியமுடன்...வசந்த் said...
நிச்சயிக்கப்பட்ட இற‌ப்புக்கும் நடப்புக்கும்
இடைப்ப‌ட்ட‌ நிக‌ழ்த‌க‌வு!//

சூப்பர்ப்..!

January 14, 2010 12:34 PM
பிரியமுடன்...வசந்த் said...
போன போஸ்ட்ல புள்ளி வச்சிங்க இப்போ கோலமே போட்டுட்டீங்க...
//

கோலம்னா சொல்லுறீக? நாம எதோ கணக்குன்னுல்ல நெனச்சோம்! நட்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நண்பரே!

கயல் said...

//
கலகலப்ரியா said...
fantastic kayal..!!! absolutely brilliant..!!! luv it... (sry.. damned tired.. so no tamil comment today..:()
//
நன்றி பிரியா!

கயல் said...

//

Thekkikattan|தெகா said...
இதுவும் நல்லாத்தேய்ன் இருக்கு... கீப் going.

//ந‌ற்குடி மாண்பும் நேர்வழி நடத்தலும்
பிற‌ப்பிலா வருவ‌து? நிச்ச‌ய‌மில்லை!
வாழும் முறைமையில் வ‌ருவ‌து!//

நான் ஒரே ஒரு வார்த்தையை மட்டும் மாத்திக்குவேன் இப்படி....

சிந்திக்கும் முறைமையில் வருவது :)

//

வாழும் முறைமைக்குள்ளே ந்ற்சிந்தனையும் அடங்காதா நண்பரே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Thekkikattan|தெகா said...

:-) ம்ம்... சரி.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!