Monday, January 4, 2010

காலச் சக்கரத்தின் கழன்ற அச்சாணி



நிச்சயமற்ற விடியல்களில்
வாழத்துடிக்கிற மனம்
பொழுது விடிந்தபின்
சோம்பிப் போகிறது!

மை தீர்ந்த பேனாக்களை
நம்பி வரிசையில் நிற்கும்
எண்ணக் குவியல்கள்!

எது சரி?
எது தவறு?
உள்ளது உள்ளபடி
சீர்தூக்கிப் பார்க்கும் மனச்சாட்சி
குறைகளை முன்வைக்க
ஏனோ பின்வாங்குகிறது!

உள்எழும்பி உதடு வரை வந்த
வார்த்தைகளெல்லாம்
சத்தமின்றி பெருமூச்சாய்
உருவகமெடுக்கிறது!

சோறா? மானமா?
சோறெனச் சொல்லும்
தைரியமின்றி
மானமெனச் சொல்லும்
தெளிவுமின்றி
தன்மான தராசு
இங்கும் அங்கும்!

சேர்ந்து சிரிக்கவரும் தோழமை
அழும் நேரத்தில் அண்டுவதேயில்லை!

இமைகளை மூடிவிட்டால் ....
உலகமே எனக்காய்
நின்றுவிடும்!
நெருக்கடியான சாலையி்ன் நடுவில்
சோதித்து பார்க்கிறேன்!
இந்த பூனையின் பாமரத்தனம்
வசவுகளுக்கு நடுவில்!

காலம் தாழ்த்தி ‍நான் தரும்
காணிக்கை முத்தங்கள்
காலதேவனின் சன்னதியில்
வேண்டாத பங்க‌ளிப்பாய்.....

8 comments:

கலகலப்ரியா said...

ரொம்ப ரொம்ப நல்லாருக்கு கயல்..!

கயல் said...

நன்றி பிரியா!

sathishsangkavi.blogspot.com said...

//காலம்
தாழ்த்தி ‍நான்
தரும் காணிக்கை
முத்தங்கள்
கால
தேவனின் சன்னதியில்
வேண்டாத பங்க‌ளிப்பாய்.....//

அழகான வரிகள்...

butterfly Surya said...

நல்லாயிருக்கு..

வாழ்த்துகள்.

கயல் said...

//

Sangkavi said...
//காலம்
தாழ்த்தி ‍நான்
தரும் காணிக்கை
முத்தங்கள்
கால
தேவனின் சன்னதியில்
வேண்டாத பங்க‌ளிப்பாய்.....//

அழகான வரிகள்...

//
நன்றி! அடிக்கடி வாங்க!

கயல் said...

//
butterfly Surya said...
நல்லாயிருக்கு..

வாழ்த்துகள்.
//

வாங்க!நன்றி!

ப்ரியமுடன் வசந்த் said...

//சோறா? மானமா?
சோறெனச் சொல்லும்
தைரியமின்றி
மானமெனச் சொல்லும்
தெளிவுமின்றி
தன்மான தராசு
இங்கும் அங்கும்!
//

அசத்தல்...!

கயல் said...

//
பிரியமுடன்...வசந்த் said...
//சோறா? மானமா?
சோறெனச் சொல்லும்
தைரியமின்றி
மானமெனச் சொல்லும்
தெளிவுமின்றி
தன்மான தராசு
இங்கும் அங்கும்!
//

அசத்தல்...!

//
நன்றி வசந்து!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!