Thursday, January 14, 2010

த‌மிழ‌ர் திருநாள் ந‌ல்வாழ்த்துக்க‌ள்!

பூக்களெல்லாம் சிரித்துப் பேசி மணம் பரப்ப
ஓரறிவு உயிரின மெல்லாம் செழித்து
பூமிக்கு பசுமை போர்த்த‌
மார்கழியின் தண்மையோடு
தென்ற‌லும் சேர்ந்து வ‌ர‌
பிற‌ந்து விட்டாள் த‌மிழ‌ர் மாண்புய‌ர்த்தும்
"தை திங்கள் நல்லாள்"

பழையன கழிந்து புதியன மனைபுக
மாவிலையோடு ஆவரம்பூ தோரணங்கட்டி
பசுஞ் சாணமெடுத்து வீடு மொழுகி
வேலிப்பருத்தியிட்ட கோமியத்தால் சுத்திசெய்து
ப‌ச்ச‌ரிசி மாக்கோலம் பதவிசாய் அள்ளித் தெளித்து
உழைப்புக்கு ஒத்துழைத்த இயற்கை அன்னைக்கு
நன்றி நவில்வதாம் 'தைப் பொங்கல்'!

வேர்வை சிந்தி வ‌ர‌ப்புய‌ர்த்தி ப‌ருவ‌த்தில் நீர்பாய்ச்சி
ஓடி உழைத்து க‌ள‌ம் சேர்த்த‌ நெல்ம‌ணியை
பக்குவமாய் இடித்து புடைத்து அரிசி செய்து
பாலிட்டு பருப்போடு பனை வெல்ல‌ம் பசுநெய்
இன்ன‌பிற‌ கூட்ட‌ணி சேர்த்து இனிதாய் படையலிட
உள்ளம் களித்த கதிரவனும் கேட்ட வரமளித்திடுவான்!
மாதம் மும்மாரி பொழிய ஏது செய்வான்!

ந‌ன்றி மொழித‌லிலும் எம்ம‌வ‌ர் சிற‌ப்பு காண்!
எல்லாமாய் இருந்திட்ட இயற்கைக்கு முதல் வணக்கம்!
ஏர்பிடிக்க தோள்கொடுத்து உயர்வு நல்கிய‌
ஐந்த‌றிவின‌ங்க‌ளுக்கு இர‌ண்டாம் நாளாம்!
'இன்ன‌து கிட்டியது! வ‌ருக‌ கூடி ம‌கிழ‌வென'
சுற்ற‌ம் க‌ல‌த்த‌ல் மூன்றாம் நாளாம்!

மேற்ப‌டி ச‌ங்க‌திக‌ள் எதுவும்
ந‌க‌ரத்தில் சாத்திய‌மில்லை
எனினும்,
ஆர்ப‌ரித்து த‌மிழ‌ர் திருநாளை வ‌ர‌வேற்போம்!

'தை' பிறந்த சந்தோசத்தை
குலவையிட்டு குதுகலிக்க
வருக! வருக!

"நாடு செழிக்க‌ ந‌ல்ல‌ ம‌ழை பெய்திட‌
பொங்க‌லோ பொங்க‌ல்!
வீடு சிற‌க்க‌ ந‌ல்ல‌ன எல்லாம் பெற‌
பொங்க‌லோ பொங்க‌ல்!
ம‌த‌வெறிய‌து ந‌லிந்து ஒற்றுமை ஓங்க‌
பொங்க‌லோ பொங்க‌ல்!
த‌ர‌ணியெங்கும் அமைதி பெருகி வ‌ன்முறை ஒழிய‌
பொங்க‌லோ பொங்க‌ல்!"




5 comments:

sathishsangkavi.blogspot.com said...

பொங்கலோ பொங்கல்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

தமிழ் said...

பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

கயல் said...

//
Sangkavi said...
பொங்கலோ பொங்கல்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

January 13, 2010 7:09 PM
//
த‌மிழ‌ர் திருநாள் வாழ்த்துக்க‌ள்!
//
திகழ் said...
பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
//

த‌மிழ‌ர் திருநாள் வாழ்த்துக்க‌ள்!

கமலேஷ் said...

படிக்கும் போது ஒரு நிமிஷம் கிராமத்தில் நடக்கும் காட்சிகள் யாவும் கண்களுக்கு முன் வந்து போனது...மிகவும் நன்றாக இருக்கிறது...

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...

கயல் said...

//
கமலேஷ் said...
படிக்கும் போது ஒரு நிமிஷம் கிராமத்தில் நடக்கும் காட்சிகள் யாவும் கண்களுக்கு முன் வந்து போனது...மிகவும் நன்றாக இருக்கிறது...

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...
//
நன்றி!!!உழவர் திருநாள் வாழ்த்துக்கள்! :-)

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!