வசந்தம் வர காத்திருந்த மரம்
இன்னொரு இலையுதிர் காலத்தை
ஏக்கத்தோடு எதிர் கொண்டது
காற்றை மட்டுமே உண்டு
வாழக் கற்றுக் கொண்டது - அந்த
பாலை நிலத்து மரம்
தண்ணீர் வெறும்
தீர்த்த துளிகளாய் மட்டும்
எப்போதாவது
சாங்கியம் கருதி
உறிஞ்சிக் கொண்டன
சோர்ந்து கிடந்த வேர்கள்
சாரலோடு ஈரம் மணக்கவே,
நெடுநாள் பசி தீருமென
சுவை அரும்புகளை
தூசி தட்டி
திசுக்களை எல்லாம்
தீண்டி எழுப்பியது
நாளை முதல் தளிர்கள்
துளிர்க்கக் கூடும்
'தயாராயிரு!'
பட்டுப் போனது போக
பச்சை வெட்டிய
கணுக்களுக்கெல்லாம்
மூடப்பட்டிருந்த
'பச்சையத் தொழிற்சாலை'
பகிரங்க அறிவிப்பு செய்தது
தடபுடல் ஏற்பாட்டிற்கிணங்க
மழையும் வந்தது
பேயென பெய்த மழை
பெயர்த்துப் போனது
வேர்களோடு சேர்த்து
கணுக்களின் நம்பிக்கையையும்!
Tuesday, January 5, 2010
துளிரத் துடித்த மரம்
அடக்கம்::::
தமிழ் ஈழம்
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!
4 comments:
மிக மிக அருமை கயல்... :)
//சாரலோடு ஈரம் மணக்கவே,
நெடுநாள் பசி தீருமென
சுவை அரும்புகளை
தூசி தட்டி
திசுக்களை எல்லாம்
தீண்டி எழுப்பியது!//
கயல் கலக்கல் வரிகள்...
//
கலகலப்ரியா said...
மிக மிக அருமை கயல்... :)
//
வாங்க பிரியா! அடுத்த இடுகை தாங்கள் மேலான கவனத்திற்கு!
//
Sangkavi said...
//சாரலோடு ஈரம் மணக்கவே,
நெடுநாள் பசி தீருமென
சுவை அரும்புகளை
தூசி தட்டி
திசுக்களை எல்லாம்
தீண்டி எழுப்பியது!//
கயல் கலக்கல் வரிகள்...
January 5, 2010 2:27 AM
//
நன்றி! வருகைக்கும் ரசனைக்கும்!!
Post a Comment