Tuesday, July 20, 2010

அற்ப தத்துவம்

பசியோடிருக்கும் வல்லூறொன்றின்
பார்வையில் சின்னஞ்சிறு கோழிக்குஞ்சு
பாவமோ பாதிப்போ எதன் நிழலும்
படியாத பவித்திர ஜீவன் அது!

தாய்க்கோழி நொறுக்கித்தந்த நெல்மணியும்
விழுங்க சக்தியற்ற சின்னஞ்சிறு குரல்வளை!
நகரும் புழுவொன்றின் நடனத்தில் லயித்தபோது
விதியின் வாய்க்குள் சிக்குண்ட பரிதாபம்!
வலியவன் அடிக்க இளைத்தவன் மடிய
பசிக்கு உயிர் புசிக்கும் அவலம்.

நகர்ந்து செல்லும் எறும்புகளின் ஊர்வலத்தில்
எப்போதாவது
மரணித்த பூச்சியை பார்ப்பதுண்டு!

தேங்காய்த்துருவலோ திண்பண்டமோ
சுமந்து செல்லுகையில் மேலிடும்
உற்சாகம் இருப்பதில்லை
அவ்வினாடியில்.
ஏதோ பெருந்துயரம் தாங்கிய
இறுதி யாத்திரையாகத் தோன்றுமெனக்கு!
காய்ந்து மக்கிப் போதலைக் காட்டிலும்
யாருக்கோ உணவாதல் உத்தமம் என்கிறபடியாய்
அவ்வுணர்வும் ஜீரணித்துப்போகும் காலமாற்றத்தில்...

ஒரு சுதந்திரத் திருநாளில்
நான் வளர்த்த புறாக்கள் சில
விருந்தாளிக்கு விருந்தான கொடுமை
எப்போதாவது நினைவு கூர்வதுண்டு!
கனத்த மவுனமும் கேலிச் சிரிப்பும்
நண்பர்கள் மனநிலை சார்ந்து
விதவிதமான வித்தியாசம் தாங்கி!

மயானத்தில் அகழ்வராய்ச்சி
எல்லா எலும்புக்கூடும் கிழவனுக்கு
பால்யத்து காதலியை நினைவூட்டியதாம்!
ஒரு அற்பப்புழுவின் ஆயுள்
விதிவசம் சேர்ந்த பலருக்கு வாய்ப்பதில்லை

ஆகையினால் இனிமையானவர்களே!
வாழும் வரை வாழ்ந்திடுங்கள்
சக உயிரியாய் சாதியும் மதமும்
அதனாலான கர்வமும் தொலைத்து!

15 comments:

நசரேயன் said...

//அடக்கம்: க‌விதைகள்//

உன்னாலே கவுஜைகள் அடக்கம் ஆகிவிட்டது

நசரேயன் said...

//என்னைப் போய் தத்துவம் எழுதச்
சொன்னா இப்படித்தான்!//

யாருன்னு சொன்னா ஆட்டோ அனுப்ப வசதியா இருக்கும்

கலகலப்ரியா said...

தத்துவம் நல்லாருக்கு...எனக்கு புடிச்சிருக்குபா..

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதை ரொம்ப நல்லாருக்கு.. எண்ண ஓட்டம் அழகாக உள்ளது.

கயல் said...

//
நசரேயன் said...
//அடக்கம்: க‌விதைகள்//

உன்னாலே கவுஜைகள் அடக்கம் ஆகிவிட்டது
//

இல்ல அண்ணாச்சி அடுத்த வாரம் உயிர்த்தெழும்! :))

//
நசரேயன் said...
//என்னைப் போய் தத்துவம் எழுதச்
சொன்னா இப்படித்தான்!//

யாருன்னு சொன்னா ஆட்டோ அனுப்ப வசதியா இருக்கும்
//
எடுத்த பின்னூட்டத்த எப்படித் தான் கண்டுபிடிக்கிறாங்களோ?

கயல் said...

//
கலகலப்ரியா said...
தத்துவம் நல்லாருக்கு...எனக்கு புடிச்சிருக்குபா..
//
மிக்க நன்றி பிரியா! :))

கயல் said...

//
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கவிதை ரொம்ப நல்லாருக்கு.. எண்ண ஓட்டம் அழகாக உள்ளது.
//
நன்றி ஸ்டார்ஜன்!

Madumitha said...

வாழும் வரை வாழ்ந்திடுங்கள்..
அதுதானே கஷ்டம்.

'பரிவை' சே.குமார் said...

தத்துவக் கவிதை ரொம்ப நல்லாருக்கு.

கமலேஷ் said...

வசன கவி - ரொம்ப நல்லா இருக்கு தோழி...ரொம்ப பிடிச்சிருக்கு..

நிலாரசிகன் said...

//அடக்கம்: வசனக்க‌விதைகள்//

மிகச்சரி. புரிந்திருக்கும் என்றெண்ணுகிறேன்.

பழமைபேசி said...

//நினைவு கூர்வதுண்டு//

????

'பரிவை' சே.குமார் said...

எனது தள முகவரி

http://www.vayalaan.blogspot.com

சுசி said...

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன்..

http://yaavatumnalam.blogspot.com/2010/07/blog-post_29.html

Unknown said...

அலுவலக அடிமாட்டு வேலை செய்துகொண்டே இருப்பதுதான் வாழ்க்கையா? தொழிலில் நீங்கள் நினைத்த நிலையை
அடைந்துவிட்டீர்களா? இல்லை உலகம் எப்போதும் ஒரு பொழுதுபோக்கு கூடமா?. வாழ்கையும் பணம் சம்பாதிக்கும்
வழியையும் நீங்கள் சமன்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா?. உங்கள் பயணம் எங்கே செல்கிறது?. ஜீஜிக்ஸ்.காம் www.jeejix.com இல் எழுதுங்கள். பரிசுகளை அள்ளுங்கள்.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!