Friday, July 2, 2010

கழி நாண்(ன்) கயிறு

கழிநடனம் பார்த்ததுண்டா நீங்கள்?
கழி கொண்டாடுவது எனக் கொண்டால்
சர்வ நிச்சயமாய் தவறு உங்களது தான்!
இது கழிக்கு யாம் ஆடும் ஆட்டம்
அதாகப்பட்டது ஒவ்வொரு அசைவிலும்
விதிக்கும் நியதிக்கும் பயத்தினது முத்திரை!

சுளீரெனத் தோல் பட்டுத்தெறிக்கும்
சுடுமணலென கன்னம் தொடும்
பல சமயம் வார்த்தையின் வாயிலாய்
சில சமயம் பசியின் ரூபமாய்
இன்னும் தணலாய்,திரவ நெருப்பாய்...
வலியின் வேதனை மட்டும் ஒன்றே!

விசை கொண்டு இழுக்கும் கைகள்
அவதார புருசனது அலங்காரம் போல
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு உருவில்....

வயிற்றை சுருக்கிய கயிற்றின் முனைகளில்
எங்களின் விலாசங்கள் எழுதப்பட்டிருக்கும்
இறுக்கிய வடுவை குறையெனக் கொண்டால்
வாழ்வையே தொலைக்க நேரிடும் அபாயம்!

கனவுகள் தின்னும் கொடும்பசி
தூங்கும் வயிற்றை தட்டியெழுப்பும்
விம்மியழும் எம்விதானங்கள்
என்ன செய்ய நித்தம் நிகழும்
இவ்விபத்து விதியெனச் சொல்லப்பட்டது...

எம் தலைகள் நிமிர மறுக்கப்பட்டவை
எவர் கரம் இன்று கழி சுழற்றியது
விபரங்கள் என்றும் விவரிக்கப்பட்டதில்லை
அழுத்தமாய் எழுதப்பட்ட அடிமைசாசனம்!

வளைந்த முதுகும் இளித்த இதழ்களும்
இட்டதை சட்டென முடிப்பதும்
சீருடையாய் எம்முடன் சேர்ந்தே வருவன

தசை சுருங்கி மயிர் நரைத்த பொழுதொன்றில்
தன்னிச்சையாய் நிமிர்வது சாத்தியமானது
பேரதிர்ச்சியில் கல்லாகிப் போனேன்
அட,இதுகாலும் ஒரு குரங்கின் கையில் கழி!

12 comments:

நசரேயன் said...

//பேரதிர்ச்சியில் கல்லாகிப் போனேன்//

கயல் கவுஜைப் படிச்சாரோ?

கயல் said...

என்ன அண்ணாச்சி ... இப்படி சொல்லுதிய? ஒரு அடிமையோட நிலைய சொன்னா... ம்ம்... அடுத்ததுல இருந்து கவுஜ இன்னும் கொடுமையா இருக்கும்... தப்பிக்க முடியாதுல்ல...இருங்க இருங்க :))

கார்க்கி said...

உறவால், சூழ்நிலையால், அதிகாரத்தால், சமூகத்தால், எல்லா விதத்திலும் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் அனைவருக்கும் பொருந்துகிறதோ??

நல்லா இருக்கு

சே.குமார் said...

நல்லா இருக்கு கயல். நீங்க சிவகங்கை மாவட்டமா?

கலகலப்ரியா said...

நல்லாருக்கு கயல்..

கழிநடனமா.. களிநடனமா..? ம்ம்..

கயல் said...

//
உறவால், சூழ்நிலையால், அதிகாரத்தால், சமூகத்தால், எல்லா விதத்திலும் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் அனைவருக்கும் பொருந்துகிறதோ??

நல்லா இருக்கு
//
நன்றி கார்க்கி!

கயல் said...

//
சே.குமார் said...
நல்லா இருக்கு கயல். நீங்க சிவகங்கை மாவட்டமா?
//
நன்றி!ஆமாங்க! நான் பூபாலன்,கற்பகம்,ரவீந்திர பாண்டியன் இவங்கெல்லாம் நல்ல நண்பர்கள்.

கயல் said...

//
கலகலப்ரியா said...
நல்லாருக்கு கயல்..

கழிநடனமா.. களிநடனமா..? ம்ம்..
//

வாங்க பிரியா! கழி நடனம் தான். கழி - கொம்பு,தடி எனப் பொருள் கொள்ள வேணும்.

சுசி said...

ரொம்ப நல்லா இருக்கு கயல்..

சுதந்திர நாட்டின் அடிமைகள் :(

சே.குமார் said...
This comment has been removed by the author.
கமலேஷ் said...

தலைப்பே கவிதையை உரக்க பேசிட்டு...அதை தாண்டி நான் என்ன பேச தோழி..?

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///விசை கொண்டு இழுக்கும் கைகள்
அவதார புருசனது அலங்காரம் போல
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு உருவில்....
/////////

மிகவும் அருமை . கவிதை என்னை மிகவும் ரசிக்க வைத்தது

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!