Tuesday, July 6, 2010

போதும் நிறுத்துங்கள்!


வழியும் என் குருதி தொட்டு
உலகச் சமாதானத்துக்கொரு
கவிதை வடிக்கிறீர்கள்

எழுத்தின் வடிவம்
பொருளின் செறிவு
இலக்கணச் சகிதம்
பரிசோதிக்கிறது உங்களின் பார்வை
ஓலையில் வரையப்பட்ட
கவியில் ஒரேயொரு குறை
குரலை உயர்த்தி
’எழுத்துரு நிறக்கவில்லை’
என்கிறீர்கள்

இதுவரை வலிபொறுத்த நான்
விசும்பத் தொடங்குகிறேன்
பயமா? பச்சாதாபமா?
புரியாத குழப்பத்தில்
உகுக்கப்படுகிறது கண்ணீர்

போதும் நிறுத்துங்கள்!
கீறப்பட்ட என் ரணம்
காயும் வரையாவது
கவிதை எழுதுவதை

12 comments:

சுசி said...

அருமையா இருக்கு கயல்..

//இதுவரை வலிபொறுத்த நான்
விசும்பத் தொடங்குகிறேன்
இன்னொரு முறை கீறப்படுவேனோ
என்கிற பயத்தில்!
//

:))))

கமலேஷ் said...

ம்ம்..
கீறியது கவிஞனா..
கவிதையா தோழி..
கவிஞன் எனும் பட்சத்தில்
அவனை கொன்று விடுங்கள் தவறில்லை.
கவிதையென்னும் பட்சத்தில்- யோசிக்கணும்..
ஏனென்றால் ஒரு கவிதை வாசிப்பவனுக்கு தகுந்தபடி
வேறு வேறு பொருள் தரும்..
அது தாங்களும் அறிவீர்களென்று நம்புகிறேன்.

'பரிவை' சே.குமார் said...

//இதுவரை வலிபொறுத்த நான்
விசும்பத் தொடங்குகிறேன்
இன்னொரு முறை கீறப்படுவேனோ
என்கிற பயத்தில்!//


Nice words.

good one.

congrats.

கயல் said...

யாருமேலயும் காண்டு இல்லைங்க... சும்மா தான் எழுதிப்பாத்தேன் அதுக்கு போயி இப்படியா திட்டுறது..?

நசரேயன் said...

ஆமா பட்டது போதும், நிறுத்துங்கள்!

நசரேயன் said...

//சும்மா தான் எழுதிப்பாத்தேன் அதுக்கு போயி இப்படியா திட்டுறது..?
//

விலாசம் இல்லை, அதனாலே ஆட்டோ அனுப்பலை

Anonymous said...

ippadi nenga solluvengannu therinchi thaan ippa ellam nan ezhuthuvadhu illai kayal...

கயல் said...

//
சுசி said...
அருமையா இருக்கு கயல்..

//இதுவரை வலிபொறுத்த நான்
விசும்பத் தொடங்குகிறேன்
இன்னொரு முறை கீறப்படுவேனோ
என்கிற பயத்தில்!
//

:))))

//

ரொம்ப நன்றிப்பா!

கயல் said...

//
கமலேஷ் said...
ம்ம்..
கீறியது கவிஞனா..
கவிதையா தோழி..
கவிஞன் எனும் பட்சத்தில்
அவனை கொன்று விடுங்கள் தவறில்லை.
கவிதையென்னும் பட்சத்தில்- யோசிக்கணும்..
ஏனென்றால் ஒரு கவிதை வாசிப்பவனுக்கு தகுந்தபடி
வேறு வேறு பொருள் தரும்..
அது தாங்களும் அறிவீர்களென்று நம்புகிறேன்.
//
ஏதேது நம்மள கொல கேசுல மாட்டி விட்டிருவாரு போலயிருக்கே!

கயல் said...

//
சே.குமார் said...
//இதுவரை வலிபொறுத்த நான்
விசும்பத் தொடங்குகிறேன்
இன்னொரு முறை கீறப்படுவேனோ
என்கிற பயத்தில்!//


Nice words.

good one.

congrats.

//
நன்றி குமார்

கயல் said...

//
நசரேயன் said...
ஆமா பட்டது போதும், நிறுத்துங்கள்!
//

நீங்க சொன்னதுக்காகவே இன்னும் ரத்தம் வாற மாதிரிதேன் எல்லா கவுஜயும் இருக்கும்....

//
நசரேயன் said...
//சும்மா தான் எழுதிப்பாத்தேன் அதுக்கு போயி இப்படியா திட்டுறது..?
//

விலாசம் இல்லை, அதனாலே ஆட்டோ அனுப்பலை
//

ஓ! அப்போ உங்களுக்கு என் விலாசமே தெரியாதா! சரிதான் இனி பயமேயில்ல!

:))

கயல் said...

//
தமிழரசி said...
ippadi nenga solluvengannu therinchi thaan ippa ellam nan ezhuthuvadhu illai kayal...

//

அட பாருடா! இவங்கள இதான் சாக்குன்னு என்னய சொல்லுறாங்க! அம்மா தாயே உங்க ரசிகர்கள் எனக்கு ஆட்டோ அனுப்பிடப்போறாங்க! சொல்லிடுங்க இது சும்மா உல்லூலாயிக்குன்னு!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!