Wednesday, July 7, 2010

உயிர்த்தீ

பாருங்கள் இவர்களை!

தன் அறியாமையை அறியாமலே
அடுத்தவர் குறித்து
பரிகசிக்கிறார்கள்!

ஒரு ஆலமரத்தின் பிரமாண்டத்தையும்
அதன் அகண்ட பரவலையும்
புகழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள்
வித்திட்டவிதையின் விஸ்ரூபம்
தெரியாமல்....

பெருந்தீயில் சிதைந்த காட்டில்
எஞ்சியிருக்கும் கரித்துண்டுகளை
கேட்டிருந்தால் தெரிந்திருக்கும்
காட்டுத்தீயின் காரணம்
எத்தனை சிறியதென்று!

நடுவண் நிலைப்பாடும்
நாகரீக மிடுக்கும் கொண்டதாய்
சொல்லிக் கொண்டே
மனிதத்தின் மாண்பையும்
மன்னிப்பின் மதிப்பையும்
மிகச்சுலபமாய் மறந்துவிடுகிறார்கள்

யாதொரு காரணமுமில்லாமல்
என் நட்பின் உயிர்த்தீயை
அணைத்தது போலவே!

7 comments:

VELU.G said...

//தன் அறியாமையை அறியாமலே
அடுத்தவர் குறித்து
பரிகசிக்கிறார்கள்!
//
எப்போதும் நடக்கிறது தானே

கவிதை அருமை ரசித்தேன்

அன்புடன் நான் said...

கனமான உவமைகளோடு கவிதை மிக கம்பீரமாய் காட்சி தருகின்றது.

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை.

கலகலப்ரியா said...

ரொம்ப ரொம்ப நல்லாருக்கு கயல்... மிக அருமை..

சுசி said...

நல்லா இருக்கு கயல்.

கமலேஷ் said...

யாரையோ திட்ரீங்கன்னும் மட்டும் தெளிவா தெரியுது ஆனா யாரைன்னுதான் தெரியலை...

கோபக் கவிதை ரொம்ப நல்லா இருக்கு தோழி...

கயல் said...

அனைவருக்கும் நன்றி!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!