உன் பிம்பங்கள் விட்டுச்சென்ற
தடங்களை படியெடுக்கிறேன்
கேலி செய்கிறதென் மனசாட்சி!
நிறைசூல் சர்ப்பத்தின் சீற்றமும்
தளர்ச்சியும் கொண்டவாறே
என்னுள் உறைந்த உன்னை
மறைக்கிறேன் அதனிடம்!
ஒத்திகையில் தோற்றபின்
மேடையேற வாய்ப்பு...
இருக்குமென்ற இருத்தலைவிடவும்
இல்லையென்ற நிதர்சனம்
நிம்மதியென்பதால்
துணிகிறேன் உன் விழிகளை
சந்திக்க!
*****
என்னோடு போராடி வெல்வதில்
சுகம் காண்பவன் நீ!
அதற்கெனவே
தோற்பதாய் பாசாங்கு
செய்கிறேன் இப்போதெல்லாம்....
எப்படி சொல்வது உனக்கு
பெருமிதத்தில் திளைக்கையில்
தான் நீ பேரழகனென்று?
*****
4 comments:
என்னோடு போராடி வெல்வதில்
சுகம் காண்பவன் நீ!
அதற்கெனவே
தோற்பதாய் பாசாங்கு
செய்கிறேன் இப்போதெல்லாம்....
எப்படி சொல்வது உனக்கு
பெருமிதத்தில் திளைக்கையில்
தான் நீ பேரழகனென்று?//
மிக ரசித்தேன்.... கவிதைக்கு பாராட்டுக்கள்.
நல்லாயிருக்கு இரண்டும்.
/எப்படி சொல்வது உனக்கு
பெருமிதத்தில் திளைக்கையில்
தான் நீ பேரழகனென்று/
ரைட்டு..சிக்கியாச்சா?
ரொம்ப நல்லா இருக்கு தோழி...
Post a Comment