பாதாளம் நோக்கி
குழிகிறதொரு சுழல்
சுழல் மீதொரு தக்கை
உருளும் நீர்த்துளி
நீர்த்துளி உடம்பில்
நீலவண்ண ஆகாயம்
ஆகாயம் சுற்றச்சுற்ற
தக்கை நடனம்
நடனம் உவப்பாய் முடிய
அலைகளின் கைதட்டல்
கைதட்டல் போதையில்
துள்ளிவிழுந்தது அச்சிறுதுளி
சிறுதுளி மூழ்கிய வேகத்தில்
ஆழியின் மீப்பெரு நிசப்தம்
நிசப்தம் கிழித்து
சுற்றம் நோக்க
நோக்கிய திசையெல்லாம்
குதிக்கின்றன நீர்த்துளிகள்
பாதாளம் நோக்கி...
2 comments:
நல்ல கவிதை.. வார்த்தையாடல்கள் அருமை
அந்தாதி அருமை
Post a Comment