Wednesday, October 27, 2010

காதலுறை பனிக்காலம்


 கூட்டவும் பெருக்கவும்
மட்டுமே முடிகிறது
கழிக்கவோ வகுக்கவோ
வெட்கம் தடுக்கிறது
வினோதமிந்த
’முத்தக்’கணக்கு!








மென் கழுத்தில் 
சிலபல சங்கதிகளை
கோலமாய் வரைந்தபடி நின் விரல்...
படர்தலின் விபரீதத்தில்
விதிர்த்து எழுகிறேன்
’இல்ல சங்கிலி தங்கமான்னு...?’ 
திணறலில் கோழையாகினும்
முத்தம் சிந்தியபின்னே மீள்கிறது
உன் காதலான காமம்!




சாலச் சிறந்த கவிகளெல்லாம்
’இதென்ன பிரமாதம்’
இளப்பமாய் விமர்சித்தவன்
’உன் இதழ்களைத் தா’
எழுதிக்காட்டுகிறேன்
’சிற்றின்பக் கதம்பம்’ என்றான்
வழமை போல் அன்றும்
இமை தாழ்த்தி இம்சித்தேன்  
பதிலேதுமில்லாமல்...
பொறுமையிழந்து வீரனாய்
விஸ்ரூபமெடுத்தவன்
சிறையெடுத்திருந்தான்
அதரங்களிரண்டையும்...












அவனின்றி
அழகற்றிருப்பதாய் சொன்னதும்
ஆத்திரமாய் தரையில் எறிந்தேன்
ஆயிரஞ் சில்லாய் சிதறிச் சிரித்து
அதையே தீர்க்கமாய்ச் சொன்னது
கண்ணாடி!

41 comments:

நசரேயன் said...

//கூட்டவும் பெருக்கவும்
மட்டுமே முடிகிறது
கழிக்கவோ வகுக்கவோ
வெட்கம் தடுக்கிறது//

கழிக்க வகுக்க எல்லாம் அது பள்ளி கணக்கு இல்ல

//
மென் கழுத்தில்
சிலபல சங்கதிகளை
கோலமாய் வரைந்தபடி நின் விரல்...
படர்தலின் விபரீதத்தில்
விதிர்த்து எழுகிறேன்
’இல்ல சங்கிலி தங்கமான்னு...?’ //

எம்புட்டு கிராம் ?

நசரேயன் said...

காதல் கவுஜையா ?

வினோ said...

கயல் முதலும் கடைசியும் கலக்கல்...

எஸ்.கே said...

அழகான கவிதைகள்!

பழமைபேசி said...

//நசரேயன் said...
காதல் கவுஜையா ?//

பின்ன, சாதல் கவுஜையா??

கவி அழகன் said...

வாசிக்க வாசிக்க காதல் பெருகுது மனதை கட்டிபோட்ட கவிதை

Siva said...

Beautiful Romantic poem!!

நேசமித்ரன் said...

காதல் ததும்ப ததும்ப .....

தொடர்க :)

கயல் said...

//
நசரேயன் said...
காதல் கவுஜையா ?
//

பின்ன என்னவாம்?

நன்றி உங்கள் ரசனைக்கு(!).

கயல் said...

//
வினோ said...
கயல் முதலும் கடைசியும் கலக்கல்...
//
நன்றி வினோ!

கயல் said...

//
எஸ்.கே said...
அழகான கவிதைகள்!
//
நன்றி!

கயல் said...

//
பழமைபேசி said...
//நசரேயன் said...
காதல் கவுஜையா ?//

பின்ன, சாதல் கவுஜையா??
//
ஏதோ கோவமா அவருக்கு பதில் சொல்லுறாப்ல இருக்கு?

நன்றி ஆசானே உங்கள் ஆதரவுக்கு!

கயல் said...

//
யாதவன் said...
வாசிக்க வாசிக்க காதல் பெருகுது மனதை கட்டிபோட்ட கவிதை
//
நன்றி யாதவன்

கயல் said...

//
Siva said...
Beautiful Romantic poem!!
//

நன்றிங்க

கயல் said...

//
நேசமித்ரன் said...
காதல் ததும்ப ததும்ப .....

தொடர்க :)
//

நன்றி நேசன்

கார்க்கிபவா said...

இதென்ன கலாட்டா??

காதல் பத்தி எழுதினா நல்லா இல்லாமலா போகும்? டபுள் ரைட்

sundar said...

’கணக்கு எனக்கு பிணக்கு’ என்று பாடிய கவிஞனை நானறிவேன்...காதல் பிணக்குகளில் கூட ‘கணக்கு’ பண்ணுகிற கவிதாயினியை இப்ப தான் பார்க்கிறேன்

நல்லாத்தான் இருக்கு

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கவிதையையும்...காதலையும் பிரிக்க முடியாது போல்....

santhanakrishnan said...

காதல்
தேவதையால்
ஆசிர்வதிக்கப் பட்ட
கவிதைகள்.
பெருகட்டும்
பல நூறாய்.

'பரிவை' சே.குமார் said...

அழகான கவிதைகள்!

சின்னப்பயல் said...

கூர்வாள் இனி என்னவெல்லாம் கூறுவாள்..?!

கயல் said...

//
கார்க்கி said...
இதென்ன கலாட்டா??

காதல் பத்தி எழுதினா நல்லா இல்லாமலா போகும்? டபுள் ரைட்
//

நன்றி கார்க்கி

கயல் said...

//
ஆர்.ராமமூர்த்தி said...
கவிதையையும்...காதலையும் பிரிக்க முடியாது போல்....

//

:))

நன்றிங்க

கயல் said...

//
sundar said...
’கணக்கு எனக்கு பிணக்கு’ என்று பாடிய கவிஞனை நானறிவேன்...காதல் பிணக்குகளில் கூட ‘கணக்கு’ பண்ணுகிற கவிதாயினியை இப்ப தான் பார்க்கிறேன்

நல்லாத்தான் இருக்கு
//
கணக்கில்லாம வாழ்க்கையா?

நன்றி சுந்தர்

கயல் said...

//
santhanakrishnan said...
காதல்
தேவதையால்
ஆசிர்வதிக்கப் பட்ட
கவிதைகள்.
பெருகட்டும்
பல நூறாய்.
//
நன்றி

கயல் said...

//
சே.குமார் said...
அழகான கவிதைகள்!
//
நன்றிங்க

கயல் said...

//
சின்னப்பயல் said...
கூர்வாள் இனி என்னவெல்லாம் கூறுவாள்..?!
//
கூறத் தகுந்தது அத்தனையும்...

விஜய் said...

முதல் முறையாக உங்கள் தளம் வந்தேன்.

அருமை சகோ

வாழ்த்துக்கள்

விஜய்

கயல் said...

//
விஜய் said...
முதல் முறையாக உங்கள் தளம் வந்தேன்.

அருமை சகோ

வாழ்த்துக்கள்

விஜய்
//
நன்றி விஜய்

dr b kesavamoorthy said...

great, nice to know people like you are still writting in tamil

மதுரை சரவணன் said...

அருமை. வாழ்த்துக்கள்

Thanglish Payan said...

Kavithai kavithai..

Rasanai mikka varthaikal..

போளூர் தயாநிதி said...

parattugal
polurdhayanithi

போளூர் தயாநிதி said...

parattugal
polurdhayanithi

ரப்பர் பூக்கள் (ரா.இளங்கோவன்) said...

அற்புதமான வார்த்தைகளின்
சங்கமத்தில்.........
அழகான வரிகள் மனதை
இலேசாக்கி விட்டன

தீப ஒளித் திருநாள்
வாழ்த்துக்கள்

நட்புடன்
இளங்கோவன்
சென்னை

Paul said...

நல்லா இருக்குங்க.. காதல் வழிகிறது.. :)

இலக்கியன் said...

ரொம்ப நல்லா இருக்கு

நித்யன் said...

விட விட விரியும்
தொடத் தொட தொடரும்
இந்த விளையாட்டு

சிருங்கார சுந்தர வரிகள்
கிரங்கடிக்கின்றன.

அன்பு நித்யன்

மதி said...

a good poem collection kayal.. best wishes. like the way u r using the language. like the kural widget on your blog too. i am a fellow tamil writer in my blog www.sunshinesignatures.blogspot.com .. check out if you find it interesting

கமலேஷ் said...

1,3,4 க்கு என்னோட வோட்டுங்க...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரம் மூலம் தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!