Thursday, October 14, 2010

தென்றல் வந்து தீண்டும் போது...

படித்ததில் பிடித்தது

இப்போ கொஞ்ச நாளா தான் இவங்களப் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். மரபிசைத் தமிழோட மொத்த சுவையும் தளும்ப தளும்ப ... இவங்களும் நம்ம சக பயணின்னு நெனைக்கிறப்போ ரொம்ப பெருமையா இருக்குங்க. பெண்ணீயம், பதிவரசியல் இதையெல்லாம் கலக்காம தமிழ்....தமிழ் மட்டுமே வாசிக்கத் தருகிற அற்புதமான படைப்பாளி - கவிஞர். ஒவ்வொரு கவியும் பொருள் புரிய அத்தனை நேரம் பிடித்தது எனக்கு. எல்லாமே நல்லாயிருந்தாலும் என்னைப் பத்தி(?) இவங்க எழுதின இந்த கவிதை ரொம்ப பிடிச்சதுங்க.
மீன் = கயல். அதனால .....

மீன்

கடல் கொழிக்கும் நீரின் இனத்தில்
வளையும் வாளில் தண்மை இல்லா
கொதிக்கும் புனலாய் புள் மறையும்
கொத்தும் அலகில் குதித்து கீறும்


வாய் அகலும் மச்சத்தின் உள்புகும்
சிற்சில்லுயிரின் சிறை இரையாய்
வலை காணா வலிகாண் வல்லினம்
கடிமரத்தின் திசை போகா கலத்தில்


கெளிற்றின் கொள்வாய் கௌவை
அலை ஆழம் பாசிக்குள் முகிழும்
தூண்டில் வழுவி சிற்றலை தழுவும்
ஒற்றை புற்றில் ஓர் நிலை அறியா


கற்றலையின் சிறுகண் தப்பும் அவ்விலை
தூங்கா திரையில் கலக்கும் பொழுது
வாட்டும் ஒளிக்கீற்று கூசித் தேடும்
கள்ளூறா பாறை இடுங்கில் பெருக


என்பின் முள்ளாய் துருத்தும்
தசையில் உணவாய் கரைய
நசையற்று நவிலும் ஓசை
உப்பில் ஊறும் ஒரு சுவை.


துள்ளும் வாலில் கெண்டை சிக்க
தளரா பாய்ச்சலில் கழுகும் கொத்த
தீரா பகை தீரும் கண்ணியில்
வாழா வினை பகருமோ மீன்.


- 'Writer' Mubeen Sadhika

கேட்டதில் பிடித்தது

எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி தான் எனக்கும் இசைஞானிய பிடிக்கும்.ஆனா இந்த பாட்டை கேக்கும் போது ஏனோ அவரை ரொம்ப... ரொம்பப் பிடிக்கும்.
பார்த்ததில் பிடித்தது

ஊரிலே இருந்து தோழி வந்திருக்கா. எங்கயாவது போலாம்டீன்னு ஒரே நச்சு. அவள கூட்டிட்டு போய் பாஸ் படம் பார்த்தோம். முன்னாடியே நாங்க ரெண்டு பேரும் பார்த்திட்டாலும் நாங்க ரெண்டு பேரும் +  இன்னும் இரண்டு கல்லூரித் தோழிகள் சேர்ந்து பாக்குறதுன்னா... செம காமெடியா இருக்கும். நானெல்லாம் படம் பார்க்கப் போறது அந்தப் பாப்கார்னுக்கும் ஐஸ்கீரீமுக்கும் தான். ஆனா அம்மணி படத்தப் பாத்துட்டு மெசேஜ் ஏதாவது இருக்கான்னு தேடுற ஆளு. ஈரானியப் படங்கள்,அகிரா குரோசவான்னு வாய் ஓயாம பேசும். அவளே படம் முடியிற வரைக்கும் சிரிச்சிட்டே இருந்தா. நல்ல படம். எந்திரன்? விசில் ஓயட்டும். மெதுவா பாத்துக்கறேன்.

படம் பார்த்திட்டு கடை கடையா சுமாரான விலையில ஒரு புடவை தேடி அலைஞ்சப்போ... கண்ணுல பட்டு ஒட்டிக்கிட்டது இது.

ஆசைக்கு அலைபேசில படம்பிடிச்சிட்டு வந்தாச்சு. பின்ன நெசத்துல வாங்குறதுன்னா Diva க்கு என்னோட மொத்த சொத்தையும்(?) எழுதி வைக்கணும். திருமண வகைகள்ல இருந்திச்சு. நேரிலே இன்னும் அழகாயிருந்திச்சி. என் ஓட்டை மொபைல்லையே இவ்வளோ அழகுன்னா பாத்துக்கோங்க. நாளைக்கு மாம்ஸ் வந்து உனக்கு என்ன வேணும்ன்னு கேப்பாரில்ல அன்னிக்கு இதான் வேணும்ன்னு சொல்லுறதுக்காக. ஒரு தொலைநோக்கு பார்வை தாங்க :)

22 comments:

சே.குமார் said...

Nalla pakirvu kayal....

யாதவன் said...

வாழ்த்துகள்

LK said...

nalla arimugam .. unga maams paavam

எஸ்.கே said...

கவிதை, பாட்ரு, நிகழ்வு.. மொத்தத்தில் தொகுப்பு நன்றாக இருந்தது!

ஜெரி ஈசானந்தன். said...

Nice Blog.

சுசி said...

நல்ல அறிமுகம்..

பாட்டு என்னன்னு இங்க ஆபீஸ்ல தெரியலைப்பா.. தலைப்பை பாத்தா 'தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ..' அதுவா??

புடவை பத்தி மட்டும் இனிமேல நான் பேசவே மாட்டேனே :))

கார்க்கி said...

//ஊரிலே இருந்து தோழி வந்திருக்கா/

sollavee illa :)

வினோ said...

நல்ல பகிர்வுங்க கயல்...

கயல் said...

//
சே.குமார் said...
Nalla pakirvu kayal....
//
நன்றி குமார்

கயல் said...

//
யாதவன் said...
வாழ்த்துகள்
//

நன்றிங்க.... ஆமா எதுக்கு?

கயல் said...

//
LK said...
nalla arimugam .. unga maams paavam
//

வாங்க நண்பரே! நன்றி!!

முதல் தடவ வந்தவுடனேயே தெரிஞ்சிட்டா அவரு பாவமுன்னு..?

அவளோ மொக்கையோ நாம..?

கயல் said...

//
எஸ்.கே said...
கவிதை, பாட்ரு, நிகழ்வு.. மொத்தத்தில் தொகுப்பு நன்றாக இருந்தது!

//

நன்றி எஸ்.கே

கயல் said...

//
ஜெரி ஈசானந்தன். said...
Nice Blog.
//

நன்றி

vinu said...

yaaruppaa antha thurathristasaali

கயல் said...

//
சுசி said...
நல்ல அறிமுகம்..

பாட்டு என்னன்னு இங்க ஆபீஸ்ல தெரியலைப்பா.. தலைப்பை பாத்தா 'தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ..' அதுவா??

புடவை பத்தி மட்டும் இனிமேல நான் பேசவே மாட்டேனே :))
//
அதே அதே!

ம்ம்...ரொம்ப விலை. சீச்சீ இந்த பழம் புளிக்கும்.

கயல் said...

//
கார்க்கி said...
//ஊரிலே இருந்து தோழி வந்திருக்கா/

sollavee illa :)
//

ம்ம்! அவ்ங்க வீட்டுக்காரரு உங்க தோழி அப்டேட்ஸ் ரசிகராமுங்கோவ்! :-))

கயல் said...

//
வினோ said...
நல்ல பகிர்வுங்க கயல்...
//
நன்றிங்க வினோ!

கயல் said...

//
vinu said...
yaaruppaa antha thurathristasaali
//

அவ்வ்வ்வ்!

ஏன் ஏன் ? சொல்லமாட்டேன் போங்க!

நேசமித்ரன் said...

மிகப் பிடித்த பாடல் இது கேட்கச் சலியாத பாடல்

நல்ல பகிர்வு அந்தக் கவிதை


வாழ்த்துகள் தொடருங்கள்

கயல் said...

//

நேசமித்ரன் said...
மிகப் பிடித்த பாடல் இது கேட்கச் சலியாத பாடல்

நல்ல பகிர்வு அந்தக் கவிதை


வாழ்த்துகள் தொடருங்கள்
//

நன்றி நேசன்!

வெறும்பய said...

nalla pakirvu...

கயல் said...

//
வெறும்பய said...
nalla pakirvu...

//
நன்றிங்க

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!