Wednesday, June 30, 2010

பூந்தொட்டி

விரிசல் விழுந்த மண்தொட்டியில்
பதியமிட்ட ரோஜாசெடி
ஈரம் காயாது தினம் தினம்
நனைவது சாத்தியமானது
மொட்டொன்று மலரும் வரை!

ஞாயிறின் ஒளிக்கீற்றில்
இதழ் பிரியத் தொடங்கியது
மொட்டு!

பூரித்துச் சிரித்த மலரினைக்
குறித்து ஏக சந்தோசம்
செடிக்கும் மண்ணுக்கும்
ஏதோ பிறவிப்பயன் அடைந்ததாய்...

பாராட்டுதலும் பரிவுகாட்டலும்
இதழ் உதிர்ந்த பின் இல்லாது போயிற்று
காரணமாக்கப்பட்டது உடைந்த பூந்தொட்டி!

பாவம் அது!
பீடித்தது பெருங்கவலை
இருக்கும் ஈரம் எத்தனை நாள்
இலைக்கு போதுமென!

6 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

கவிதை மிக அருமை

நசரேயன் said...

//பூந்தொட்டி உடைந்தது காரணமாக்கப்பட்டது!//

உடைச்சது கருத்து கயல்

Katz said...

செடிக்கு தண்ணி ஊத்துங்கப்பா

கார்க்கிபவா said...

:))

nice

கயல் said...

//
நசரேயன் said...
//பூந்தொட்டி உடைந்தது காரணமாக்கப்பட்டது!//

உடைச்சது கருத்து கயல்
//

இல்ல அண்ணாச்சி! சத்தியமா நான் உடைக்கல... அது ஏற்கனவே அப்படி தான்!

கயல் said...

//
உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...
கவிதை மிக அருமை
//
நன்றி!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!