Thursday, June 17, 2010

அன்றாடங்களை அந்நியமாக்கியவனுக்கு!


















கனவுகள் தின்னும் விலங்கொன்றின்
தடதடக்கும் காலடியோசையில் ஏதோவொரு
பயங்கரத்தின் சமீபம் உணர்ந்து
பிரிகின்றன விழித்திரைகள்!

வாதிடும் மனதும் உதடும்
கட்டுக்குள் அடங்காமல்
சலசலத்த வண்ணம்....

சொல்லாமல் விட்ட பதங்களையும்
மிச்சமின்றி தின்று ஏப்பம் விடுகிறது
மாமிசவெறி கொண்ட அரக்கமனமதன்
நிழலீன்ற பயத்தின் ஆளுமையில்!

வெகுவாக விமர்சிக்கப்பட்ட அழகியலும்
அர்ச்சிக்கப்பட்ட ஆதரவு வார்த்தைகளும்
அடிக்கடி மனதில் ரீங்காரமிடுவதாய்...

இருப்பை தெளிந்து சுயம் உறைக்கையில்
களவாடப்பட்டிருந்தன என் நிம்மதியும்
அதன் நேற்றைய அடையாளங்களும்!


24 comments:

VELU.G said...

அழகிய வரிகள் அருமை

கலகலப்ரியா said...

ம்ம்ம்..

நேசமித்ரன் said...

இருப்பை தெளிந்து சுயம் உறைக்கையில்
களவாடப்பட்டிருந்தன என் நிம்மதியும்
அதன் நேற்றைய அடையாளங்களும்!

நல்லா இருக்குங்க

Unknown said...

ம்ம் அருமை.

KATHIR = RAY said...

அழகிய வரிகள் நல்லா இருக்குங்க

http://kannivirgin.blogspot.com/2010/06/blog-post.html

கருத்துரையிடுக.

Madumitha said...

அன்றாடங்களிலிருந்து அந்நியமாதல்
பெருஞ்சுகம்.

M. Azard (ADrockz) said...

கனவுகள் தின்னும் விலங்கொன்றின்
தடதடக்கும் காலடியோசையில் ஏதோவொரு
பயங்கரத்தின் சமீபம் உணர்ந்து
பிரிகின்றன விழித்திரைகள்!
அருமை

மதுரை சரவணன் said...

//இருப்பை தெளிந்து சுயம் உறைக்கையில்
களவாடப்பட்டிருந்தன என் நிம்மதியும்
அதன் நேற்றைய அடையாளங்களும்!//

வரிகள் கவிதைக்கு அழகு சேர்க்கின்றன. வாழ்த்துக்கள்

கயல் said...

//
VELU.G said...
அழகிய வரிகள் அருமை

//

நன்றி ஜி!

கயல் said...

//
கலகலப்ரியா said...
ம்ம்ம்..
//
ஒண்ணுமே சொல்லாம? ம்ம்ம்ம் இருக்கட்டு இருக்கட்டு.
:(

கயல் said...

//
நேசமித்ரன் said...
இருப்பை தெளிந்து சுயம் உறைக்கையில்
களவாடப்பட்டிருந்தன என் நிம்மதியும்
அதன் நேற்றைய அடையாளங்களும்!

நல்லா இருக்குங்க

//
நன்றிங்க!

கயல் said...

//
ஆறுமுகம் முருகேசன் said...
ம்ம் அருமை.
//
நன்றி!

கயல் said...

//
KATHIR = RAY said...
அழகிய வரிகள் நல்லா இருக்குங்க

http://kannivirgin.blogspot.com/2010/06/blog-post.html

கருத்துரையிடுக.
//
வருகைக்கு நன்றி!

கயல் said...

//
Madumitha said...
அன்றாடங்களிலிருந்து அந்நியமாதல்
பெருஞ்சுகம்.
//
அந்த சுகத்தை மேற்படி வரிகள் நினைவுபடுத்துமானால் எனக்கு பெருஞ்சுகம்!

கயல் said...

//
M. Azard (ADrockz) said...
கனவுகள் தின்னும் விலங்கொன்றின்
தடதடக்கும் காலடியோசையில் ஏதோவொரு
பயங்கரத்தின் சமீபம் உணர்ந்து
பிரிகின்றன விழித்திரைகள்!
அருமை
//
நன்றி வருகைகும் கருத்துக்கும்!

கயல் said...

//
மதுரை சரவணன் said...
//இருப்பை தெளிந்து சுயம் உறைக்கையில்
களவாடப்பட்டிருந்தன என் நிம்மதியும்
அதன் நேற்றைய அடையாளங்களும்!//

வரிகள் கவிதைக்கு அழகு சேர்க்கின்றன. வாழ்த்துக்கள்
//
நன்றி!

கமலேஷ் said...

கவிதை தன் கணுக்காலில்
முடிந்திருக்கும் வரிகள்
மிக நன்றாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்...

தொடருங்கள்...

மாதவராஜ் said...

கவிதை அருமை. இன்னும் வார்த்தைகளைச் செதுக்கிப் பாருங்களேன்.

சுசி said...

//வெகுவாக விமர்சிக்கப்பட்ட அழகியலும்
அர்ச்சிக்கப்பட்ட ஆதரவு வார்த்தைகளும்
அடிக்கடி மனதில் ரீங்காரமிடுவதாய்...

இருப்பை தெளிந்து சுயம் உறைக்கையில்
களவாடப்பட்டிருந்தன என் நிம்மதியும்
அதன் நேற்றைய அடையாளங்களும்!
//

ரொம்ப ரசிச்ச வரிகள் கயல்..

எப்டித்தான் இவ்ளோ அழகா வார்த்தைகள கோர்க்கரிங்களோ தெரில :))))

கார்க்கிபவா said...

தொடர்ச்சியாக நல்ல கவிதைகள்.. கலக்குங்க

கயல் said...

//
கமலேஷ் said...
கவிதை தன் கணுக்காலில்
முடிந்திருக்கும் வரிகள்
மிக நன்றாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்...

தொடருங்கள்...
//

நன்றி கமலேஷ்!

கயல் said...

//
மாதவராஜ் said...
கவிதை அருமை. இன்னும் வார்த்தைகளைச் செதுக்கிப் பாருங்களேன்.
//

கட்டாயமாக முயற்சிக்கிறேன். நன்றி!

கயல் said...

//
சுசி said...
//வெகுவாக விமர்சிக்கப்பட்ட அழகியலும்
அர்ச்சிக்கப்பட்ட ஆதரவு வார்த்தைகளும்
அடிக்கடி மனதில் ரீங்காரமிடுவதாய்...

இருப்பை தெளிந்து சுயம் உறைக்கையில்
களவாடப்பட்டிருந்தன என் நிம்மதியும்
அதன் நேற்றைய அடையாளங்களும்!
//

ரொம்ப ரசிச்ச வரிகள் கயல்..

எப்டித்தான் இவ்ளோ அழகா வார்த்தைகள கோர்க்கரிங்களோ தெரில :))))

//
நன்றி தோழி!

கயல் said...

//
கார்க்கி said...
தொடர்ச்சியாக நல்ல கவிதைகள்.. கலக்குங்க
//
நன்றி கார்க்கி!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!