Friday, May 21, 2010

அரவமற்ற இரவுகள்


வெளிச்சம் தீர்ந்த நல்லிரவொன்றில்
சட்டெனப் பூத்தன விண்மீன்கள்
தத்தம் இருப்பினைத் தெளிந்து
சேர்ந்தன இரவு பட்சிகள்!

தாழ்வாரத்தின் மூலையில்
பஞ்சாரத்து அடைக்கோழி
சிணுங்கலோடு முட்டைகளை
சேர்த்தணைத்துக் கொண்டது!

நீர்த்துப் போன கனவுகளின் பிம்பம்
கண்களை விட்டு எம்பப் பார்த்ததும்
என்றைக்கோ வழியவிட்ட கண்ணீரை
இன்றைக்குத் துடைத்துக் கொண்டன
கைகள் அனிச்சையாய்!

சலசலக்கும் தென்னை ஓலைகளில்
சீறிப் பாய்ந்தடங்கும் வண்டின் ரீங்காரம்
பூக்களைக் கிழித்துத் தேனுண்ட மயக்கம்!

கடிகாரமுட்கள் சங்கமித்தும் பின்
சத்தமிட்டும் கனவைக் கலைத்தன
அன்று அம்மாவாசை என்பதறியாமல்....
சூரியபிம்பத்தின் வரவுக்காய்
முற்றத்தில் சலனமற்றுக் காத்திருந்தேன்
ஒரு நிலவொளியின் பரவல்
அடர் இருட்டை விழுங்கி
வெளிச்சம் உமிழ்வதைக் கண்ணுற!


8 comments:

vasu balaji said...

நல்லாருக்குங்க.

கமலேஷ் said...

ஒன்னும் பண்ணிக்க முடியாது போல இருக்கு... பின்னி எடுத்து இருக்கீங்க...
கவிதை மொத்தமுமே மிகவும் பிடித்திருக்கிறது...
தொடருங்கள்...

கயல் said...

//
வானம்பாடிகள் said...
நல்லாருக்குங்க.
//
வருகைக்கு நன்றி பாலா சார்.
பாராட்டும் படியாய் இருந்ததா மகிழ்ச்சி!

கயல் said...

//
கமலேஷ் said...
ஒன்னும் பண்ணிக்க முடியாது போல இருக்கு... பின்னி எடுத்து இருக்கீங்க...
கவிதை மொத்தமுமே மிகவும் பிடித்திருக்கிறது...
தொடருங்கள்...
//
நன்றி கமலேஷ்!

கலகலப்ரியா said...

அருமையா இருக்கு கயல்.. வார்த்தைகளின் கோர்வைகளில் சிக்கலின்றி மெருகேறியிருக்கிறது..

கயல் said...

நன்றி ப்ரியா!

நிலாரசிகன் said...

கவிதை நன்று.

கயல் said...

//
நிலாரசிகன் said...
கவிதை நன்று.
//
நன்றி கவிஞரே!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!