Friday, May 21, 2010

நெஞ்சுரம்

இலக்கியம் பேசலாம் வாங்க நண்பர்களே!

இந்த இலக்கியப் பாதையில் சந்தோசமா பயணிக்கிற நேரத்துல ஒரு சின்ன வருத்தம்.பகிர வேண்டியதன் அவசியம் இருப்பதாலே இதைச் சொல்லுகிறேன் இங்கே! இலக்கியம் பத்தி பேசணும்னா உனக்கு குறுந்தொகை தான் கிடைச்சுதாக்கும்னு ஒரு தோழி அலுத்துக்கிட்டா. அப்படி இல்லீங்க குறுந்தொகை அகப் பொருள் கொண்டதாயினும் காதலை விதவிதமாக கூறும் சிறந்தவகை பகுப்பு என்பதாலயே அதைகுறித்த என் ரசனையின் பார்வையை முதலில் வைத்தேன். மற்றபடி காதலை நேசிப்பது எவ்வாறு பெண்மையை மீறுவதாகும்? உலகில் தொன்று தொட்டு நடந்து வரும் ஒரே திருட்டு இந்த இதயத் திருட்டு. அதை சொல்லும் விதம், காமமே கருப்பொருளாயினும், அகத்து நிகழும் நிகழ்வெனினும் கவிச்சுவை ததும்பும்படி தமிழால் விரவி, இலைமறை காயாக சொல்லும் ஒவ்வொரு பாட்டும் குறுந்த்கையின் சிறப்பு.போற்றுவார் போற்றட்டும்... தூற்றுவார் தூற்றட்டும்... சரி வாங்கப்பா நம்ம விசயத்துக்கு!

எனக்கு மட்டுமில்லைங்க நெறையப் பேருக்கு இந்த குறுந்தொகைப் பாட்டு ரொம்ப பிடிக்கும்.’இருவர்’ பட பாடலில் கூட கவிஞர் அழகாக இந்த வரிகளை எடுத்தாண்டிருப்பார். முதன் முதலில் எங்கள் ஊரில் நடந்த ஒரு பட்டிமன்றத்தில் கேட்டேன். அந்தவாதி ஆண்மகனின் நெஞ்சுரம் மிகுந்த காதலை இவ்வாறு சொன்னது இன்னும் என் மனதில் பசுமையாக! இதோ எனக்குப் பிடித்த அந்தப் பாடல்,

குறுந்தொகை

பாடியவர் : செம்புலப் பெய்நீரார்

பாடல் :

” யாயும் ஞாயும் யாராகியரோ!
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும் ?
செம்புலப் பெய்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.”


எத்தனை சுவை மிகுந்த பாட்டு? காதலின் கண்ணியம் உணர்த்தும் பாட்டு.மனம் கொள்ளை கொண்டவளை தன் வானாள் முழுதுக்கும் துணைவியாய் மனதளவில் ஏற்றுக் கொண்ட ஒரு தூய்மையான காதலன் தன் உள்ளத்து உறுதியை காதலிக்குச் சொல்லுவதாய் அமைந்தது இப்பாடல்.

காட்சி இப்படி விரிகிறது.
தலைவனும் தலைவியும் தனித்திருக்கிறார்கள்.அவன் தன்னை கை விட்டு விடுவானோ என்கிற பயம் அவளுக்கு. கூடலுக்கு பின் பிறந்த ஞானோதயம். வார்த்தையாய் கேட்டும் அவன் தரும் நம்பிக்கை அவளுக்கு போதுமானதாயில்லை. சஞ்சலத்துடன் அவனை காதலாய் பார்க்கிறாள். காமம் களைந்த பின்னும் உயிர்க்காதல் வடியுமா? வழமையாய் மது சிந்தும் விழியாவும் சந்தேகத்தின் சாயலே நிரம்பிக் கிடக்க அதைச் சகியாதவனாய், அறியாமையை போக்க எண்ணி, அவளை குழந்தையென தோளில் சாய்த்து முகம் வருடி , தலை கோதியபடி இவ்விதம் சொல்கிறான். காதலில் பெண்களுக்கு எப்போதும் நம்பிக்கை இருப்பதில்லை. உணர்த்த வேண்டிய பொறுப்பு சில சமயம் ஆண்களுக்கு கிடைக்கிறது.அதை இந்த தலைவன் எங்ஙனம் கையாளுகிறான் பாருங்களேன்!

”அன்பே! என் தாயும் உன் தாய் இருவரும் தோழிகளா என்ன? இல்லை அப்படித்தானே. உன் தந்தை யார்? என் தந்தை யார்? இருவருக்கும் முன்பின்
பரிச்சயமுண்டா? இவ்வளவு ஏன் இந்த காதலெனும் வரம் நமக்கு கிட்டும் வரை நீயாரென்பதோ நான் யாரென்பதோ நம்மிருவரின் புத்திக்கும் தெரியாத ஒன்று.எப்போது நீ என் வசமானாய்? காதல் உதித்த போது தானே? ”

ஆமோதிக்கும் வகையினில் அவள் தலையசைப்பைக் கண்டவன் மேலும் பேசத் துணிகிறான். ஆரத்தழுவியிருந்தவள் மேனியில் ஒரு தேர்ந்த வினைஞனை போல அவனின் விரல்கள் பயணிக்கிறது.காதலில் மயங்கிக் கிடந்தாலும் அவன் கருத்துக்கு செவி சாய்க்கிறாள் தலைவி.அவனும் மெல்ல மயங்கிச் சொல்கிறான் இப்படியாக,

”ஏன் காதல் வந்தது தெரியுமா? இது பிறப்பின் பந்தம். ஆகையினாலே நம்மிடையே காதல் தோன்றிற்று.செம்மண் நிலத்தில் நீர் விழுந்தால் என்னவாகும்? மண்ணும் நீரும் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றுக்குள் ஒன்றாகிப் போகும்.அப்படிப் பட்டது தான் நம் காதல்.ஒன்றான பின்னே அதற்குப் பிரிவென்பதே இல்லை. என் நேசத்திற்குரியவளே! இதை நீ மனதில் கொள்வாயாக!கவலை வேண்டாம்” என்று கூறி முடிக்கிறான்.

தலைவனின் பதிலில் - உறுதியில் தெளிவுற்ற தலைவி மகிழ்ச்சியுற்று அவன் காதலில் திளைத்ததாய்க் கொள்வீராக!


....மீண்டும் வருவேன்!

12 comments:

VELU.G said...

மிக அருமையாக இருந்தது உங்கள் விளக்கமும் பாடலும். இந்தப்பாடலைக் கருவாக வைத்து கவிஞர் மீராவாசுதேவன் எழுதிய கவிதை

'எனக்கும் உனக்கும் ஒரே ஊர்
வாசுதேவநல்லூர்"

என்று ஆரம்பமாகும் கவிதை கிடைத்தால் படித்துப்பாருங்கள்
இன்னும் அருமையாக இருக்கும்

கார்க்கிபவா said...

சிங்கம் படத்தில் ”காதல் வந்தாலே” பாட்டு கேட்டிஙக்ளா????

:)))

கமலேஷ் said...

ம்ம்...அழகாகத்தான் அணுகுகிறீர்கள் எழுத்துக்கள் உட்பட...

கயல் said...

//
VELU.G said...
மிக அருமையாக இருந்தது உங்கள் விளக்கமும் பாடலும். இந்தப்பாடலைக் கருவாக வைத்து கவிஞர் மீராவாசுதேவன் எழுதிய கவிதை

'எனக்கும் உனக்கும் ஒரே ஊர்
வாசுதேவநல்லூர்"

என்று ஆரம்பமாகும் கவிதை கிடைத்தால் படித்துப்பாருங்கள்
இன்னும் அருமையாக இருக்கும்
//

அப்படியா? நிச்சயம் படிக்கிறேன்! :-)

கயல் said...

//
கார்க்கி said...
சிங்கம் படத்தில் ”காதல் வந்தாலே” பாட்டு கேட்டிஙக்ளா????

:)))
//

அடடா! வாங்க வாங்க! ரெண்டு நாளா காதுல ஒரே வலிங்க.... என்ன பண்ணுறீங்கன்னா நீங்க முதல்ல அதக் கேட்டு பைத்தியமாகலைன்னா அப்புறம் நானு... சரியா?

கயல் said...

//
கமலேஷ் said...
ம்ம்...அழகாகத்தான் அணுகுகிறீர்கள் எழுத்துக்கள் உட்பட...
//
அட கவிதையாய் தான் மொழிகிறீர்கள் பின்னூட்டம் உட்பட.... நன்றி கமலேஷ்!

Anitha Manohar said...

//உலகில் தொன்று தொட்டு நடந்து வரும் ஒரே திருட்டு இந்த இதயத் திருட்டு.//

எல்லா கவிதைகளையும் சாப்பிட்டுவிடும் உங்கள் அவதானிப்பு.

விளக்கம் அருமை...ரசித்தேன்.

தொடருங்க..கயல்..

கயல் said...

//
ஜிஜி said...
//உலகில் தொன்று தொட்டு நடந்து வரும் ஒரே திருட்டு இந்த இதயத் திருட்டு.//

எல்லா கவிதைகளையும் சாப்பிட்டுவிடும் உங்கள் அவதானிப்பு.

விளக்கம் அருமை...ரசித்தேன்.

தொடருங்க..கயல்..
//

வாங்க ஜிஜி! நன்றி முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.http://blogintamil.blogspot.com/2015/01/3_22.html?showComment=1421884364302#c3407256640317110087
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

திருமதி மனோ சாமிநாதன் அவர்கள் தங்களது வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்.
http://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/

yathavan64@gmail.com said...

வணக்கம்!
இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
வாழ்த்துக்கள்!
ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
படைப்புகள் யாவும்.
நட்புடன்,
புதுவை வேலு,
www.kuzhalinnisai.blogspot.com
(குழலின்னிசையினை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

yathavan64@gmail.com said...

வணக்கம்!
இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
வாழ்த்துக்கள்!
ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
படைப்புகள் யாவும்.

நட்புடன்,
புதுவை வேலு,
www.kuzhalinnisai.blogspot.com

(இன்றைய எனது பதிவு
"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
படரட்டும்!
(குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!