Tuesday, May 18, 2010

வாளோடு வா




என் இனிய எதிரியே!
புறமுதுகில் எழுதப்பட்ட
உன் நாவின் வீச்சுகளுக்கு
தீரமாய் வாள்முனையில்
பதில் தருகிறேன்
வா போரிடலாம்

பெண்ணெனும் பரிதாபம் வேண்டாம்
உன் போர் தந்திரங்களை விடவும்
இந்த இளக்காரப் பார்வை
இன்னும் இம்சிக்கும் என்னை...

உன்னால் தாக்குறவும்
பதிலாய் தாக்கவும்
என் புயங்களுக்கு
பயிற்றுவித்திருக்கிறேன்
தினவேறிய நெஞ்சமுண்டு
துளியும் பயமில்லை

வில்லம்போடு வா!
கேடயங்கள் என்னிடமுண்டு
சொரியும் அம்புகளெல்லாம்
சொற்ப காயங்களோடு
மண்ணில் விழும்
நிச்சயம்

என்னை வெல்ல
காதலெனும் ஆயுதம்
ஒன்றை தவிர
எதுவாகிலும் சரி...

என் தலை கவிழ்க்க
கூரான வாட்களே போதும்...
மலர் மாலைகள் வேண்டாம்
என்னிலம் ஆள
ஆண்மை என்பதின்
அர்த்தம் புரிந்தவன் போதும்
பேடிகள் வேண்டாம்

உலகின் அதிசயப் பெண் நான்
யுத்தமும் ரத்தமும்
குற்றமெனச் சொல்லிக் கொண்டே
என் பாதைகளை சிலரின்
தலைகள் கொண்டு செப்பணிடுகிறேன்
துரோகம் பாதித்த மனத்துக்கு
மயிலிறகு ஒத்தடமாய்!

வாளோடு வா!
நீயா நானா
வெல்வது யார்?
மடிவது யார்?
தெரியும் அப்போது...

மறந்தும் மலரோடு வராதே
அவை என் பலவீனம்

14 comments:

பனித்துளி சங்கர் said...

//////என்னை வெல்ல
காதனெனும் ஆயுதம்
ஒன்றை தவிர
எதுவாகிலும் சரி... /////////

ஆயுதத்தைவிட மிகவும் வலிமையான வார்த்தைகள் . அருமை !

கமலேஷ் said...

பெண்மை மீது படிந்திருக்கும் மெல்லிய சவ்வுடைத்து வெளியேறும் விரியமான கவிதை..
இந்த வரிகளில் கவிதை இன்னும் கணம் பெறுகிறது...

//உன் போர் தந்திரங்களை விடவும்
இந்த இளக்காரப் பார்வை
இன்னும் இம்சிக்கும் என்னை!//

கவிதை மொத்தமும் மிகவும் பிடித்து இருக்கிறது கயல்...
வாழ்த்துக்கள், தொடருங்கள்...

நசரேயன் said...

போட்டு தாக்குங்க ..

ஆமா,கயல் உடம்பு எல்லாம் நல்லாத்தானே இருக்கு ?

கயல் said...

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//////என்னை வெல்ல
காதனெனும் ஆயுதம்
ஒன்றை தவிர
எதுவாகிலும் சரி... /////////

ஆயுதத்தைவிட மிகவும் வலிமையான வார்த்தைகள் . அருமை !
//

நன்றி நண்பரே!

கயல் said...

//
கமலேஷ் said...
பெண்மை மீது படிந்திருக்கும் மெல்லிய சவ்வுடைத்து வெளியேறும் விரியமான கவிதை..
இந்த வரிகளில் கவிதை இன்னும் கணம் பெறுகிறது...

//உன் போர் தந்திரங்களை விடவும்
இந்த இளக்காரப் பார்வை
இன்னும் இம்சிக்கும் என்னை!//

கவிதை மொத்தமும் மிகவும் பிடித்து இருக்கிறது கயல்...
வாழ்த்துக்கள், தொடருங்கள்...
//
நன்றி கமலேஷ்!

கயல் said...

//
நசரேயன் said...
போட்டு தாக்குங்க ..

ஆமா,கயல் உடம்பு எல்லாம் நல்லாத்தானே இருக்கு ?
//
ம்ம்! நலந்தேன் அண்ணாச்சி! ஆமா வழக்கமான உங்க பின்னூட்டம் மாதிரி இல்லையே ... சவுக்கியந்தானுங்களே? உங்க பாணியே இல்ல போங்க!

கலகலப்ரியா said...

ம்ம்... நல்லாருக்கு கயல் அறைகூவல்...

கயல் said...

//
கலகலப்ரியா said...
ம்ம்... நல்லாருக்கு கயல் அறைகூவல்...

//

நன்றி ப்ரியா.

vasu balaji said...

நல்லாருக்கு சவால்:)

கயல் said...

//
வானம்பாடிகள் said...
நல்லாருக்கு சவால்:)
//

சாவாலெல்லாம் இல்ல பாலா சார்! ஒரு தற்காப்புன்னு வச்சுக்கிடலாம். நானும் வீரத் தமிழச்சியின்னு எனக்கே இப்படி நினைவுபடுத்தினாத்தான் வாழ்க்கை பத்தின பயம் போகுது! நாளிருக்கில்ல!போராடனும் இன்னும்.ம்ம்..நீண்ட நாட்களுக்கு அப்புறம் உங்க பாதம் என் வலைப்பக்கம். நன்றி!

நிலாரசிகன் said...

கடைசி வரிகள் அருமை.

கயல் said...

நன்றி நண்பரே!

நாமக்கல் சிபி said...

அருமை!

வாலோடு வா ன்னு கூப்பிட்டா ஆஞ்சநேயர்தான் வரணும்

கயல் said...

சிபியண்ணா நீங்க ....

சிரிச்சி முடியலை!

:)))

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!