Wednesday, February 3, 2010

வெளிச்சம் போர்த்தாத இரவுகள்






திரியோடு உனக்கென்ன சம்பந்தம்?
உடன் எரியும் அளவுக்கு!
விளக்கோடு விளையாடும்
விட்டில் பூச்சி!

மிருகம் மாறி மனிதன் ஆனதாய்...
பின் எப்படி,
ஒரு கொசுவின் சீண்டலில்
சட்டென சாத்தான் பிரவேசம்?
ஓ! உன் பலம் எப்போதும்
இளைத்தவனிடத்தில் மட்டும்!

இருள் இரவின் அழகு!
நிலவொளியில் பூமி
வார்த்தைக்கு எட்டாத சோபிதம்!
வெளிச்சம் போர்த்தாத
நகரத்து இரவுகள்
மின்வெட்டு உபயத்தில்!

அய்யோ! அது என்ன?
ஒரு விண்மீன் தற்கொலை!
படபடப்பை போக்க
'பச்சை மரத்தைப் பார்'
தோழி சொன்னாள்!
விழுந்ததின் தடம் எப்படியிருக்கும்
விபரீத மூளையில் வானாராய்ச்சி!

தூக்கத்தோடு துக்கத்தின்
சாயலும் அறவே அகன்றது
மேகத்தின் பூந்துவலை துவட்டலில்
நாணமுறும் பெண்மகவாய்
வெண்ணிலவை பார்க்குகையில்.....

மின்பொறிக்குள் அடங்காத
இயற்கையின் ஆளுமை!
தென்றலாய்,இருளாய்,
த‌ண்ணொளியாய்...
சொகுசான வாழ்க்கை
இதுவரை
தொலைத்தது இயற்கை
நிரம்பிய வாழ்க்கை எனப்பட்டது
சில்வண்டுகளின் ரீங்காரத்தோடு
மின்மினிப் பூச்சிகளின்
ஊர்வலத்தை காணும் போதில்!

12 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

மேகத்தின் பூந்துவலை துவட்டலில்
நாணமுறும் பெண்மகவாய்
வெண்ணிலவை பார்க்குகையில்.....
//

ம்ம்ம்

அருமை கயலு

//மின்பொறிக்குள் அடங்காத
இயற்கையின் ஆளுமை!
தென்றலாய்,இருளாய்,
த‌ண்ணொளியாய்...
சொகுசான வாழ்க்கை
இதுவரை
தொலைத்தது இயற்கை
நிரம்பிய வாழ்க்கை எனப்பட்டது
சில்வண்டுகளின் ரீங்காரத்தோடு
மின்மினிப் பூச்சிகளின்
ஊர்வலத்தை காணும் போதில்!//

இந்தவரிகள் எழுதி முடிக்க எவ்வளவு நேரமாச்சு எப்படியெல்லாம் கற்பனை பண்ணியிருக்கீங்க ரொம்ப பிடிச்சுருக்கு கவிதை...

பழமைபேசி said...

நேர்த்தியா வந்திருக்கு

கவி அழகன் said...

கவிதை... supper

கயல் said...

நன்றி வசந்த்!

கயல் said...

சென்னையில இது கொசுக்காலம்!
இந்த கொடுமயில் கரண்டு வேற போச்சுன்னா? பூர்வ ஜென்மமே ஞாபகம் வருது! நாலு வரி கவிதை வராதா?

கயல் said...

நன்றி ஆசானே

கயல் said...

//கவிக்கிழவன் said...
கவிதை... supper
//

முதல் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி!!

ப்ரியமுடன் வசந்த் said...

அடியாத்தி சென்னைல இப்போ மட்டுமா எப்பயுமே கொசுக்காலம்தானே ம்க்கும்...

ஓஹ் கொசுக்கடி தாங்க முடியாம எழுதுனதா?

பி,கு, இந்த கொசுக்கடி தாங்கமுடியலடா நாராயணான்னு பதில் சொல்லப்படாது ஆமா

நசரேயன் said...

//அய்யோ! அது என்ன?
ஒரு விண்மீன் தற்கொலை!
படபடப்பை போக்க
'பச்சை மரத்தைப் பார்'
தோழி சொன்னாள்!//

உடனே நீங்க பச்ச.. பச்சை ன்னு சொன்னீங்களா

கயல் said...

//
அடியாத்தி சென்னைல இப்போ மட்டுமா எப்பயுமே கொசுக்காலம்தானே ம்க்கும்...

ஓஹ் கொசுக்கடி தாங்க முடியாம எழுதுனதா?

பி,கு, இந்த கொசுக்கடி தாங்கமுடியலடா நாராயணான்னு பதில் சொல்லப்படாது ஆமா
//

நாராயணா!!!!!!!!!!!!!

கயல் said...

//
நசரேயன் said...
//அய்யோ! அது என்ன?
ஒரு விண்மீன் தற்கொலை!
படபடப்பை போக்க
'பச்சை மரத்தைப் பார்'
தோழி சொன்னாள்!//

உடனே நீங்க பச்ச.. பச்சை ன்னு சொன்னீங்களா
//

பார்க்கத்தானே சொன்னா? கத்தவா சொன்னா?
அதுவுமில்லாம‌ இடிவிழ‌ற‌ப்போ தானே 'அர்ஜீனா! அர்ஜுனான்னு' கூப்பிடுவாக‌! என்ன‌ இந்த‌ அண்ணாச்சி என்ன‌மோ சொல்லுறாரு!

கயல் said...

நன்றி அர்ஜீன்!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!