Saturday, February 13, 2010

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு

எங்க‌ இவ‌ர‌ காணோமுன்னு தேடுற நெறய பேருக்கு இவரு காணாம போயிட்டாருங்குறத தெரியப்படுத்துற பதிவு! பாத்து கவனமா படிங்க சாமி!

பெயர் : பசுநேசர் திரு இராமராஜர் அவர்கள்

வயது : நேத்து தான் 16 முடிஞ்சி இன்னிக்கு 17 ஆரம்பிச்சிருக்கு

அடையாளம் : காணாமல் போன அன்று ஒப்பனை இல்லாததால் அடையாளம் காண்பது கடினம்.குத்து மதிப்பாய் இப்படி இருந்தார் எனக் கொள்க!(1/2 அங்குலம் ஒப்பனையோடு கற்பனை செய்துக்கோங்க!)மேலதிக தகவல் : பாராளு மன்ற உறுப்பினராக இருந்தார் (வயசு(?) எங்கயோ உதைக்குதுல்ல! இவுரு தமிழ் சினிமா பிரபலமுங்கோ!) எனவும், மக்கள் சேவை செய்வதாய் சொல்லி அங்கே போய், மத்தியான நேரங்களில் குறட்டை விட்டு சபையின் செயல்பாட்டை கெடுத்த குற்றத்துக்கு அவைத் தலைவர் பசுநேசர் நடித்து(சொதப்பிய) படங்களை ஆயுள் முழுவதும் பார்க்க கட்டளையிட்டார் எனவும் அறியப்படுகிறது.ஒரு நாள் இரவுக்குள் முழுக்க முழுக்க மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

தனித்திறமைகள் :

1. நடிப்பெனும் பெயரால் இரத்தமின்றி கொலை செய்ய இவரால் மட்டுமே முடியும்
2. சேர்ந்து நடிக்கும் கதாநாயகிக்கும் சேர்த்து தானே ந‌ளின‌த்துட‌ன் ந‌டிக்க‌த் தகுந்த‌ சிற‌ந்த‌ ந‌டி(கை)க‌ன்.
3. குடுத்த‌ கூலிக்கு மேலாய் கூவுவ‌து இவ‌ர‌து வ‌ழ‌க்க‌ம்.
4. கரகாட்டம் கூட சரியா வராதுன்னு கேள்வி!
5. உதட்டுச் சாயம் தயாரிக்கும் நிறுவனங்கள் இவரை அணுகலாம் விளம்பரத்துக்கு!

பின்குறிப்பு:

மொக்கை பதிவு கேட்ட வாசக உள்ளங்களுக்கு சமர்ப்பணம்!!

18 comments:

பழமைபேசி said...

அஃகஃகா! இப்படிக்கூட எழுதத் தெரியுமா உங்களுக்கு?

பழமைபேசி said...

மொக்கைப் பதிவுன்னா, எழுத்துப் பிழைகள் இருக்கலாமோ? போங்க, போயி சரி செய்யுங்க.... இஃகி! எப்பூடி??

அனுகலாம் ???
சமர்பணம்??

SUREஷ் (பழனியிலிருந்து) said...

எங்கள் இதய சிம்மாசனத்தை எட்டிப் பாருங்கள். அண்ணன் வீற்றீருப்பது புலப்படும்.,

கயல் said...

//
பழமைபேசி said...
அஃகஃகா! இப்படிக்கூட எழுதத் தெரியுமா உங்களுக்கு?
//

அட‌ பாருங்க‌ப்பா! ந‌ம்ம‌ள‌ ப‌த்தி ரொம்ப‌ த‌ப்பா நென‌ச்சுட்டாக‌ போல‌!
அட‌க்கி வாசிக்கிற‌துனால‌ இப்ப‌டி ஒரு ... ச‌ரி எல்லாம் ந‌ல்லது தான்!

//
பழமைபேசி said...
மொக்கைப் பதிவுன்னா, எழுத்துப் பிழைகள் இருக்கலாமோ? போங்க, போயி சரி செய்யுங்க.... இஃகி! எப்பூடி??

அனுகலாம் ???
சமர்பணம்??
//

இதுல‌யுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
ம்ம்! ச‌ரி செஞ்சாச்சு! ச‌ரி செஞ்சாச்சு!

கயல் said...

//

SUREஷ் (பழனியிலிருந்து) said...
எங்கள் இதய சிம்மாசனத்தை எட்டிப் பாருங்கள். அண்ணன் வீற்றீருப்பது புலப்படும்.,

//

வாங்க சுரேஷ்! நீங்க பசுநேசர் ர‌சிக‌ர் ம‌ன்ற‌ த‌லைவ‌ரா என்ன‌? காத‌லி உக்கார வேண்டிய சிம்மாசனத்துல இவ‌ர‌ வ‌ச்சிருக்கீக‌ளேன்னு கேட்டேன்! கோச்சுக்காதீக‌ப்பு!

அண்ணாமலையான் said...

கயலா? கொக்கா? சும்மா கலக்குறீங்க கயலு.. பட்டய கெளப்புங்க....

கயல் said...

//
அண்ணாமலையான் said...
கயலா? கொக்கா? சும்மா கலக்குறீங்க கயலு.. பட்டய கெளப்புங்க....
//
வாங்க‌ அண்ணாம‌லையான்! என்னத்த போங்க .... ஓட்டு சேர மாட்டேங்குதே!

நேசமித்ரன் said...

ம்ம் ரைட்டு :)

பிரியமுடன்...வசந்த் said...

//1. நடிப்பெனும் பெயரால் இரத்தமின்றி கொலை செய்ய இவரால் மட்டுமே முடியும்//

யாருப்பா இது தலைவரப்பத்தி தப்பா பேசுனது மெட்ராஸ் பூரா பஸ்ஸூ லாரி அம்புட்டயும் அடிச்சு நொறுக்குங்கடா

தமிழ்நாட்டுல நம்ம இனம் ஒருத்தர் விடாம அம்புட்டுபேரையும் கூட்டிவந்து மாநாடு கூட்டி இந்தபுள்ளைய மன்னிப்பு கேக்க வைங்கடா

இவன்

அலங்காநல்லூர் அன்னப்பராசு வீட்டு பசு...

:))))

கயல் said...

//

நேசமித்ரன் said...
ம்ம் ரைட்டு :)
//

இஃகி!!

இஃகி!! அடியாத்தீ! நா என்ன தப்பா சொல்லிப்புட்டேன்? 'பசு' சாருக்கு இம்புட்டு கோவம? பசுநேசர்,ராமராஜர் ந்னு எம்புட்டு மருவாத தந்திருக்கேன்! இந்த வசந்து பேச்ச கேக்காதீக சார்! உங்க‌ கிட்ட‌ அவ‌ரு த‌ப்பா மொழி பெய‌ர்த்துட்டாரு! ச‌மாதான‌மா போயிருவோம்.கெள‌ம்பிறாதீக‌ய்யா! கெள‌ம்பிறாதீக‌....

கலகலப்ரியா said...

யாருய்யா மொக்கைப் பதிவு கேட்டது நம்ம கயல் கிட்ட.... எனக்கு கழுத்தெல்லாம் ரத்தம்... =))... கலக்கல் கயல்...=)).. அது என்ன அல்லாரையும் விட்டுப்புட்டு இவுக மேல இம்பூட்டு பாசம்.. ம்ம்.. =))

ஆத்தா ........ நா பாஸாயிட்டேன்! எதையும் தாங்குற எங்க பிரியாவுக்கே கழுத்துல ரத்தம் வந்திருச்சாம்...
நீ வச்ச மொக்கை பதிவர் தேர்வுல நா பாஸா....யிட்டேன்!

கமலேஷ் said...

இந்த தடவை வித்தியாசமா ட்ரை பண்ணி இருக்கீங்க...

ஆனால் ஆனந்த விகடன்ல ஒரு சில வருசத்துக்கு முந்தி "விதை நெல்லை தொலைத்தவன் நான்" அப்படிங்கிற தலைப்புல ராமராஜனோட நேர் கானல் ஓன்று படித்தேன். அதுல வாழ்க்கைல தன்னோட சின்ன சின்ன அலட்சிய போக்கால தினம் ஒரு வேலை சோத்துக்கு கூட இப்ப வழி இல்லாம யாருகிட்டயாவது எதாவது கிடைக்குமான்னு ஒரு சின்ன அறைக்குள்ள அழுது கிட்ட இருந்த அவரோட குரல் பதிவாகி இருந்தது....எந்த ஒரு கலைஞனுக்கு அந்த நிலைமை வர கூடாதுன்னு தோணிச்சு...அதனால உங்களோட நகைசுவையை என்னால முழுசா ரசிக்க முடியல...(உங்கள எதுவும் தப்பா சொல்றதா நினட்சிராதிங்க சும்மா உங்களோட இந்த விசயத்தை பகிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது...அவ்வளவுதான் )

கயல் said...

என்னோட விளையாட்டு இப்படி காயப்படுத்தும் சிலரைன்னு தெரியாம போச்சு! எழுதறப்பவே கொஞ்சம் உறுத்தல் ... ம்ம்! இனியாவது மனச்சாட்சி பேச்ச கேக்கணும்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அச்சோ எம் ஜி ஆர் ஃபார்முலாவை பாலோ பண்ணதுக்காகவா இப்படிச் சொல்றீங்க.. :)

அவரைப்பத்திய செய்திய மேலே பின்னூட்டத்தில் படிச்சு வருத்தமா போச்சு..

கயல் said...

//
முத்துலெட்சுமி/muthuletchumi said...
அச்சோ எம் ஜி ஆர் ஃபார்முலாவை பாலோ பண்ணதுக்காகவா இப்படிச் சொல்றீங்க.. :)

அவரைப்பத்திய செய்திய மேலே பின்னூட்டத்தில் படிச்சு வருத்தமா போச்சு..
//

:((

நாமக்கல் சிபி said...

நல்லதொரு கலைஞன்!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!