கன்னித் தமிழுக்கு
களங்கம் அழித்துவிடு
தலைப்பை!
நில் மனச்சாட்சி!
இப்படி சொல்வோரும்
உளரேயெனும் கருத்தறிவித்தலிது!
அமைதி காக்க!
சாதி ஒழியவும்
சுதந்திரம் பேணவும்
சமூகம் மாறவும்
பாடின இறவா கவிகள்
எல்லாமும்
பழுதாய் போனதாம்!
வர்க்க பேதம்
மொழியியல் கூற்று
பொருளாதார சமச்சீர்
இப்படி எல்லாம் சொன்னால்?
இல்லவே இல்லை
நீ முன்னேற வழியேயில்லை!
சில பதிவுலக பெருந்தகைகள்
பரிந்துரைத்த படைப்பு வரையறை!
எண்ணிக்கையிலடங்கும்
சிலபல வார்த்தைகள்
நம் மொழி பிற மொழி
இழைய இழைய
காதல் கலந்த காமம்
கூடவே
எதுகையும் மோனையும்,
ம்ம்! இப்படி இருக்கனும்
கவிதை பக்குவம்!
கவனிக்க!
மேற்படி
கவிதை சமைத்தலில்
கருத்தே இல்லை
எப்படிச் சொல்ல?
புதியன புகுதல்
நலமேயாயினும்
பழையன அழித்தல்
நலமா?
பொட்டி தட்டி
பிழைப்பது எம்மொழியில்?
அடுத்த கேள்வி!
என் நிலை
விரக்தியோடு நகைப்புக்குரியது
பிழைப்பு வாழ்வுக்காக
பிழைப்பே வாழ்வல்லவே
அடுத்த மொழியை
அழிப்பதோ தவிர்ப்பதோவல்ல
என் வாதம்
தமிழருக்குள்ளாவது எம் மொழி
தழைக்கட்டுமே
இடுகையோ மறுமொழியோ
இயன்றவரை தமிழில்
முயலுங்களேன்
தமிழனே தமிழை
தள்ளி வைத்தால்......
களங்கம் அழித்துவிடு
தலைப்பை!
நில் மனச்சாட்சி!
இப்படி சொல்வோரும்
உளரேயெனும் கருத்தறிவித்தலிது!
அமைதி காக்க!
சாதி ஒழியவும்
சுதந்திரம் பேணவும்
சமூகம் மாறவும்
பாடின இறவா கவிகள்
எல்லாமும்
பழுதாய் போனதாம்!
வர்க்க பேதம்
மொழியியல் கூற்று
பொருளாதார சமச்சீர்
இப்படி எல்லாம் சொன்னால்?
இல்லவே இல்லை
நீ முன்னேற வழியேயில்லை!
சில பதிவுலக பெருந்தகைகள்
பரிந்துரைத்த படைப்பு வரையறை!
எண்ணிக்கையிலடங்கும்
சிலபல வார்த்தைகள்
நம் மொழி பிற மொழி
இழைய இழைய
காதல் கலந்த காமம்
கூடவே
எதுகையும் மோனையும்,
ம்ம்! இப்படி இருக்கனும்
கவிதை பக்குவம்!
கவனிக்க!
மேற்படி
கவிதை சமைத்தலில்
கருத்தே இல்லை
எப்படிச் சொல்ல?
புதியன புகுதல்
நலமேயாயினும்
பழையன அழித்தல்
நலமா?
பொட்டி தட்டி
பிழைப்பது எம்மொழியில்?
அடுத்த கேள்வி!
என் நிலை
விரக்தியோடு நகைப்புக்குரியது
பிழைப்பு வாழ்வுக்காக
பிழைப்பே வாழ்வல்லவே
அடுத்த மொழியை
அழிப்பதோ தவிர்ப்பதோவல்ல
என் வாதம்
தமிழருக்குள்ளாவது எம் மொழி
தழைக்கட்டுமே
இடுகையோ மறுமொழியோ
இயன்றவரை தமிழில்
முயலுங்களேன்
தமிழனே தமிழை
தள்ளி வைத்தால்......
7 comments:
//அடுத்த மொழியை
அழிப்பதோ தவிர்ப்பதோவல்ல
என் வாதம்
தமிழருக்குள்ளாவது எம் மொழி
தழைக்கட்டுமே!//
சரியாக சொல்லி இருக்கிறீர்கள். என்னை மாதிரி தமிழ் தவிர வேறு மொழி அறியாதவர்களுக்காகவாவது தமிழர்கள் தமிழிலேயே உரையாட வேண்டும். :)
அருமை கயல்.. !
கடைசி வரிகள் மிக அருமை!
நம்மை நாமே தாழ்த்தி வாழும் இழி நிலை விரைவில் நீங்கட்டும்.
வாய்ப்பு நேரும்போதெல்லாம் நம் மொழியில் உரையாடுவோம்.
நாம் அறிந்தவற்றை நம் தமிழில் பதிவு செய்வோம்!
//அடுத்த மொழியை
அழிப்பதோ தவிர்ப்பதோவல்ல
என் வாதம்
தமிழருக்குள்ளாவது எம் மொழி
தழைக்கட்டுமே!//
சரியாக சொல்லி இருக்கிறீர்கள். என்னை மாதிரி தமிழ் தவிர வேறு மொழி அறியாதவர்களுக்காகவாவது தமிழர்கள் தமிழிலேயே உரையாட வேண்டும். :)
//
அடிக்கடி வாங்க! உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க!
நன்றி!
//
கலகலப்ரியா said...
அருமை கயல்.. !
//
நன்றி பிரியா!
ஆமாம்! அந்த நிலை மாறனும்!!வருகைக்கு நன்றிங்க!!
//
ஆமாம்! தமிழில் பேசுவது தரக்குறைவு எனும் நிலை மாறனும்!அதாங்க என் ஆசையும்!வருகைக்கு நன்றிங்க!!
Migavum arumai. Ungalin melana karthukalai edhir paarkiren, Neram irundhal ennudaiya kavithaigalai padithu vittu ungaladhu karuthukkalai padhikkavum.
http://aprajithaa.blogspot.com/
Post a Comment