பல தலைமுறைகள் தழைக்க சில ஆணிவேர்கள் அடித்தளமாய் புதைபடுவது வழக்கம்.பெரும்பாலும் அவர்கள் பெண்களாயிருப்பதும்,அதனாலே அவர்கள், கால மாற்றத்தில் மறக்கப்படுவதும் வழக்கம்.எத்தனை வீட்டில் இன்றைக்கும் முன்னோர் வழிபாடு சாத்தியம்? சில பகிர்தல்,சில நினைவு கூறல் என இந்த 'சில' விசயங்கள் குடும்ப அங்கத்தினருக்கிடையே விரிசலில்லாத உறவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
கதை கேட்க ஆரம்பித்த நாட்களில்,கறிகாய் நறுக்கியபடியோ,பூ தொடுத்தபடியோ,சோறு ஊட்டியபடியோ இருக்கும் அப்பத்தாவின் அருகாமையோடு,அவளின் பொக்கை வாய் அசைப்புக்கு அடிமையாயிருந்த காலங்கள், அவள் கதைய அவள் சொல்லிக் கேட்டு மெய்மறந்த நாட்கள், எத்தனை தவம் கிடந்தாலும் இனி கிடைக்கப் போவது இல்லை.சிலரின் பாதிப்பு நமக்கு தெரியாமலே நமக்குள் நம்மோடு கலந்து விடுவது தவிர்க்க முடியாதது. அதை நினைவு கூறுதல் அவர்களோடு சில கணங்கள் வாழச் செய்கிற முயற்சி. அப்படியாக இதுவும்......
"அப்பத்தா!"
அப்பவோட அம்மாவ நாங்க இப்படித் தான் கூப்பிடுவோம்.
வாழக் கத்துக் கொடுத்து,தனக்கே தெரியாம, எனக்கு வாய்மை,நேர்மை,உழைப்பு, அது தரும் வலிமையென(!)[சரி,சரி .....] பெரிய பெரிய விசயங்களை எல்லாம் சாதாரண விளக்கத்துடனே, அடித்தளமிட்டு போன அப்பாத்தா தான் இப்பவும் எப்பவும் எனக்கு பிடிச்ச கதாநாயகி.
சரி வாங்க. நம்ம கதாநாயகிய பத்தி தெரிஞ்சுக்கலாம்.
சின்ன வயசுலேயே அம்மா அப்பா இல்லாம அம்மான்(தாய்மாமன்) தயவுல உசுர காப்பாத்திக்க வேண்டிய கட்டாயம். அம்மானோட ஆறு பொண்ணுகளோட ஏழாவது பொண்ணா,கடைசிப் பொண்ணா வளர்ந்த அப்பத்தா சோத்துக்கு கையேந்துனாலும் சீமைக்கு மகாராணி கணக்கா. அப்படி ஒரு அழகு. அழகுக்கு தகுந்த மாதிரி தான் பேரும். ஆமா அவ பேரு,"பொன்னழகி".
அஞ்சு பொண்ணு பெத்தா அரசனும் ஆண்டி. ஆனா, இவுங்க வீட்டுலயோ ஏழு பொண்ணு.கஷ்ட ஜீவனத்துல எப்படி கரையேத்த போறோம்னு கவல கொண்டப்போ,சின்னவ பொன்னழகி,'ஏன் கலங்குறே? நான் இருக்கேன்னு. என்னக்கும் ஆம்பளப்புள்ள இல்லாத இந்த வீட்டுக்கு நான் தான் எல்லாமுன்னு சொல்ல,பூரிச்சு போன அவளோட அம்மான் சாகுற வரைக்கும் 'அழகா.அழகா.' ன்னு தான் கூப்பிடுவாராம்.
வெறும் வாய்பந்தல் கட்டி பந்தி போடுற ரகமில்ல நம்ம அழகி.சிதறாம திங்கிற சோத்துலயும்,அதிராம பேசுற வார்த்தையிலயும் பெண்ணோட பண்பாடு தெரியுமுன்னு சொல்லுவாங்க.அதுலயும் நிதானிச்சு சொல்லுற கனிவான வார்த்த,எப்படிப்பட்டவங்களயும் கிட்ட சேத்துடும். நம்ம அழகியும் அப்படிப்பட்ட அதிசய தெறமக்காரி.அரைக்காணி நிலத்துல அக்கா தங்கச்சிங்க ஏழு பேரும் அப்பனுக்கு துணையா விவசாயம் பாக்குறாங்க. சுத்து பத்து எட்டு ஊரிலேயும் இவங்க வெள்ளாம காய்கறி தானாம் எல்லார் வீட்டு சமையலுக்கும்.அதுல வர்ற வருமானம் தான் குமரிங்களுக்கு 'சிறுவாடு'. இவ கட்டுட்சிட்டால பட்டி, தொழுவுன்னு அம்மான் வீடு பல்கிப் பெருகுது.
அவ சிந்துன வேர்வைக்கு பலனா, போதும் போதுமுங்குற அளவுக்கு தந்தா பூமாதேவி. தான் ஆறு மக்களையும் மகளா பாக்குற அம்மான், இவள மட்டும் தான் மகனா பாப்பாராம்.துரு துருன்னு வார்த்தைக்கு வார்த்த தைரியம் சொல்லிக்கிட்டு திரியுற இவள பாக்குறவுக,அப்பிடியே அசந்து போவாக. மனசுல இருக்க வைராக்கியம், கண்ணுல தெரிஞ்சாலும், பெண்மைக்கான அத்தன அம்சமும் அமைஞ்ச பேரழகி. வார்த்தையில இருக்குற மென்மையும், பூமி நோகாம நடக்குற பதவிசும், கண்டவங்க அத்தனை பேரையும் மயக்கிப்புடும்.
ஏழு பேரு அழகுக்கும், குணத்துக்கும் ஒழச்சு பொழக்கிற தன்மானத்துக்கும் ஆசப் பட்டு சீரு கொடுத்து கட்டிக் கிட்டு போனாங்களாம்(!). அந்தா இந்தான்னு ஆச்சு. அஞ்சு பொண்ண கரையேத்தின கையோட அவளோட அயித்த காரியும் காட்டோட போயிட்டாளாம்.அம்மா முகமே தெரியாதவளுக்கு எல்லாமா இருந்தவ போனதும், நிலைகுழைஞ்சு போனா அழகி.
மீத ரெண்டு பேரையும் என்ன செய்யிறதுண்ணு தெரியல அம்மானுக்கு. வீட்டுல ஒருத்தி இருந்து காவாந்து பண்ணுற சாமர்த்தியம் ஆம்பளைக்கு வருமா? என்ன பண்ண போறோமுன்னு மலைச்சு போயி நிக்கிறாரு. அப்பவும் 'வெசனப்படாத. நான் பாத்துகிறேன்னு' ன்னு ஆறுதல் சொல்லுறா அழகி.
வாற வைகாசிக்குள்ள ரெண்டு பேரையும் தள்ளி விட்டுறதுன்னு முடிவு பண்ணி, மும்முரமா வேல நடக்குது. தானும் போயிட்டா அம்மானுக்கு யாரு பொங்கிப் போடுவான்னு தவியா தவிக்கிறா அழகி.ஆச்சு,முன்ன இருக்கவளுக்கு பட்டமங்கலத்துல நல்லபடியா அமைஞ்சு போச்சு. இப்போ தான் அம்மானுக்கு பொறி தட்டுது. ஆயி அப்பனில்லாத புள்ள, யாரோ மொரடனுக்கிட்ட குடுத்துட்டு நாம கண்ண மூடிட்டா,அனாத புள்ள வாழ்க்கைய கெடுத்த பாவம் சேருமேன்னு, தான் மக்கள காட்டிலும் நல்ல மாப்பிள்ளைக்கு வலை வீசி தேடுறாரு. ஒரு வருசம் கழிச்சு,'ஒரு மாப்பிள்ள வந்திருக்கு. வந்து முடிச்சு குடுத்துருங்கன்னு தன் மகள்களுக்கு தகவல் அனுப்புறாரு.எல்லாரும் சபை நிறக்க வந்து நிக்கிறாங்க.அழகி 'கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்'னு அடம்புடிக்கிறா.இவ பேச்ச யாரும் செவிட்டுலேயே போட்டுக்கல.
எல்லாரும் வந்துட்டாங்க. மாப்பிள்ளையும் வாறாரு.அக்கா தங்கச்சி அத்தன பேருக்கும் அடங்காத கோவம் அவர பாத்தவுடனே. 'தங்கச்செல கணக்கா தங்கச்சிக்கு நெய்வேலி கரி கணக்கா மாப்பிள்ளயா? இவனையா வலை போட்டு தேடீனீரு?'ன்னு ஒரே பிடி பிடிக்குறாளுக அப்பார. அது மட்டுமா? மூத்தவளோட புருஷன் சொன்னது கேட்டு அத்தன பேரும் செலையா நிக்கிறாளுக.
சங்கதி இது தான் அழகி,அந்த மாப்பிள்ளைக்கு ரெண்டாந்தாரம்.மொத தாரம் நோவால மாண்டு போனதுல மனசொடிஞ்சு சீமைக்கு போன மகன் திரும்பி வரவும்,கண்ணாலம் கட்டி வச்சு,இங்கயே தங்க வக்க ஆத்தாகாரி ஆசப்படுறா. எல்லாம் நியாயந்தான். ஆனா அழகிக்கு இது அநியாயந்தானே.
<=====அழகி புராணம் தொடரும்====>
19 comments:
Good story. Man vasanaiyulla kathai
தொடருங்கள்... நல்லா இருக்கு...
அமுச்சி கதை சொல்றா மாதிரி இருக்குங்க...
எங்க அம்முச்சி கதையை கொஞ்ச நாள் மின்னாடிதான் எழுதினேன். தொடருங்க. நல்லாருக்கு.
நல்லா இருக்குங்க....
எனக்கு தொடர்கதை படிக்கறதுல அவ்வளவா நாட்டம் இல்லைங்க, முழுசா எழுதி முடிச்சதும் கண்டிப்பா மொதல்லேந்து படிச்சிடறேன்.....
(பாதில விட்டுடாதிங்க, இது நல்லா இருக்கு )
நன்றி,
தென்னவன் ராமலிங்கம்.
புதிய செய்திகளை வாசிக்கவும் புதிய பாடல்களையும் தரவிறக்கம் செய்யவும்
www.tamljournal.com
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
நல்லா இருக்கு
//
Deiva said...
Good story. Man vasanaiyulla kathai
//
நன்றிங்க!
//
பழமைபேசி said...
தொடருங்கள்... நல்லா இருக்கு...
அமுச்சி கதை சொல்றா மாதிரி இருக்குங்க...
//
ரொம்ப சந்தோசமுங்க!
//
சின்ன அம்மிணி said...
எங்க அம்முச்சி கதையை கொஞ்ச நாள் மின்னாடிதான் எழுதினேன். தொடருங்க. நல்லாருக்கு.
//
அப்படியா? கட்டாயம் படிக்கிறேனுங்க!
//
தென்னவன். said...
நல்லா இருக்குங்க....
எனக்கு தொடர்கதை படிக்கறதுல அவ்வளவா நாட்டம் இல்லைங்க, முழுசா எழுதி முடிச்சதும் கண்டிப்பா மொதல்லேந்து படிச்சிடறேன்.....
(பாதில விட்டுடாதிங்க, இது நல்லா இருக்கு )
நன்றி,
தென்னவன் ராமலிங்கம்.
//
சரிங்க!வருகைக்கு நன்றிங்க!
//
வானம்பாடிகள் said...
நல்லா இருக்கு
//
வருகைக்கு நன்றிங்க!
அன்பின் கயல்விழி
அப்பத்தா எனக்குப் பிடித்த சொல் - உறவு
பொன்னழகி - அம்மான் வீடு - கதை அழகாகச் செல்கிறது- தொடர்க புராணம்
நல்வாழ்த்துகள் கயல்விழி
வணக்கம்.
கதயோட ஒன்றிப்போகவக்கும் எழுத்துநடை...நல்லா இருக்குங்க...
//
cheena (சீனா) said...
அன்பின் கயல்விழி
அப்பத்தா எனக்குப் பிடித்த சொல் - உறவு
பொன்னழகி - அம்மான் வீடு - கதை அழகாகச் செல்கிறது- தொடர்க புராணம்
நல்வாழ்த்துகள் கயல்விழி
//
நன்றி நண்பரே!
//
ஜெரி ஈசானந்தா. said...
வணக்கம்.
//
வருகைக்கு நன்றி ஜெரி!
//
kannaki said...
கதயோட ஒன்றிப்போகவக்கும் எழுத்துநடை...நல்லா இருக்குங்க...
//
ஆமாங்க! அது தான் பரீட்சையே! பாஸாகனும்னு வாழ்த்துங்க!
Post a Comment