Friday, September 4, 2009

சாலையோர‌த்தில் இருந்தபடி .....

இருட்டுப் போர்வைக்குள்
பொத்தல் வெளிச்ச‌ம்
ந‌டுநிசி வானில்
விண்மீன் ப‌ர‌வ‌ல்!

**********

பாதியாய்
நெளித்த‌
அலுமினிய‌ த‌ட்டாய்
வ‌ள‌ர்பிறை ச‌ந்திர‌ன்!

**********

பிச்சையாய்
ஒற்றை ரூபாய்
ஒளிய‌றியா முக‌த்தில்
ஆயிர‌ம் மின்ன‌ல் கீற்று!

**********

உறுமும்
இடிமுழக்கம்
அதீத பசியில்
அர‌ற்றும் அடிவ‌யிறு!

**********

மழைக்குறி
கண்டு
அடைக்கலம் தேடி
அங்குமிங்கும் அலைந்தபடி
மேகக்கூட்டம்!

**********

வெட
‌வெட‌க்கும் குளிர்
கைதட்டி ம‌கிழும்
க‌ந்த‌லாடைச் சிறுமி
தேங்கிய ம‌ழைநீரில்
தள்ளாடிப் பயணிக்கும்
காகித‌க் க‌ப்ப‌ல்!

**********

‌ழையே வேண்டாம்
இப்ப‌டிக்கு கூரையில்லா
குடிசைவாசி!

**********

13 comments:

vasu balaji said...

/ம‌ழையே வேண்டாம்
இப்ப‌டிக்கு கூரையில்லா
குடிசைவாசி!/

ந‌ச்
/பிச்சையாய் ஒற்றை ரூபாய்
ஒளிய‌றியா முக‌த்தில்
ஆயிர‌ம் மின்ன‌ல் கீற்று!/
நல்லருக்கு

/உறுமும் இடிமுழக்கம்
அதீத பசியில்
அர‌ற்றும் அடிவ‌யிறு! /

அருமை.

கலகலப்ரியா said...

v.good kayal.. keep it up.. some of them are touchy..! (sry thoonga pora neram.. tamilla type panna mudiyala.. :D)

சங்கரராம் said...

மழைக்குறி கண்டு
அடைக்கலம் தேடி
அங்குமிங்கும் அலைந்தபடி
மேகக்கூட்டம்!
நல்ல கற்பனை

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

கயல் said...

//
வானம்பாடிகள் said...
/ம‌ழையே வேண்டாம்
இப்ப‌டிக்கு கூரையில்லா
குடிசைவாசி!/

ந‌ச்
/பிச்சையாய் ஒற்றை ரூபாய்
ஒளிய‌றியா முக‌த்தில்
ஆயிர‌ம் மின்ன‌ல் கீற்று!/
நல்லருக்கு

/உறுமும் இடிமுழக்கம்
அதீத பசியில்
அர‌ற்றும் அடிவ‌யிறு! /

அருமை.
//
நன்றி!

கயல் said...

நன்றி கலகலப்பிரியா!

கயல் said...

//

பழமைபேசி said...
100/100

//
ஐ! நெசமாவா?

கயல் said...

//
சங்கரராம் said...
மழைக்குறி கண்டு
அடைக்கலம் தேடி
அங்குமிங்கும் அலைந்தபடி
மேகக்கூட்டம்!
நல்ல கற்பனை
//

வருகைக்கு நன்றி!

கருணாகார்த்திகேயன் said...

கயல் ... அமைதி தேடி வந்தா ஒரே " சோகம் , கோபம் , விரக்தி..."
உன் வரியில் சொல்லனும்முன

" வீனையின் நாதம் ஏழையின் ....."

நான் இன்னும் ஏழை..

பதிவுக்குள்ள மனசு லையிக்கவில்லை.....


அன்புடன்
கருணாகார்த்திகேயன்

தமிழ் said...

அருமை

கயல் said...

//
கார்த்திகேயன். கருணாநிதி said...
கயல் ... அமைதி தேடி வந்தா ஒரே " சோகம் , கோபம் , விரக்தி..."
உன் வரியில் சொல்லனும்முன

" வீனையின் நாதம் ஏழையின் ....."

நான் இன்னும் ஏழை..

பதிவுக்குள்ள மனசு லையிக்கவில்லை.....


அன்புடன்
கருணாகார்த்திகேயன்
//
இது எல்லாம் ஏழையோட‌ ஒப்பாரி தானே! ச‌ரி மாத்தி எழுதுறேன்!

கயல் said...

//
திகழ் said...
அருமை

January 8, 2010
//


வாங்க‌ திக‌ழ்! ந‌ன்றி!

jeyippom said...

Arumaiyaana pathivu

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!