அஹிம்சை தத்துவம்
உற்று நோக்கு!
உடன்படுவதில் உறுத்தலிருந்தால்
உடனே அகன்றுவிடு!!
கட்டளையிட்டார் மகாத்மா
அனைத்துக்கட்சி மாநாட்டில்!
கண நேரத்தில்
காலியானது சபை!
நம்பிக்கையில்லா தீர்மானம்
இந்தியனே!வராதே !
எங்கள் எல்லைக்குள்!
பகுத்தலும் பாகுபாடும்
ஒட்டிக்கொள்ளும் எங்களுக்கும்!
-
இப்படிக்கு
பிரிவினையற்ற இந்திய மிருகங்கள்,
காட்டு இலாகா, இந்திய காடுகள்.
குடிசை மாற்று வாரியம்
குடிசைகள் இருந்த இடம்
கொழுத்த பணத்தில்
குபேர மாளிகைகளாய்!
குடிசைவாசிகள் அனைவரும்
தெருவாசிகளாய்
வானக்கூரையின் கீழ்!
பாரதி Vs பாபர் மசூதி
'மதத்தீ'யினை அங்கிலோர்
கோவிலில் வைத்தான்
வெந்து தணிந்தது 'நாடு'
கொடும் மடமையில்
குறைவென்றும்
நிறைவென்றும் உண்டோ?
நிதர்சனம்
தீயின் நாக்குகள்
சுவைத்து தின்றன!
ஆரிய 'பிணம்'
திராவிட 'பிணம்'
மிச்சமாய் சாம்பல்
ஒரே நிறத்தில்!
Thursday, April 9, 2009
கதம்பம்
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!
11 comments:
கடைசி ஹைகூ அருமை...
அக்கா அருமை....அதுவும் ஒற்றுமையான இந்திய காட்டு விலங்குகளின் அலறல்....அற்புதம்....
கயல் விழி,
நல்லா இருக்கு. 3 & 4 பிடித்தது. Angry young man மாதிரி Angry young woman கோபம்.
நான் ஒரு ஹைக்கூ பிரியன்.ஓடி வந்தேன் படிப்பதற்க்கு.ஆனால் இவைகள் புதுக் கவிதை ரகத்தில் சேரும் என்று நினைக்கிறேன்.
தயவு செய்து என வலைக்கு வாருங்கள்.
ஹைக்கூ(?)நானும் எழுதியிருக்கிறேன்.
சாதா கவிதைகளும் படியுங்கள்.
கண்டிப்பாக கருத்துச் சொல்லுங்கள்.
வாழ்த்தலாம்/சாத்தலாம்.
ஹைகூக்கள்
http://raviaditya.blogspot.com/search/label/ஹைகூக்கள்
சாதா கவிதைகள்
http://raviaditya.blogspot.com/search/label/கவிதை
//மிச்சமாய் சாம்பல்
ஒரே நிறத்தில்!//
கடைசி கவிதை நருக்குன்னு இருக்கு
//
புதியவன் said...
கடைசி ஹைகூ அருமை...
//
நன்றி புதியவன்!
===================
//
coolzkarthi said...
அக்கா அருமை....அதுவும் ஒற்றுமையான இந்திய காட்டு விலங்குகளின் அலறல்....அற்புதம்....
//
வாங்க கார்த்திக் தம்பி! நன்றி!
//கே.ரவிஷங்கர் said...
...
//
நன்றி! ரவிசங்கர்! ஹைக்கூ இலக்கணம் படிச்சுக்கிட்டேன்! இனிமே பாருங்க!அடிக்கடி வாங்க!! என் கிறுக்கல்களை திருத்தி சொல்லுங்க! வருகைக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி!!
//
ஆ.முத்துராமலிங்கம் said...
//மிச்சமாய் சாம்பல்
ஒரே நிறத்தில்!//
கடைசி கவிதை நருக்குன்னு இருக்கு
//
வருகைக்கு நன்றி!!
கயல் இது ரொம்ப அநியாயம். அம்மாந் தொலவு
வந்திட்டு ஒரு வார்த்தைகூட சொல்லல.
மறக்கக்கூடாதுன்னு ஒரு பெரிய பேனர் பெயிண்ட்
அடிச்சு “எதுவும் சொல்லாத போகாதீங்க!”ன்னு வேற
போட்டு வைச்சுருக்கேன்.சும்மா போய்ட்டீங்க.
//இனிமே பாருங்க!அடிக்கடி வாங்க!! என் கிறுக்கல்களை திருத்தி சொல்லுங்க! வருகைக்கும் வழிகாட்டுதலுக்கும்//
அம்மாடியோவ்...
//
கே.ரவிஷங்கர் said...
கயல் இது ரொம்ப அநியாயம். அம்மாந் தொலவு
வந்திட்டு ஒரு வார்த்தைகூட சொல்லல.
மறக்கக்கூடாதுன்னு ஒரு பெரிய பேனர் பெயிண்ட்
அடிச்சு “எதுவும் சொல்லாத போகாதீங்க!”ன்னு வேற
போட்டு வைச்சுருக்கேன்.சும்மா போய்ட்டீங்க.
//இனிமே பாருங்க!அடிக்கடி வாங்க!! என் கிறுக்கல்களை திருத்தி சொல்லுங்க! வருகைக்கும் வழிகாட்டுதலுக்கும்//
அம்மாடியோவ்...
//
ஆகா மறந்திட்டனே இருங்க இதோ வந்துடறேன்!
//ஆரிய 'பிணம்'
திராவிட 'பிணம்'
மிச்சமாய் சாம்பல்//
ரொம்ப நல்லா எழுதுறீங்க கயல்.. எதிர்காலப் பிணங்கள் சிலவற்றுக்கு இவற்றைப் பார்த்துப் பத்தலாம்..:)
//
கலகலப்ரியா said...
//ஆரிய 'பிணம்'
திராவிட 'பிணம்'
மிச்சமாய் சாம்பல்//
ரொம்ப நல்லா எழுதுறீங்க கயல்.. எதிர்காலப் பிணங்கள் சிலவற்றுக்கு இவற்றைப் பார்த்துப் பத்தலாம்..:)
//
ஆமா! ஆமா! கட்டாயம் பத்திக்குமின்னு நெனைகிறேன்!!வருகைக்கு நன்றி!!
Post a Comment