இருண்ட கருவெளியில்
ஒளிதேடும் இரவுப் பறவையென
வாழ்க்கைச் சிக்கலுக்கு
விடை தேடும் முனைப்போடு....
குழப்பமான நேரங்களின்
தன்னாய்வு பயணங்கள்
பெரும்பாலும் துணையற்ற
இரவுகளாய் அமைவதுண்டு
அகன்று நீண்ட வானப் பரப்பில்
அள்ளித் தெளித்த மின்மினிப் பூச்சிகளென
ஆங்காங்கே விண்மீன் கூட்டங்கள்
பால்வெளித் திரளுக்குள்
பாந்தமாய் தண்ணிலவு
படிக்க படிக்கச் சலிக்காத
பாமரத் தமிழ் பாட்டென
என்றைக்கும் அலுக்காத
இயற்கையின் பேரழகு!
கைகளை தலையணையாக்கி
கட்டாந்தரையை மஞ்சனமாக்கி
வானுக்கும் எனக்கும்
ஊடாய் யாதொரு திரையுமின்றி
விண்ணை நோக்கி எனது
சிந்தனைப் பயணம் அண்ணாந்து
பார்த்தபடி அடிக்கடி நிகழ்வதுண்டு!
பேரண்டம் குறித்த அலசலுடன்
அதன் பிரம்மிப்பான பதிவுகளுடன்
அள்ள அள்ளக் குறையாத
அற்புத பேரழகோடு இரவுப் பெண்
நாழிகைகளை நயமாய் நகர்த்த
அவளின் கையணைப்பில்
காலதேவனின் கசப்பான நினைவுகளை
களையெடுப்பது கைவந்த கலையெனக்கு!
நண்பர்கள் என் செயலை
நாட்பட்ட பித்தமென்பர்!
விரிந்து பரந்த வானவீதிகள் தோறும்
விழி தொடும் தூரம் வரை
இலக்கின்றி சுற்றி அலைந்து பின்
அயற்சியில் துயில் கொள்வது
அன்றாட உள்ளப்பயிற்சி யெனக்கு!
வானில் கொட்டி கிடக்கும்
விண்மீன் புள்ளிகளுக்கிடையே
எனக்கான பதில் சங்கேதமாய்...
என் பயணம் தொடங்குகையில்
வாழ்வு சார்ந்த கேள்விகளோடும்
அதன் பதிலுக்கான தேடலோடும்
புதிராய்...
முடிகையிலோ,
கைவரப் பெற்ற பதிலோடு கூடவே
அனுபவம் பொதிந்த
வாழ்க்கைச் சமன்பாடும்!
ஒளிதேடும் இரவுப் பறவையென
வாழ்க்கைச் சிக்கலுக்கு
விடை தேடும் முனைப்போடு....
குழப்பமான நேரங்களின்
தன்னாய்வு பயணங்கள்
பெரும்பாலும் துணையற்ற
இரவுகளாய் அமைவதுண்டு
அகன்று நீண்ட வானப் பரப்பில்
அள்ளித் தெளித்த மின்மினிப் பூச்சிகளென
ஆங்காங்கே விண்மீன் கூட்டங்கள்
பால்வெளித் திரளுக்குள்
பாந்தமாய் தண்ணிலவு
படிக்க படிக்கச் சலிக்காத
பாமரத் தமிழ் பாட்டென
என்றைக்கும் அலுக்காத
இயற்கையின் பேரழகு!
கைகளை தலையணையாக்கி
கட்டாந்தரையை மஞ்சனமாக்கி
வானுக்கும் எனக்கும்
ஊடாய் யாதொரு திரையுமின்றி
விண்ணை நோக்கி எனது
சிந்தனைப் பயணம் அண்ணாந்து
பார்த்தபடி அடிக்கடி நிகழ்வதுண்டு!
பேரண்டம் குறித்த அலசலுடன்
அதன் பிரம்மிப்பான பதிவுகளுடன்
அள்ள அள்ளக் குறையாத
அற்புத பேரழகோடு இரவுப் பெண்
நாழிகைகளை நயமாய் நகர்த்த
அவளின் கையணைப்பில்
காலதேவனின் கசப்பான நினைவுகளை
களையெடுப்பது கைவந்த கலையெனக்கு!
நண்பர்கள் என் செயலை
நாட்பட்ட பித்தமென்பர்!
விரிந்து பரந்த வானவீதிகள் தோறும்
விழி தொடும் தூரம் வரை
இலக்கின்றி சுற்றி அலைந்து பின்
அயற்சியில் துயில் கொள்வது
அன்றாட உள்ளப்பயிற்சி யெனக்கு!
வானில் கொட்டி கிடக்கும்
விண்மீன் புள்ளிகளுக்கிடையே
எனக்கான பதில் சங்கேதமாய்...
என் பயணம் தொடங்குகையில்
வாழ்வு சார்ந்த கேள்விகளோடும்
அதன் பதிலுக்கான தேடலோடும்
புதிராய்...
முடிகையிலோ,
கைவரப் பெற்ற பதிலோடு கூடவே
அனுபவம் பொதிந்த
வாழ்க்கைச் சமன்பாடும்!
6 comments:
//விரிந்து பரந்த வானவீதிகள் தோறும்
விழி தொடும் தூரம் வரை
இலக்கின்றி சுற்றி அலைந்து பின்
அயற்சியில் துயில் கொள்வது
அன்றாட உள்ளப்பயிற்சி யெனக்கு!//
Nice!!!
நனவோடைன்னா இப்படி இருக்கணும்...
தமிழும், நனவும் கைகூடி சரளாமா வழிஞ்சோடுதுங்க கவிஞரே!
Sasirekha Ramachandran said...
//
//விரிந்து பரந்த வானவீதிகள் தோறும்
விழி தொடும் தூரம் வரை
இலக்கின்றி சுற்றி அலைந்து பின்
அயற்சியில் துயில் கொள்வது
அன்றாட உள்ளப்பயிற்சி யெனக்கு!//
Nice!!!
//
வாங்க! வாங்க! நன்றி!!!
//
பழமைபேசி said...
நனவோடைன்னா இப்படி இருக்கணும்...
தமிழும், நனவும் கைகூடி சரளாமா வழிஞ்சோடுதுங்க கவிஞரே!
//
வாங்க! நன்றி!!
மிகவும் நன்று..! அருமையா இருக்குங்க.. கயல்!
//
கலகலப்ரியா said...
மிகவும் நன்று..! அருமையா இருக்குங்க.. கயல்!
//நன்றி சகோதரி!
Post a Comment