இருமனங்கள்
ஒன்றின்
உள்ளீடாய்
நட்பு
அதன்
வெளியீடாய்
மற்றதில்
குரோதம்.
சமன்பாட்டின்படி
நட்புக்கு பதிலாய்
நட்பே கிடைக்கவேண்டும்
நடுவழியில்
ஏதோ குளறுபடி
பிறழ்வுக்கு
ஏதேனும்
காரணமாயிருக்கலாம்
அப்படியேதும் இல்லையெனில்
நண்பனென நீ நினைத்தவன்
கபடனாய் இருக்கலாம்
ஆராய்ச்சியின் முடிவு
எப்படியிருந்தாலும்
உடனடியாக
அவனை நண்பனென
அழைப்பதை நிறுத்திவிடு!
பலன் எதிர்பாராதது
நட்பு
அது போலே
வெறுப்பையும்
யாரோ எறிந்த
சின்னஞ்சிறு கல் கூட
பேரலைகளை உண்டாக்குமெனில்
என் படகு பயணிக்க
வேறோர் ஆற்றுக்கு
கொடுப்பினையுண்டு
ஒன்றின்
உள்ளீடாய்
நட்பு
அதன்
வெளியீடாய்
மற்றதில்
குரோதம்.
சமன்பாட்டின்படி
நட்புக்கு பதிலாய்
நட்பே கிடைக்கவேண்டும்
நடுவழியில்
ஏதோ குளறுபடி
பிறழ்வுக்கு
ஏதேனும்
காரணமாயிருக்கலாம்
அப்படியேதும் இல்லையெனில்
நண்பனென நீ நினைத்தவன்
கபடனாய் இருக்கலாம்
ஆராய்ச்சியின் முடிவு
எப்படியிருந்தாலும்
உடனடியாக
அவனை நண்பனென
அழைப்பதை நிறுத்திவிடு!
பலன் எதிர்பாராதது
நட்பு
அது போலே
வெறுப்பையும்
யாரோ எறிந்த
சின்னஞ்சிறு கல் கூட
பேரலைகளை உண்டாக்குமெனில்
என் படகு பயணிக்க
வேறோர் ஆற்றுக்கு
கொடுப்பினையுண்டு
3 comments:
சகோ.கயல்
உங்கள் தளம் பார்வையிடல் இதுவே முதல் முறை கவிதை அருமை . சமூகம் பற்றிய சிந்தனைகளையும் பகுத்தறிவுத் தளமாகவும் மாற்றியமைத்து துணிவோடு எழுதுங்கள் வாழ்த்துக்கள்.
இனியவன்...
வணக்கம்
உண்மை நட்புக் கீடாக
உலகில் சொல்லப் பொருளேது?
தண்மை இருக்கும்! பிழையெதிர்க்கும்
வண்மை இருக்கம்! ஒருபொழுதும்
கண்..மை போன்றே இருளிருக்கக்
கமழும் நடபில் இடமில்லை!
பெண்மை ஓங்கக் கவிதைகளைப்
பேணும் கவிஞா் கயல்வாழி!
கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr
வணக்கம்
உண்மை நட்புக் கீடாக
உலகில் சொல்லப் பொருளேது?
தண்மை இருக்கும்! பிழையெதிர்க்கும்
வண்மை இருக்கம்! ஒருபொழுதும்
கண்..மை போன்றே இருளிருக்கக்
கமழும் நடபில் இடமில்லை!
பெண்மை ஓங்கக் கவிதைகளைப்
பேணும் கவிஞா் கயல்வாழி!
கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr
Post a Comment