Monday, May 23, 2011

சரி தவறு

சரியெனப்பட்டது
சத்தமாய் சரிதானென்றேன்
தவறெனப் புரிந்தது
தயக்கமின்றி தவறெனச் சொன்னேன்!
ஒத்திசைக்க உற்றவர்கள்
உடனிருந்தார்கள்!
அவர்தம்
கூட்டணி மாறியது
சரியென்றதை தவறெனவும்
தவறென்றதை சரியெனவும்
இம்சிக்கிறார்கள்
பிறழாத நாக்கு வேறு
பொய்யுரைக்க மறுக்கிறது
இப்போதும்
முன்னிருந்த நிலைதான்
இடறாத கொள்கையோடும்
பிறழாத நாக்கினோடும்
தன்னந்தனி மரமாய் நான்!
வந்தமரக்கூடும்
என் கிளையிலும்
சில பறவைகள்!

14 comments:

பழமைபேசி said...

காலத்துகந்த கவிதை!!

பழமைபேசி said...

//பொய் நவில மறுக்கிறது//

பொருட்பிழை! பொய் உரைக்க மறுக்கிறது!!

நவில்தல் - மனமிரங்கிச் சொல்தல்
உரைத்தல் - எவ்வித உணர்வுமின்றிச் சொலல்

for more info: http://maniyinpakkam.blogspot.com/2010/09/blog-post_07.html

மாதவராஜ் said...

நல்லாயிருக்கு.

எண்ணங்கள் 13189034291840215795 said...

தன்னந்தனி மரமாய் நான்!//

போலிகளற்ற தனிமையே சுகம். சிந்தனையூற்றுக்கான சொர்க்கம் என நினைப்பேன் நான்..

சிந்தனை துணையிருக்கும்வரை தனிமை என்பதில்லையே..

//புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது!
//

பலருக்கும் அதே.:)

ஒருவித ஆசீர்வாதமே அது..

எண்ணங்கள் 13189034291840215795 said...

//புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது!
//

பலருக்கும் அதே.:)

ஒருவித ஆசீர்வாதமே அது..

chandru2110 said...

நல்ல கருத்து. மாற்றம் இயல்புதான். சுற்றியிருக்குறவங்களை நம்பி சூளுரைக்க கூடாதுன்னு நானும் அனுபவப்பட்டுட்டேன் .

கயல் said...

@பழமைபேசி

திருத்திட்டேன் ஆசானே!
நன்றி!

அன்பால் இம்சிக்கிறாங்க என்கிற அர்த்தம் வருமில்ல? அதான் அந்த சொல்!

கயல் said...

@மாதவராஜ்

வருகைன்னு நன்றி மாதவ்ஜி

கயல் said...

//
எண்ணங்கள் 13189034291840215795 said...

//புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது!
//

பலருக்கும் அதே.:)

ஒருவித ஆசீர்வாதமே அது..

//

ஹா ஹா!

ம்ம்! அப்படித் நானும் நெனைச்சிக்கறேன்!
:))

கயல் said...

//
chandru2110 said...

நல்ல கருத்து. மாற்றம் இயல்புதான். சுற்றியிருக்குறவங்களை நம்பி சூளுரைக்க கூடாதுன்னு நானும் அனுபவப்பட்டுட்டேன் .
//
ம்ம்ம்!
சுயபுத்தியோடிருந்தால் இது போல் இன்னும் பலர் வரக்கூடும்.

நசரேயன் said...

ம்ம்ம்

Madumitha said...

மேலே ஆகாயமும்
கீழே பூமியும்
இருக்கும் வரை
யாரும் தனியல்ல.
உபரியாய்
வந்தமர பறவைகள்
வேறு.
தனித்துவமாய்
நில்லுங்கள்.

சின்ன கண்ணன் said...

அருமை மிக அருமை நண்பரே

வலிப்போக்கன் said...

புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது!
புயல் ஊரையே நாசமாக்குமாமே.சொல்லக்கேள்வி

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!