பழகிய நாய்க்குட்டியை
வருடும் தொணியில்
பயணிக்கின்றன உன் கண்கள்
என்மேனி முழுதும்...
முகம் மறைக்கும் கார்குழலை
ஒதுக்கும் பாவனையில்
முகமெங்கும் உரசிச் செல்கிறது
உன் விரல் ஒரு
தேர்ந்த வினைஞனின்
லாவகத்தோடு...
ஆசையாய் சாய்ந்திருந்த
வன்தோள்களில் என்னிதழ்
பட்டுப்பட்டு அறுந்து போனது
நம்மைப் பிரித்திருந்த
கர்வமெனும் கண்ணாடியிழை!
அரைக்கிறக்கத்தில் உளரல்களுக்கு
வழிமொழிகிறது என் ஆன்மா
சுய தெளிவில்லாமல்...
இதுவரை கொண்டிருந்த
விரகத்தின் வடிகாலாய்
சண்டையிட்டுக் கொள்கின்றன
உன்னிதழும் என்னிதழும்...
ஒன்றையொன்று வெல்லத்துடிக்கும்
மற்போரின் நீட்சியாய்!
பேரூந்தின் திடீரென்ற குலுக்கலில்
தூக்கம் தெளிந்து ஆசைமுகம் நோக்க
இரு கொம்புகளுடன் கோரப்பற்களில்
சொட்டும் குருதியுடன் அகோரமாய்...
வறண்ட குதூகலத்தினோடு
வழக்கமான நீ!
27 comments:
பேருந்தில்- கனவில் ஒரு கலவியின் தோற்றுவாயுடன் கவிதை தொடங்கி, அழுக்கான உடலிலும் அழகாகத் தெரியும் காதலனின் தரிசனத்தில் முடிவுறுகிறது கவிதை.
நினைவும் நிஜமும் ...நினைவே நிஜமாகக் கடவது ...
நல்ல கவிதை கயல்
கர்வமெனும் கண்ணாடியிழை..
ரசித்தேன்.
கனவு நிஜமாகட்டும்.
கவித கவித
பழகிய நாய்க்குட்டியை//
இது கண்ணாடி முன்னாடி நிக்கும் போது எழுதினதா?
வருடும் தொணியில்
பயணிக்கின்றன உன் கண்கள்//
டிரைன்லையா பஸ்லயா?
உன் விரல் ஒரு
தேர்ந்த வினைஞனின்//
கலைஞரின் அடுத்த படமா இந்த வினைஞன்?
பட்டுப்பட்டு அறுந்து போனது
நம்மைப் பிரித்திருந்த
கர்வமெனும் கண்ணாடியிழை!//
fevistick use பண்ணுங்க..
அரைக்கிறக்கத்தில் உளரல்களுக்கு
வழிமொழிகிறது என் ஆன்மா/
டூப்ளிகேட் சரக்கடிச்சா அப்டித்தான்
இரு கொம்புகளுடன் கோரப்பற்களில்
சொட்டும் குருதியுடன் அகோரமாய்...//
மறுபடியும் கண்ணாடி முன்னாடியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பேரூந்தின் திடீரென்ற குலுக்கலில்
தூக்கம் தெளிந்து ஆசைமுகம் நோக்க
இரு கொம்புகளுடன் கோரப்பற்களில்
சொட்டும் குருதியுடன் அகோரமாய்...
வறண்ட குதூகலத்தினோடு
வழக்கமான நீ!
கனவா?
//ஆசையாய் சாய்ந்திருந்த
வன்தோள்களில் என்னிதழ்
பட்டுப்பட்டு அறுந்து போனது
நம்மைப் பிரித்திருந்த
கர்வமெனும் கண்ணாடியிழை! //
நல்ல வரிகள்.
நல்லாருக்கு நல்லாருக்கு...
என்னாச்சு கயல்?
நல்ல கவிதை.
//
நிரூபன் said...
பேருந்தில்- கனவில் ஒரு கலவியின் தோற்றுவாயுடன் கவிதை தொடங்கி, அழுக்கான உடலிலும் அழகாகத் தெரியும் காதலனின் தரிசனத்தில் முடிவுறுகிறது கவிதை
//
புரிதல் சரியா?
நிரூபன்...
:))
//
பத்மா said...
நினைவும் நிஜமும் ...நினைவே நிஜமாகக் கடவது ...
நல்ல கவிதை கயல்
//
நன்றி பத்மா
//
Madumitha said...
கர்வமெனும் கண்ணாடியிழை..
ரசித்தேன்.
கனவு நிஜமாகட்டும்.
//
வாழ்த்துக்கு நன்றி!
//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அரைக்கிறக்கத்தில் உளரல்களுக்கு
வழிமொழிகிறது என் ஆன்மா/
டூப்ளிகேட் சரக்கடிச்சா அப்டித்தான்
//
போலீஸ்!
எப்பப் பார்த்தாலும் மாமுல் சரக்கு ஞாபகத்துலயே!
:))
நன்றி முதல் வருகைக்கும் கும்மிக்கும்!
//
Mahan.Thamesh said...
பேரூந்தின் திடீரென்ற குலுக்கலில்
தூக்கம் தெளிந்து ஆசைமுகம் நோக்க
இரு கொம்புகளுடன் கோரப்பற்களில்
சொட்டும் குருதியுடன் அகோரமாய்...
வறண்ட குதூகலத்தினோடு
வழக்கமான நீ!
கனவா?
//
ஆமா கனவு தான்!
நன்றி
//
மதி said...
//ஆசையாய் சாய்ந்திருந்த
வன்தோள்களில் என்னிதழ்
பட்டுப்பட்டு அறுந்து போனது
நம்மைப் பிரித்திருந்த
கர்வமெனும் கண்ணாடியிழை! //
நல்ல வரிகள்.
//
நன்றி!
//
சிசு said...
நல்லாருக்கு நல்லாருக்கு...
//
நன்றி
//
பரிசல்காரன் said...
என்னாச்சு கயல்?
//
கனவு கலைஞ்சு போச்சு பரிசல்.
//
சே.குமார் said...
நல்ல கவிதை.
//
நன்றி!
கயல் said...
//
பரிசல்காரன் said...
என்னாச்சு கயல்?
//
கனவு கலைஞ்சு போச்சு பரிசல்
vaalthukkal tholli
//நம்மைப் பிரித்திருந்த
கர்வமெனும் கண்ணாடியிழை//
இந்த வரிகளைத் தாண்டும் போதே சுதாரித்திருக்க வேண்டும். கடைசியில் உடைபடும் சஸ்பென்ஸ் உங்க திறன்! கனவென்ற ஒன்று இல்லாவிட்டால் பெரும்பான்மையானவர்கள் தத்தம் துன்பக் கேணியிலிருந்து கரையேற தற்காலிகமாகவேனும் வழியேது?
ஏய்... ஏய்... யார்றா இவன் எழுப்புனது? இப்பத்தான் எலெ போட்டாய்ங்கெ. கனவுல கூட சோறு திங்க விட மாட்டீக்கிறீங்களேடா!
Post a Comment