நத்தையின் ஓடு போல
இலகுவாய் இயல்பாய்
தசையொற்றி கிடக்கிறது
என் பெண்மை!
வேண்டியமட்டும் இறுக
போர்த்திக் கொண்டிருக்கிறேன்
தன்மானத்தை ஆடையாய்!
அன்பே என்றவனும்
அழகே என்றவனும்
அக்கா என்றவனும்
அம்மா என்றவனும்
தோழி என்றவனும்
ஏதொவொரு பொழுதில்
எப்போதோ எதற்காகவோ
என்னை அழச் செய்தவர்கள்தாம்!
காதலைத் தந்தவனைத் தவிர
எல்லோரயும் விலக்கித் தான்
வைக்கிறது மனசு
வெறுப்பின் மிகுதியில்!
சூடாத கிரீடமென்றாலும்
நிலைக்காத பட்டமென்றாலும்
அவனுலகோடு பங்கிடவழைத்ததின்
நன்றி நவிலலாய் இருக்கக்கூடும்
எப்போதும் என்றில்லை
எப்போதாவது...
இணையைப் பிரிந்து வருந்தியழைக்கும்
பேடையின் கதறலை செவியுறும்
அக்கணம் மட்டும்
நானிழந்த அவனுக்காய்
நானில்லாத அவனோடு
மௌனமொழி பேசி
முற்றாக
விழியோரம் இருதுளி!
14 comments:
நத்தையின் ஓடு போல
இலகுவாய் இயல்பாய்
தசையொற்றி கிடக்கிறது
என் பெண்மை!//
வணக்கம் சகோதரம், உணர்வுகளற்று இருக்கும் பெண்மையினை அழகான உவமானத்தால் உணர்த்துகிறீர்கள்.
வேண்டியமட்டும் இறுக
போர்த்திக் கொண்டிருக்கிறேன்
தன்மானத்தை ஆடையாய்!//
இவ் வரிகள் ஆடைகளைக் கடந்து பெண்ணின் அந்தரங்கங்களை ஊடுருவிப் பார்க்கும் ஆண்களுக்கு வார்த்தைகளால் கொடுக்கும் சாட்டையடி(என்னையும் சேர்த்துச் சொல்கிறேன்.)
அன்பே என்றவனும்
அழகே என்றவனும்
அக்கா என்றவனும்
அம்மா என்றவனும்
தோழி என்றவனும்
ஏதொவொரு பொழுதில்
எப்போதோ எதற்காகவோ
என்னை அழச் செய்தவர்கள்தாம்!//
இது யதார்த்த உணர்வின் வெளிப்பாடு.
எப்போதும் என்றில்லை
எப்போதாவது...
இணையைப் பிரிந்து வருந்தியழைக்கும்
பேடையின் கதறலை செவியுறும்
அக்கணம் மட்டும்//
உணர்வுகள் மேலெழும் போது, ஆற்றுப்படுத்த அருகே இல்லாத ஆற்றாமையினை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
நானிழந்த அவனுக்காய்
நானில்லாத அவனோடு
மௌனமொழி பேசி
முற்றாக
விழியோரம் இருதுளி!//
ஆசைகள் நிறை வேறாத வேதனையில் ஏக்கங்களோடு வாழும் ஒரு பெண்ணின் அழுகையாய் ஒலிக்கிறது இக் கவிதை!
அழகிய சொல்லாடல்களும், மொழிக் கலவைகளும் கவிதைக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
சிதிலமான நினைவுகள்: பொருளாய் இருந்தும் பயனற்ற ஒன்றின் ஏக்கங்கள்.
//சூடாத கிரீடமென்றாலும்
நிலைக்காத பட்டமென்றாலும்
அவனுலகோடு பங்கிடவழைத்ததின்
நன்றி நவிலலாய் இருக்கக்கூடும்//
சரி அதுக்கு என்ன இப்ப ?
//ஏதொவொரு பொழுதில்
எப்போதோ எதற்காகவோ
என்னை அழச் செய்தவர்கள்தாம்!//
அதுக்காக நாங்களும் கவுஜயப் படிச்சிட்டு அழனுமா ?
//எப்போதும் என்றில்லை
எப்போதாவது...
இணையைப் பிரிந்து வருந்தியழைக்கும்
பேடையின் கதறலை செவியுறும்
அக்கணம் மட்டும்//
காது கேட்காது
//நானிழந்த அவனுக்காய்
நானில்லாத அவனோடு
மௌனமொழி பேசி
முற்றாக
விழியோரம் இருதுளி!//
ஒரு ஜீவன் தப்பித்தது
//சிதிலமான நினைவுகள்//
கடைசியிலே கீழ்பாக்கம் போகுமா ?
வெளிச்சத்தில் மட்டுமல்ல சகோதரி
இருளிலும் நிழல் நம்முடன்தான் வருகிறது .
ஆனால் மனிதனின் கண்கள் குறைபாடு உடையது.
ஒரு எல்லைக்கு மேல் அதனால் உடுருவ இயலாது.
அது தன் இருப்பை நிறுவி கொள்ள
இருளில் நிழல் நம்மை கை விடுகிறதென்று
நம்மையே தந்திரமாய் நம்ப வைத்து விடுகிறது.
இந்த கவிதையும்
அப்படியொரு கண்களை போன்றதுதானா???
அக்கா சூப்பர் ஹப் விடாம தொடர்ந்து எழுதுங்க..
மிக நல்ல கவிதை .. வார்த்தைக் கோர்வைகள் அட்டகாசம். உவமைகளும் உணர்வுக்குப் பொருத்தம் .... வாழ்த்துக்கள்
நிரூபன் said...
நன்றி சகோ! புரிதலுக்கும் ரசனைக்கும்!
நசரேயன் said...
//சிதிலமான நினைவுகள்//
கடைசியிலே கீழ்பாக்கம் போகுமா ?
ம்ம்??? எனனா நக்கலு!!! இருங்க இருங்க அழுவாச்சி கவிதையா எழுதி மெயில் பண்ணுறேன்!
நீங்க அழுதாலும் விடமாட்டோம் அண்ணாச்சி!
:)))
கமலேஷ் said...
அண்ணா ஏன் இம்புட்டு சிரத்தையா??? லூசுல வுடுமய்யா லூசுல வுடு!
Dharshi said...
நன்றி கண்ணம்மா!
மதி said...
நன்றி மதி!
நல்லா இருக்கு கயல்!
ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து...
(இதெல்லாம் ஒரு பொழப்பான்னு சொல்லக் கூடாது...அப்பப்ப வருவோம்ல)
Post a Comment