Thursday, December 2, 2010

யாரோவென...

உன்
போலியான புன்னகையில்
நேர்மையற்ற கண்களில்
பசப்பலான வார்தைகளில்
மரணத்தின் வாயிலை
தொட்டு மீள்கிறது என்னுயிர்
சபிக்கப்பட்டழிந்த நட்பின் சுவடுகளை
வாஞ்சையுடன் வருடிப்போகின்றன
நினைவலைகள்
வலிதந்த காலங்கள் நீங்கலாக...

எனக்கிழைத்த துரோகத்தின் பின்புலம்
காதலோ கொடுங்காமமோ கூடாநட்போ
ஏதோவொன்றாயிருக்கலாம்
சுகித்து மீண்டதும்
இல்லை - அவ்விடம்
சூடுபட்டு விலகிய பொழுதேனும்
புரிந்திருக்க வேண்டும்
உன்மீதான நட்பும்
கொண்டாடிய நானும்
நியமங்களின்றி நிந்திக்கப்பட்டு
அந்நியமானது

உன் பெயரை
சுவாதீனமின்றி அர்ச்சிக்கும்
உதடுகள் என்றேனும்
வரம்பு மீறக்கூடும்
அன்றேனும் உயிர்த்தெழு
கர்வம் நீர்த்த சுயத்தோடு...

உன்னாலுடைந்த இதயத்தில்
கடைசிச் சில்லும்
நொறுங்கித் தீரும் வரை
மனவீதியெங்கும்
நிராகரித்தலின் பெருமிதத்தோடு
எக்காளமிடு
எனக்குள் நீ
யாரோவென...

16 comments:

சுசி said...

தூக்கி எறிஞ்சிட்டு போய்ட்டே இருங்க கயல்..

வினோ said...

அருமை கயல்.. ஏமாற்றத்தின் வெளிப்பாடு...

கலகலப்ரியா said...

>>தூக்கி எறிஞ்சிட்டு போய்ட்டே இருங்க கயல்.. <<

i wud say the same...

take care kayal... :)

நசரேயன் said...

//உன்னாலுடைந்த இதயத்தில்
கடைசிச் சில்லும்
நொறுங்கித் தீரும் வரை//

இதயம் என்ன கண்ணாடியா இல்ல தேங்காவா சில்லு உடைக்க ?

Madumitha said...

சுசி மிகச் சரியாய்ச் சொல்லியிருக்கிறார்கள்.
எல்லா வலிக்கும் மருந்துண்டு.

நாமக்கல் சிபி said...

தூக்கி எறிஞ்சிட்டு போய்ட்டே இருங்க கயல்..

எஸ்.கே said...

அருமை! இதுவும் கடந்து போகும்!

தென்னவன். said...

:))))))

எப்படியும் புரியாது என் மரமண்டைக்கு எதுக்கும் படிச்சி பாக்க்கலாம்னுதான் வந்தேன்.

நல்லா இருக்கு. :-)

சின்னப்பயல் said...

தூக்கி எறிய முயற்சித்தும் , இயலாமை வெளிப்படுகிறது இந்தக்கடைசி வரியில்

"எனக்குள் நீ
யாரோவென..."

'பரிவை' சே.குமார் said...

ஏமாற்றத்தின் வெளிப்பாடு அருமை கயல்.

Prem S said...

"சபிக்கப்பட்டழிந்த நட்பின் சுவடுகளை
வாஞ்சையுடன் வருடிப்போகின்றன
நினைவலைகள்
வலிதந்த காலங்கள் நீங்கலாக..." அருமை இவ்வரிகள் துரோகமும் பிரிவும் வாழ்த்துக்கள்

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்லாயிருக்கு.. எவ்வளவுக்கெவ்வளவு நெருக்கமோ அவ்வளவுக்கவ்வளவு வலியும்..

Paul said...

ஒவ்வொரு வரிகளுமே அருமையாக இருக்கிறது.. மிக நன்று..!! ரசித்துப் படித்தேன் :)

அன்புடன் நான் said...

சரியான சவுக்கடி கவிதைங்க... பாராட்டுக்கள்.

கயல் said...

அனைவருக்கும் நன்றி!

சி.பி.செந்தில்குமார் said...

>>>உன் பெயரை
சுவாதீனமின்றி அர்ச்சிக்கும்
உதடுகள் என்றேனும்
வரம்பு மீறக்கூடும்

ஆஹா.. அழகியல் ரசனையின் உச்சம்

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!