Friday, October 15, 2010

எப்போதேனும்...


எப்போதும்
எளிதாய்க் கடந்துவிடுகிற
காட்சிதான் அது,
பள்ளிக்குப் போகும் குழந்தைக்கு
முத்தமிட்டு வழியனுப்பும் தாய்!
ஏனோ
பார்த்தயென் கன்னம் முழுவதும்
ஈரம்
கண்களிலும் அதன்
மிச்சசொச்சம்

* * * * *

”என்  ராசாத்தி”
வருடிச் சொடுக்கெடுக்கும்
கரங்கள்
திருஷ்டிக்குப் பலியாகும்
உப்புக் கட்டிகள்
யாருமில்லாத பொழுதொன்றில்
மிளகாய்கமறலோடு
சன்னமான வெடிச்சத்தம்
என் செவிக்கு மட்டும்!

* * * *

மொத்தமாய் ஐந்துரூபாய்
பட்டாணியா?
தேன்மிட்டாயா?
குச்சி ஐஸா?
பலவேறு குழப்பங்களுடன்
கணக்குப் புத்தகத்தில்
ஓய்வெடுக்கும் திருவிழாக்காசு
உறக்கமிழந்த இரவுகள்

* * *

“இந்தா ஒருவாய்ச் சாப்பிட்டிரு”
கெஞ்சலும் என் சிணுங்கலும்
விரவி ஓய்ந்த
பின்னிரவு நாட்கள்
மனம் ஒன்றா உணவோடும்
வெறும் வயிற்றோடும்
எவருமில்லா வெறுமையில்
அயர்வாய் விழுகையில்
அனிச்சையாய்த் துடைக்கிறது கை
உதட்டோரம் ஒற்றைப் பருக்கை

* *

உருமிச் சத்தம்
பாண்டிச் சாமியாடி
பூம்பூம் மாடு
குடுகுடுப்பைக்காரன்
கிறுக்குச் சுப்பைய்யா
இன்னபிறவும் உண்டு
பயமூட்டும் பட்டியலில்...
மனதில் வாசித்துச் சிரிப்பதுண்டு
பேரிடிச் முழக்கம் கேட்கையில்
தொடைநடுங்கும் பயத்தினோடே
அனிச்சையாய் மொழியும்
’அர்ச்சுனன் அபயமும்’
தானாய் தேடும்
அப்பாவின் அருகாமையும்...

*
சலங்கை வைத்த கொலுசு
பட்டுப் பாவாடை
அரையடி குடுமிக்கு
ஆறுமுழம் மல்லிப்பூ
குலுங்கிச் சிரிக்கும் வளையல்கள்
தீட்டித் தீர்ந்த மை
சூதோ வினையோ ஏதுமில்லாது
சட்டென நம்பி ஒட்டாதாயின்
பட்டென விலகிய
வெள்ளந்தி பால்யம்
இப்படி...
காலச் சக்கரத்தில்
நாகரிகம் கருதி
இழந்துவிட்ட எல்லாமும்
எப்போதேனும்
மிக அரிதாக எப்போதேனும்...


21 comments:

bogan said...

அற்புதம் கயல் .பால்யத்தின் சுவடுகளை பெருமூச்சுடன் நினைவுகூர்கிறீர்கள்இல்லையா..

சுசி said...

தினமும் ஒரு தடவையேனும் நினைவு வருது கயல் :((((

வினோ said...

/ இப்படி...
காலச் சக்கரத்தில்
நாகரீகம் கருதி
இழந்துவிட்ட எல்லாமும்
எப்போதேனும்
மிக அரிதாக எப்போதேனும்... /
உண்மை தான்.....

கவிதைகள் நிறைய யோசிக்கவைத்தன...

பழமைபேசி said...

//கை மறைக்கும் வளையல்கள்
தீட்டித் தீர்ந்த மை//

????

//நாகரீகம் //

நாகரிகம்

//பூம்பூம் மாடு குடுகுடுப்பைக்காரன்
கிறுக்குச் சுப்பைய்யா //

பதிவர்களையாங்க சொல்றீங்க??

கயல் said...

//
bogan said...
அற்புதம் கயல் .பால்யத்தின் சுவடுகளை பெருமூச்சுடன் நினைவுகூர்கிறீர்கள்இல்லையா..
//

ஆமாங்க! நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும்

கயல் said...

//
சுசி said...
தினமும் ஒரு தடவையேனும் நினைவு வருது கயல் :((((
//
நன்றி சுசி!

கயல் said...

//
எஸ்.கே said...
அருமை!
//
நன்றி

கயல் said...

// வினோ said...
/ இப்படி...
காலச் சக்கரத்தில்
நாகரீகம் கருதி
இழந்துவிட்ட எல்லாமும்
எப்போதேனும்
மிக அரிதாக எப்போதேனும்... /
உண்மை தான்.....

கவிதைகள் நிறைய யோசிக்கவைத்தன...

//
நன்றி வினோ!

கயல் said...

//
பழமைபேசி said...
//கை மறைக்கும் வளையல்கள்
தீட்டித் தீர்ந்த மை//

????

//நாகரீகம் //

நாகரிகம்

//பூம்பூம் மாடு குடுகுடுப்பைக்காரன்
கிறுக்குச் சுப்பைய்யா //

பதிவர்களையாங்க சொல்றீங்க??
//

அடப்பாவி மக்கா ஏன் வம்புல மாட்டிவிடறீங்க. நான் ஏதோ ஊர்ப்பாசத்துல புலம்பப் போய் அது ஏதோ.... ம்ம் ஆசானே! நீங்க பயங்கரவாதி.

கார்க்கிபவா said...

இப்படி தமிழ்ல எழுதினா எவ்ளோ நல்லா இருக்கு!!!

கயல் said...

//
கார்க்கி said...
இப்படி தமிழ்ல எழுதினா எவ்ளோ நல்லா இருக்கு!!!
//

நன்றி நண்பரே!

நாமக்கல் சிபி said...

//இப்படி தமிழ்ல எழுதினா எவ்ளோ நல்லா இருக்கு!!! //

அதானே!

கயல் said...

//
என்.ஆர்.சிபி said...
//இப்படி தமிழ்ல எழுதினா எவ்ளோ நல்லா இருக்கு!!! //

அதானே!
//
நீங்களுமா நன்றியண்ணா!

sundar said...

நல்லா இருக்கு கயல்

தீடீர் மழை கிளப்பி விட்ட மண் வாசனை மாதிரி, பால்ய நினைவுகளை அப்பப்ப தூசு தட்டி அசை போடறதே ஒரு சொகம் தான்

Cheers

'பரிவை' சே.குமார் said...

//மொத்தமாய் ஐந்துரூபாய்
பட்டாணியா?
தேன்மிட்டாயா?
குச்சி ஐஸா?
பலவேறு குழப்பங்களுடன்
கணக்குப் புத்தகத்தில்
ஓய்வெடுக்கும் திருவிழாக்காசு
உறக்கமிழந்த இரவுகள் //

அற்புதம் கயல் .

நிலாமகள் said...

இழந்தவையும் மறந்தவையுமே வாழ்வின் மிகச் சிறந்ததெனத் தோன்றிவிடுகிறது சமயங்களில்.

கயல் said...

//
sundar said...
நல்லா இருக்கு கயல்

தீடீர் மழை கிளப்பி விட்ட மண் வாசனை மாதிரி, பால்ய நினைவுகளை அப்பப்ப தூசு தட்டி அசை போடறதே ஒரு சொகம் தான்

Cheers

//

நன்றிங்க

கயல் said...

//
சே.குமார் said...
//மொத்தமாய் ஐந்துரூபாய்
பட்டாணியா?
தேன்மிட்டாயா?
குச்சி ஐஸா?
பலவேறு குழப்பங்களுடன்
கணக்குப் புத்தகத்தில்
ஓய்வெடுக்கும் திருவிழாக்காசு
உறக்கமிழந்த இரவுகள் //

அற்புதம் கயல் .
//
நன்றி குமார்

கயல் said...

//
நர்சிம் said...
;)
//
:((

கயல் said...

//
நிலா மகள் said...
இழந்தவையும் மறந்தவையுமே வாழ்வின் மிகச் சிறந்ததென!த் தோன்றிவிடுகிறது சமயங்களில்.

//

நன்றிம்மா

J S Gnanasekar said...

கவிதைகள் அருமை.

முதல் மற்றும் கடைசிவரிகள் இல்லாமல்கூட‌ புத்தகக்காசுக் கவிதை அழகாய் அமையுமென நான் நினைக்கிறேன்.

-‍ ஞானசேகர்

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!