பெருமழை பீடித்த பிரளய பொழுதொன்றில்
கடல் நுழைந்தது மரக்கலமொன்று
சுழற்றும் காற்றின் சூழ்ச்சியின் வலுவில்
சிக்கியதாய்க் குறைபட்டார் மாலுமி
ஆருடம் பலிக்கும் என்றார் சோதிடர்
வீரர்களுண்டு வாட்களுண்டென்றார் படைவீரர்
கடவுளருள் நிச்சயமுண்டென்றார் போதகர்
நீர்மிக்கத் தடாகத்தின் உட்சுழி சக்கரமாய்
குழப்பத்தில் சுழன்றபடியிருந்தது மிதவை
புறவிசை ஆளுமை தட்டிய தட்டிற்கு
சமனற்ற போக்கில் ஆடிக்கொண்டிருந்ததது
உடைவது மனமா தடுமாறும் கலமா
வசதியாய் இடியிடித்து வாதமுரைத்தது மழை!
’நலமே விளையும் நம்புக’
சத்தமாய் உச்சரித்தபடி
செத்து விழுந்த பறவையொன்றின் இறகோடு
கர்ம சிரத்தையாய் தன் காதுகுடையலானார்
நன்மொழி போதகர்.
எல்லோரும் எல்லாம் வல்லவனை
புகழ்ந்து பாடியபடியிருக்க
கடமையுணர்ந்து
நீர்புகும் உடைப்பையெல்லாம்
போராடிச் சரிசெய்தான் மாலுமி.
தீவின் கரைதொட்டது கலம்
நிலமுலர்ந்த பொழுதொன்றில்
புதையலும் மெய்ப்பட
பெரிதாய் படையலிட்டனர்
போதகன் போற்றிய கடவுளுக்கு!
சிரித்தபடி நடந்தான்
கரை சேர்த்தவன்.
13 comments:
சூழ்ச்சியில் == சூழ்ச்சியின்
வாழ்த்துகள்!
//
பழமைபேசி said...
சூழ்ச்சியில் == சூழ்ச்சியின்
வாழ்த்துகள்!
//
திருத்திட்டேன். நன்றி ஆசானே!
மாலுமிதான் கடவுள்.
//’நலமே விளையும் நம்புக’
சத்தமாய் உச்சரித்தபடி
செத்து விழுந்த பறவையொன்றின் இறகோடு
கர்ம சிரத்தையாய் தன் காதுகுடையலானார்
நன்மொழி போதகர்.//
அருமைங்க... ரொம்ப நல்லாயிருக்கு.
உங்கள் மற்ற கவிதைகளையும் படித்தேன். எல்லாமே அருமைங்க வாழ்த்துக்கள்.
அருமை கலக்குறிங்க போங்க
////எல்லோரும் எல்லாம் வல்லவனை
புகழ்ந்து பாடியபடியிருக்க
கடமையுணர்ந்து
நீர்புகும் உடைப்பையெல்லாம்
போராடிச் சரிசெய்தான் மாலுமி.////
அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்..
//
Madumitha said...
மாலுமிதான் கடவுள்.
//
ம்ம்ம். நன்றி மது
//
சே.குமார் said...
//’நலமே விளையும் நம்புக’
சத்தமாய் உச்சரித்தபடி
செத்து விழுந்த பறவையொன்றின் இறகோடு
கர்ம சிரத்தையாய் தன் காதுகுடையலானார்
நன்மொழி போதகர்.//
அருமைங்க... ரொம்ப நல்லாயிருக்கு.
உங்கள் மற்ற கவிதைகளையும் படித்தேன். எல்லாமே அருமைங்க வாழ்த்துக்கள்.
//
நன்றி குமார்
//
ம.தி.சுதா said...
////எல்லோரும் எல்லாம் வல்லவனை
புகழ்ந்து பாடியபடியிருக்க
கடமையுணர்ந்து
நீர்புகும் உடைப்பையெல்லாம்
போராடிச் சரிசெய்தான் மாலுமி.////
அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்..
//
நன்றிங்க
//
யாதவன் said...
அருமை கலக்குறிங்க போங்க
//
நன்றி
நிதர்சனமாய் முடிகிற கவிதை...
பொய்கள் ஆரவாரிக்கும் போது, உண்மை இப்படித்தான் சன்னமாக சிரித்துக் கொண்டு போகும்.
வாழ்த்துக்கள்
ரசிக்கவைத்த கவிதை...
ரொம்பா அழகா வார்த்தைகளைக் கோர்த்திருக்கீங்க. பாராட்டுக்கள்
//
சுந்தரா said...
ரசிக்கவைத்த கவிதை...
ரொம்பா அழகா வார்த்தைகளைக் கோர்த்திருக்கீங்க. பாராட்டுக்கள்
//
நன்றிங்க!
Post a Comment