Thursday, October 7, 2010

யாழ் நீ


சிறு மென்விரல் தொடுகை
சந்நாதமெழ பதறினள்
கடம்பவன தேனீக்கள்
தீண்டலென என்னுயிரும்...

திம்மென்று கனத்தது நெஞ்சம்
எத்தனை திங்கள் கழித்திருந்தாள்
சுரமொழி மௌனியாய்...

நாண்கள் ஒவ்வொன்றாய்
இழுத்து மீட்ட உருப்பெற்றது
சிதிலமான கலைப்பொருள்
நிமிடத்தில் இசைப்பொருளாய்...

உயிர்பெற்றவள் ஆன்மத்தீண்டல்
தேனமிர்தத் திரட்டலாய்
செவியிறங்கி இதயம்வரைக்கும்
நிரம்பி வழிந்தது நாதம்
பெருமழையாய்...

11 comments:

கமலேஷ் said...

கானம்...ராஜ கானம்....

ரொம்ப நல்லா வந்திருக்கு...

///சிறு மென்விரல் தொடுகை
சந்நாதமெழ பதறினள்
கடம்பவன தேனீக்கள்
தீண்டலென என்னுயிரும்///

வந்தேரியதை சேர்ந்தனைத்திருப்பது அழகு.

கார்க்கிபவா said...

எனக்காக தமிழ்ல ஒரு கவிதை எழுதுங்களேன்

சுசி said...

நாங்களும் கொஞ்சம் நனைஞ்சுக்கறோம்.. :))

Madumitha said...

வாசிக்கையில் கண்களுக்கும்
இனிக்கிறது தேன் கவிதை.

கயல் said...

//
கமலேஷ் said...
கானம்...ராஜ கானம்....

ரொம்ப நல்லா வந்திருக்கு...

///சிறு மென்விரல் தொடுகை
சந்நாதமெழ பதறினள்
கடம்பவன தேனீக்கள்
தீண்டலென என்னுயிரும்///

வந்தேரியதை சேர்ந்தனைத்திருப்பது அழகு.

//
நன்றி கமலேஷ்!

கயல் said...

//
கார்க்கி said...
எனக்காக தமிழ்ல ஒரு கவிதை எழுதுங்களேன்
//
அடடா! இப்படி வேண்டி விரும்பி கேக்கறீங்களே! ஆனந்தக் கண்ணீர் .... நம்மளயும் மதிச்சு...
:((

கயல் said...

//
சுசி said...
நாங்களும் கொஞ்சம் நனைஞ்சுக்கறோம்.. :))
//
நன்றி சுசி!

கயல் said...

//
Madumitha said...
வாசிக்கையில் கண்களுக்கும்
இனிக்கிறது தேன் கவிதை.
//

தாங்கள் ரசனைக்கு நன்றி மது!

நாமக்கல் சிபி said...

அருமை கலைப்பொருள் இசைப் பொருள் ஆன கணம்!

கயல் said...

//
என்.ஆர்.சிபி said...
அருமை கலைப்பொருள் இசைப் பொருள் ஆன கணம்!
//

நன்றி அண்ணா!

sundar said...

"தேனமிர்தத் திரட்டலாய்
செவியிறங்கி இதயம்வரைக்கும்
நிரம்பி வழிந்தது நாதம் "

பின்றீங்களேப்பா !!

நல்லா இருக்கு

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!